கொரோனா வைரஸ் டெஸ்ட் : அரசு வழிகாட்டுதல்கள் என்ன சொல்கின்றன?

கண்மூடித்தனமான சோதனையைத் தவிர்க்கவும், அச்சத்தைக் குறைக்கவும், வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தவும், இந்த ஆவணம் முயல்கிறது.

By: Published: March 21, 2020, 6:15:44 PM

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கான வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்ளூர் அளவிலான  கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் இல்லை என்ற அடிப்படையில் இந்த ஆவணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தயாரித்துள்ளது.

“ஒருவேளை உள்ளூர் அளவிலான கொரோனா வைரஸ்  பரிமாற்றம் ஆவணப்படுத்தப்பட்டால், […] சோதனை யுக்திகளிலும் மாற்றம் செய்யப்படவேண்டும்” என்றும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

தனியார் ஆய்வகங்கள்,தேவைப்படும் அனைத்து நபர்களுக்கும் கொரோனா வைரஸ் சோதனை இலவசமாக வழங்கப்படும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியா திரும்பிய மக்கள், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளைக் காட்டவில்லை என்றாலும் (காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை),  அவர்கள் கட்டாயமாக:

  • – 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள  வேண்டும்
  • –  அறிகுறிகளாக மாறினால் மட்டுமே சோதிக்கப்பட வேண்டும்.
  •  கொரோனா வைரஸ் பாசிடிவாக வந்தால், தனிமைப்படுத்தப்பட்டு நிலையான நெறிமுறையின்படி சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட மக்களோடு தொடர்பு கொண்டவர்களாக இருந்தால்:

  • – 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள  வேண்டும்
  • அறிகுறியாக மாறினால் மட்டுமே சோதிக்கப்பட வேண்டும்
  • கொரோனா வைரஸ் பாசிடிவாக வந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிலையான நெறிமுறையின்படி சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

சுவாசக் கோளாறுகளை நிர்வகிக்கும் சுகாதாரப் பணியாளர்கள், ஏதேனும் அறிகுறிகளை வெளிபடுத்தினால்  சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுளது .

கொரோனா வைரஸ் சோதனையை மேற்கொள்ளும் தனியார் துறை ஆய்வகங்களுக்கான வழிகாட்டுதல்கள்

கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக வழங்குமாறு ஐ.சி.எம்.ஆர் தனியார் ஆய்வகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தகுதிவாய்ந்த மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் போது மட்டுமே கொரோனா வைரஸ் ஆய்வக சோதனை செய்யப்பட  வேண்டும்.

தனியார் ஆய்வக சோதனைக்காக ஐ.சி.எம்.ஆர் வெளியிடும்  இயக்க நெறிமுறைகளை பின்பற்றவேண்டும்.

சந்தேகத்திற்கிடமான நோயாளியிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கும் போது பொருத்தமான உயிர் பாதுகாப்பு (Biosafety) முன்னெச்சரிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து தனியார் சோதனை ஆய்வகங்களும், ஐடிஎஸ்பி  மாநில அதிகாரிக்கும் (இந்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம்) ஐசிஎம்ஆர் தலைமையகத்திற்கும் உடனடி நிகழ்நேர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

வழிகாட்டுதல்களின் நோக்கம் என்ன? 

சமூக அளவிலான தொற்றைக் கட்டுபடுத்த அதிக அளவிலான சோதனை தேவைப்படுகிறது. இருப்பினும்,  கண்மூடித்தனமான சோதனையைத் தவிர்க்கவும், அச்சத்தைக் குறைக்கவும், வளங்களை உகந்த முறையில் பயன்படுத்தவும், இந்த ஆவணம் முயல்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus testing guidelines coronavirus updates india coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X