இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் எவை?

Coronavirus vaccination mixing and matching shots Countries இது, ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவின் கலவையை இரண்டு டோஸ்களுக்கு இடையில் குறைந்தது 28 நாட்கள் இடைவெளியில் அனுமதிக்கிறது.

Coronavirus vaccination mixing and matching shots Countries Tamil News
Coronavirus vaccination mixing and matching shots Countries Tamil News

Coronavirus vaccination mixing and matching shots Countries Tamil News : விநியோகத் தாமதங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் ஆகியவற்றின் மத்தியில், அதிக எண்ணிக்கையிலான நாடுகள் வெவ்வேறு கோவிட் -19 தடுப்பூசிகளை இரண்டாவது அளவுகளுக்கு மாற்றுவதைப் பார்க்கின்றன. கோவிட் -19 தடுப்பூசிகளை மாற்றுவதன் செயல்திறனை சோதிக்கப் பல மருத்துவ ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அத்தகைய தீர்வை கொண்டுள்ள அல்லது ஏற்றுக்கொள்ள முடிவு செய்த நாடுகளின் பட்டியல்.

கனடா

* அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதல் டோஸை ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளின் இரண்டாவது ஷாட் மூலம் கலந்து கனடா பரிந்துரைக்கும் என்று சிபிசி செய்தி கடந்த ஜூன் 1 அன்று தெரிவித்துள்ளது. நோய்த்தடுப்புக்கான நாட்டின் தேசிய ஆலோசனைக் குழு, முதல் டோஸ்ஸில் மாடர்னா அல்லது ஃபைசர் எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது ஷாட்டாக ஏதாவது ஒன்றை செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறது.

சீனா

* ஏப்ரல் மாதத்தில், சீன ஆராய்ச்சியாளர்கள் மருத்துவ சோதனை பதிவு தரவுகளின்படி, கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் சோங்கிங் ஜீஃபி உயிரியல் தயாரிப்புகளின் ஒரு யூனிட் உருவாக்கிய COVID-19 தடுப்பூசி அளவுகளைக் கலக்க சோதனை செய்தனர்.

* பல்வேறு தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட தடுப்பூசி அளவுகளை அவற்றின் செயல்திறனை அதிகரிப்பதற்காக “முறையாகப் பரிசீலித்து வருகிறோம்” என்று சீனாவின் உயர்மட்ட நோய் கட்டுப்பாட்டு அதிகாரி கடந்த ஏப்ரல் 12 ம் தேதி கூறினார்.

பின்லாந்து

* அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியின் முதல் டோஸை பெட்ரா 65 வயதிற்குக் குறைவானவர்கள், தங்கள் இரண்டாவது டோஸுக்கு வேறு ஷாட் பெறக்கூடும் என்று பின்லாந்தின் உடல்நலம் மற்றும் நலவாழ்வு நிறுவனம் கடந்த ஏப்ரல் 14 -ம் தேதி கூறியது.

பிரான்ஸ்

* 55 வயதிற்குப்பட்டவர்கள் முதலில் அஸ்ட்ராஜெனெகா செலுத்தப்பட்டவர்கள் பிறகு, மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசி என்று அழைக்கப்படும் இரண்டாவது மருந்தைப் பெற வேண்டும். இருப்பினும் சோதனைகளில் டோஸ் கலவை இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரான்சின் உயர்மட்ட சுகாதார ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது.

நார்வே

* ஏப்ரல் 23-ம் தேதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் அளவைப் பெற்றவர்களுக்கு எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி போடப்படும் என்று நார்வே தெரிவித்துள்ளது.

ரஷியா

* அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளை இணைக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும் நாட்டிற்கு, ரஷ்யா ஒப்புதலை நிறுத்தியது. சுகாதார அமைச்சகத்தின் நெறிமுறைக் குழு கூடுதல் தரவுகளைக் கோரிய பின்னர், அஸ்ட்ராஜெனெகா அதிகாரி மே 28 அன்று ராய்ட்டர்ஸிடம் இவ்வாறு தெரிவித்தார்.

தென் கொரியா

* தென் கொரியா கடந்த மே 20 அன்று, ஃபைசர் மற்றும் பிற மருந்து தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா அளவுகளைக் கலந்து, தனிப்பட்ட வகையில் சோதனையை நடத்தும் என்று கூறியது.

ஸ்பெயின்

* அஸ்ட்ராஜெனெகா ஷாட் பெற்ற 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, அஸ்ட்ராஜெனெகா அல்லது ஃபைசரின் தடுப்பூசியின் இரண்டாவது அளவைப் பெற நாடு அனுமதிக்கும் என்று ஸ்பெயினின் சுகாதார அமைச்சர் கரோலினா டாரியாஸ் கடந்த மே 19 அன்று கூறினார். இந்த முடிவு, மாநில ஆதரவுடைய கார்லோஸ் III ஹெல்த் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வின் ஆரம்ப முடிவுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டது. இது ஃபைசர் ஷாட், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பின்தொடர்வது பாதுகாப்பானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் கண்டறிந்தது.

ஸ்வீடன்

* ஸ்வீடனின் சுகாதார நிறுவனம் கடந்த ஏப்ரல் 20 அன்று, 65 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியின் ஒரு ஷாட் செலுத்திக்கொண்டவர்களுக்கு, அவர்களின் இரண்டாவது டோஸுக்கு வேறு தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியது.

பிரிட்டன்

* பிரிட்டன், ஜனவரி மாதம் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டாவது டோஸுக்கு வேறு தடுப்பூசி கொடுக்க அனுமதிக்கும் என்று கூறியது, எடுத்துக்காட்டாக, முதல் தடுப்பூசி கையிருப்பில் இல்லாவிட்டால், மாற்று ஊசி செலுத்தப்படும்.

* மே 12 அன்று வெளியிடப்பட்ட ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தலைமையிலான ஆய்வின் முதல் கண்டுபிடிப்புகள், ஃபைசரின் தடுப்பூசியைப் பெற்றவர்கள், அதன்பிறகு அஸ்ட்ராஜெனெகா, அல்லது அதற்கு நேர்மாறாக இருக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டால், இரண்டு ஒரே டோஸ்கள் செலுத்திக்கொண்டபிறகு அவர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் அறிகுறிகளைவிட லேசான அல்லது மிதமான அறிகுறிகளைப் புகாரளிக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறியது.

* நோவாவாக்ஸ் மே 21 அன்று ஒரு கலவையான மற்றும் பொருந்தக்கூடிய COVID-19 தடுப்பூசி சோதனையில் பங்கேற்கும் என்று கூறியது. இது, கூடுதல் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதல் தடுப்பூசி அளவை பூஸ்டராகப் பயன்படுத்துவதை சோதிக்க உதவும். இந்த ட்ரையல் ஜூன் மாதம் பிரிட்டனில் தொடங்கும்.

அமெரிக்கா

* ஜனவரி மாதம், சி.என்.பி.சி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) அதன் வழிகாட்டலைப் புதுப்பித்திருப்பதாக அறிவித்தது. இது, ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னாவின் கலவையை இரண்டு டோஸ்களுக்கு இடையில் குறைந்தது 28 நாட்கள் இடைவெளியில் அனுமதிக்கிறது. அதுவும், “விதிவிலக்கான சூழ்நிலைகளில் ”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus vaccination mixing and matching shots countries tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com