கச்சா எண்ணெய் விலை உயர்வை நிறுத்திய கொரோனா: தேர்தலுக்குப் பிறகு நிலை என்ன?

இந்தியா, பிரேசில் மற்றும் சில முக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட் -19 தொற்று பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய் தேவை பார்வையை எதிர்மறையாக பாதித்துள்ளன.

coronavirus surge halts crude oil price rally, Indian oil marketing corporations, கொரோனா வைரஸ், எண்ணெய் நிறுவனங்கள், கோவிட் 19, அமெரிக்கா, சீனா, பிரேசில், கச்சா எண்ணெய் விலை உயர்வை தடுத்து நிறுத்திய கொரோனா, omc likely to hike price, covid 19, india, america, china, brazil

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெயின் விலையில் ஒரு வாரமாக நீடித்த விலை உயர்வு திங்கள்கிழமை பீப்பாய்க்கு 0.5 சதவீதம் குறைந்து 66.5 டாலராக இருந்தது.

அமெரிக்கா மற்றும் சீன பொருளாதாரங்கள் பொருளாதார மீட்சிக்கான சமிஞைகளை காட்டத் தொடங்கியதால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏப்ரல் 5ம் தேதி 62.15 டாலரிலிருந்து ஏப்ரல் 15ம் தேதி ஒரு பீப்பாய்க்கு 67 டாலராக உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய போக்கு மற்றும் இந்தியாவில் அதன் தாக்கத்தை பார்ப்போம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு என்ன காரணம்?

அமெரிக்காவில் புதிய அரசாங்க தகவல்கள் வேலையின்மை குரல்கள் மற்றும் சில்லறை விற்பனையை அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகின்றன. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சீனா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மையை எழுப்பியதால், அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் விலைகளை உயர்த்த உதவியது.

நிலையான விலை உயர்வை தடுப்பது என்ன?

இந்தியா, பிரேசில் மற்றும் சில முக்கிய ஐரோப்பிய நாடுகளில் கோவிட் – 19 தொற்று அதிகரிப்பு கச்சா எண்ணெய் தேவை பார்வையை எதிர்மறையாக பாதித்துள்ளன. அதிக கச்சா எண்ணெய் விலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா கடலுக்கு அடியில் இருந்து எண்ணெய் எடுக்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது என்பது கச்சா எண்ணெய் விலையில் நீடித்த உயர்வை நிறுத்துவதற்கு பங்களித்தது. இந்தியாவில் கோவிட் -19 புதிய தொற்றுகள் திங்கள்கிழமை 2,73,810 என்ற உச்சத்தை எட்டியது.

இது இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது?

அதிகமான கச்சா எண்ணெய் விலைகள் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி விலையை உயர்த்துவதோடு, கடந்த பிப்ரவரி இறுதியில்இருந்து மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தலை சந்தித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுதும் நிறுவனங்களின் (ஓ.எம்.சி) சந்தைப்படுத்துதலில் வருமானத்தை பாதிக்கின்றன.

பிப்ரவரி 27 முதல் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நான்கு முறை மட்டுமே மாற்றி அமைத்துள்ளன. கச்சா எண்ணெயின் விலை அதிக ஏற்ற இறக்கத்தைக் கண்டபோதும், மார்ச் 8ம் தேதி பீப்பாய்க்கு 70 டாலராக உயர்ந்துள்ள நிலையில், இரு பெட்ரோலிய பொருட்களின் விலையையும் லிட்டருக்கு 75 பைசா குறைத்துள்ளது. கச்சா எண்ணெய் விலை மார்ச் 23ம் தேதி 61 டாலருக்கு கீழே விழுந்தது.

எப்படியிருந்தாலும், 2020ம் ஆண்டில் வாகன எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்ட மத்திய வரிகளில் மத்திய அரசு கூர்மையான வரி உயர்வைக் கடைப்பிடிப்பதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்தியாவில் தொடர்ந்து மிக அதிக அளவிலேயே உள்ளன. தேசிய தலைநகரில் திங்கள்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.4 என்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.80.73 ஆகவும் இருந்தது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை தேர்தல் முடிந்தவுடன் தங்கள் சந்தைப்படுத்தல் வரம்புகளை இயல்பு நிலைகளுக்கு மீட்டெடுக்கலாம். தேர்தல் காலத்தில் குறைவான சந்தைப்படுத்தலால் ஏற்பட்ட வருவாயை ஈடுசெய்ய நுகர்வோருக்கு கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் எதிர்கால வீழ்ச்சியின் நன்மைகளை வழங்குவதில்கூட மெதுவாக இருக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus surge halts crude oil price rally indian oil marketing corporations likely to hike price

Next Story
கொரோனா 2-வது அலை: உ.பி-யை கடுமையாகத் தாக்கியது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com