18+ கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்

மத்திய அரசு 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பம் இருந்தால், முன்பதிவு செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

Co-win Vaccine Online Registration Guidance in Tamil : கொரோனா வைரஸ் இந்தியாவில் பன்மடங்கு பெருகி வரும் நிலையில், மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு 18 வயதுக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பம் இருந்தால், முன்பதிவு செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

18-44 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசிக்கு எப்போது பதிவு செய்யலாம்? எங்கே பதிவு செய்ய வேண்டும்?

18-44 வயதுக்குட்பட்டவர்கள் ஏப்ரல் 28 மாலை 4 முதல் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு http://www.cowin.gov.in இணைப்பைப் பயன்படுத்தி நீங்கள் கோ-வின் போர்ட்டலில் உள்நுழைந்து, கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்ய “பதிவுசெய்க / உள்நுழைக” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இல்லையென்றால், நீங்கள் ஆரோக்ய சேது செயலி மூலம் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம்.

தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு ஏப்ரல் 28 முதல் பதிவு செய்யலாமா?

தடுப்பூசி முன்பதிவுக்கு மட்டுமே இணைப்பு திறந்திருக்கும். தடுப்பூசி உறுதிப்படுத்துதல் அல்லது திட்டமிடல் மே 1-ம் தேதி முதல் தொடங்கும்.

முன்பதிவு இல்லாமல் தடுப்பூசி பெற முடியுமா?

18 முதல் 44 வயதுடைய குடிமக்கள் கட்டாயமாக தடுப்பூசிக்கு பதிவு செய்து, தடுப்பூசிக்கு முன் ஆன்லைனில் நியமனங்களை உறுதிப்படுத்த வேண்டும் என அரசாங்கம் கூறுகிறது. 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் பதிவு தற்போது அனுமதிக்கப்படவில்லை.

மே 1 க்குப் பிறகு கிடைக்குமா?

மே 1 முதல், மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மொத்த சந்தைகளில் 50 சதவீதத்தையும் எஞ்சியதை திறந்த சந்தையில் இருந்து நேரடியாக வாங்கும். அப்போது நியமனங்கள் கிடைப்பது, தடுப்பூசி அளவுகளின் இருப்புத் தன்மையைப் பொறுத்து உறுதி செய்யப்படும். மேலும், குறைந்த அளவு தடுப்பூசி இருப்பு காரணமாக, பல மாநிலங்கள் 18 முதல் 44 வயதுக்குள் உள்ள முன்னுரிமைக் குழுக்களுக்கே தடுப்பூசி செலுத்த முற்படும்.

பதிவு கட்டணம் ஏதேனும் உள்ளதா?

பதிவு கட்டணம் இல்லை.

ஒரு மொபைல் எண் மூலம் கோ-வின் போர்ட்டலில் எத்தனை பேர் வரை பதிவு செய்யலாம்?

ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தடுப்பூசி போட 4 பேர் வரை பதிவு செய்யலாம்.

ஆதார் அட்டை இல்லாமல் தடுப்பூசிக்கு பதிவு செய்யலாமா?

கோ-வின் போர்ட்டலில் ஆதார் அட்டை இல்லாமலும், வேறு சில ஆவணங்களை வைத்து பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, கடவுச்சீட்டு, ஓய்வூதிய பாஸ் புக், என்.பி.ஆர் ஸ்மார்ட் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளும் தகுந்த் ஆவண்ங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி இலவசமா?

தற்போது, ​​அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றும் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது மே 1 முதல் நிறுத்தப்படும், மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்த நேரிடலாம்.18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு, பணம் செலுத்துதல் தொடர்பான கொள்கையை மாநிலங்கள் அறிவிக்கும். பெரும்பாலான மாநிலங்கள் இதை அரசு மையங்களில் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், தனியார் தடுப்பூசி தளங்களில், அதற்கான செலவினத் தொகை கட்டணமாக தனியார் மருத்துவமனைகளால் தீர்மானிக்கப்படும். முன்பதிவு செய்யும் நேரத்தில் ஒவ்வொரு தடுப்பூசியின் விலையையும் நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

தடுப்பூசியின் விலையை அறிந்துக் கொள்ள இயலுமா?

தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிடும் போது, தடுப்பூசி மையத்தின் பெயருக்குக் கீழே உள்ள தடுப்பூசியின் விலையை மே 1 முதல் கோ-வின் போர்ட்டலில் தெரிந்துக் கொள்ளலாம

நான் தடுப்பூசி தேர்வு செய்யலாமா?

ஆம். நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை நிர்ணயிக்கும் நேரத்தில் ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் தடுப்பூசி நிர்வகிக்கப்படுவதை கணினி காண்பிக்கும். நிர்வகிக்கப்படும் தடுப்பூசி தேர்வுக்கு ஏற்ப, தடுப்பூசி மையத்தை தேர்வு செய்யலாம், இருப்பினும், அரசு மையங்களில் இந்த வசதி கிடையாது.

நான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தால், நான் தடுப்பூசியை எப்போது பெற முடியும்?

கொரோனா நோயாளிகள் தடுப்பூசியை நோயிலிருந்து மீண்ட நான்கு முதல் எட்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். மேலும், கொரோனாச்அறிகுறிகளைக் கொண்ட நபர்கள், SARS-Cov-2 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அல்லது பிளாஸ்மா பெறப்பட்ட கொரோனா நோயாளிகள் மற்றும் தீவிர உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையுடன் இருப்பவர்களும் 4 முதல் 8 வாரங்களுக்கு பிறகு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamilச்

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus vaccination registration cowin aarogya setu app

Next Story
ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடு எது? SIPRI அறிக்கை கூறுவது என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com