Advertisment

கொரோனா தொற்று உள்ளதா?. இந்த 5 நடைமுறைகளின் மூலம் எளிதாக அறியலாம்...

Corona virus detection : மிக்ஸ் உடன் மனித உடலில் உள்ள சாதாரண ஜீன் (RNase P) சேர்க்கப்படுகிறது. இது உண்மையான மாதிரியை தான் எடுத்துள்ளோமா, அதிலிருந்து ஆர்என்ஏ பிரித்து எடுக்கப்பட்டதா என்பதை கண்டறிய உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus test, covid-19 lab test, how coronavirus test is done, coronavirus test process explained

coronavirus test, covid-19 lab test, how coronavirus test is done, coronavirus test process explained

கொரோனா வைரஸ் பீதி தற்போது சிறிது சிறிதாக தமிழகத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த தொற்று உள்ளதா?, இருந்தால் எவ்வாறு கண்டறிவது குறித்து எளிய நடையில் நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு விளக்குகிறார்

Advertisment

பெங்களூருவில் உள்ள National Institute of Mental Health and Neurosciences (NIMHANS) நியூரோவைராலஜி துறையின் தலைவரும், மூத்த பேராசிரியருமான டாக்டர் வி.ரவி..

வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் வழிமுறைகள்

சேகரித்தல் மற்றும் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லுதல்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர் என்று சந்தேகிப்பவரிடமிருந்து எச்சில், தொண்டைக்குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி உள்ளிட்டவைகளை, சரிவிகித உப்பு, ஆல்புமின் உள்ள மீடியத்தின் மூலம், சோதனை ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். எச்சில் உள்ளிட்ட மாதிரிகளில் உள்ள வைரஸ்கள் சிதைந்துவிடாமல் இருக்க இந்த ஆல்புமின் உப்பு மீடியம் துணைபுரியும்.

வைரல் ஆர்என்ஏவை பிரித்தெடுத்தல்

SARS-CoV ( சீனாவில் 2002-03ம் ஆண்டுகளில் ஏற்பட்டது), MERS-CoV ( சவுதி அரேபியாவில் 2012 ஏற்பட்டது), இவைகள் போலவே, தற்போது கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட் -19 வைரசும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வைரசின் ஜீனோம்களில், மிக நீண்ட அளவில், ஒற்றை இழையிலான ஆர்என்ஏ உள்ளது. வேதிப்பொருட்களை பயன்படுத்தி வைரசின் மாதிரிகளிலிருந்து இந்த ஆர்என்ஏவை பிரித்தெடுக்க வேண்டும். (இந்த சோதனைக்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களை QIAGEN போன்ற நிறுவனங்கள் தயாரித்து வர்த்தகம் செய்கின்றன.)

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ஆர்என்ஏவை சோதனைக்கு உட்படுத்துதல்

தனியே பிரித்து எடுக்கப்பட்ட ஆர்என்ஏவை, பாலிமரைஸ் தொடர் வினைகளுக்கு polymerase chain reaction (PCR உட்படுத்த வேண்டும். இந்த மாஸ்டர் மிக்ஸில் உள்ள ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ், ஆர்என்ஏவை டிஎன்ஏ ஆக மாற்றும். டேக் பாலிமரேஸ் என்சைம், டிஎன்ஏ, நியூக்ளியோடைடுகள், மெக்னீசியம் உள்ளிட்டவைகளை பன்மடங்கு பெருகச்செய்யும்.

இந்த மாஸ்டர் மிக்ஸில், பிரைமர்ஸ் மற்றும் புரோப்ஸ் உள்ளன. பிரைமர்கள் ஒத்த பண்புடைய டிஎன்ஏக்களுடன் இணைந்து அதை பல்கிப்பெருக செய்யும். புரோப்கள், டிஎன்ஏ சாம்பிள்களில் உள்ள குறிப்பிட்ட செக்மெண்ட்களை கண்காணிக்க உதவும். இந்த கோவிட் - 19 தொற்றை கண்டறியும் நோக்கில், உலக சுகாதார நிறுவனம் சில குறிப்பிட்ட பிரைமர் மற்றும் புரோப்களை பரிந்துரைத்துள்ளது.

நிறைவாக, இந்த மிக்ஸ் உடன் மனித உடலில் உள்ள சாதாரண ஜீன் (RNase P) சேர்க்கப்படுகிறது. இது உண்மையான மாதிரியை தான் எடுத்துள்ளோமா, அதிலிருந்து ஆர்என்ஏ பிரித்து எடுக்கப்பட்டதா என்பதை கண்டறிய உதவுகிறது.

வைரல் டிஎன்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்

பிசிஆர் மிக்ஸில் கலக்கப்பட்ட மாதிரியை, தெர்மல் சைக்கிளர் மெஷினில் செலுத்தி பிசிஆர் செயல்பாட்டை துவக்க வேண்டும்.

முதலில், மாதிரியில் உள்ள ஆர்என்ஏக்கள் டிஎன்ஏக்களாக மாறும். இதன்பின்னர், ஜீன்களின் படியாக்கல் நிகழும். தெர்மல் சைக்கிளர் மெஷினால் வெப்பம் அதிகரிக்கப்பட்ட மாதிரியின் வெப்பம் குறைக்கப்பட்டு குளிர்விக்கப்படும். இது 3 வித வெப்பநிலைகளில் நிகழ்த்தப்படும். டிஎன்ஏ உருகி இரட்டை இழைகளாக பிரியும். பின் அந்த டிஎன்ஏ உடன் பிரைமர் இணையும். இதன்மூலம், புதிய இழை உருவாகும். தெர்மல் சைக்கிளர் 30 முதல் 40 வரையிலான சுற்றுக்களை தொடர்ந்து டிஎன்ஏக்களின் எண்ணிக்கை பல்கிப்பெருகி அதில் வைரஸ் உள்ளதா என்று பரிசோதிக்கப்படும்.

மாதிரிகளுடன் சோதனை

டிஎன்ஏ படியாக்கலுக்கு பிறகு, அதனை வைரஸ் உள்ள பிளாஸ்மிட்களுடன் இணைத்து அதனை பாசிட்டிவ் கண்ட்ரோல் ஆகவும், வைரஸ் இல்லாத சாம்பிள்களை நெகட்டிவ் கண்ட்ரோலாகவும் வைத்து சோதனை செய்ய வேண்டும்.

RNase P ஜீன், பாசிட்டிவ் பாசிட்டிவ் ஆகவே இருப்பதையும், நெகட்டிவ், நெகட்டிவ் ஆக இருப்பதையும் உறுதி செய்யும். இந்த சாம்பிள், பிசிஆர் சோதனையில், பாசிட்டிவ் ஆக இல்லாத பட்சத்தில், SARS-CoV-2 virus RNA நெகட்டிவ் என அறிவிக்கப்படும். பிசிஆர் ரிசல்ட் பாசிட்டிவ் ஆக இருக்கும்பட்சத்தில், கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment