Advertisment

கொரோனா வைரஸ் தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு, மாடர்னா பல்கலைக்கழக ஆய்வில் முன்னேற்றம்

சோதனை முடிவுகள் தடுப்பூசி 14 நாட்களுக்குப் பிறகு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளைத் தூண்டுகிறது என்பதைக் காட்டுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரஸ் தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு, மாடர்னா பல்கலைக்கழக ஆய்வில் முன்னேற்றம்

கோவிட் -19க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில், புதன்கிழமை இரண்டு விண்ணப்பதாரர்கள் பற்றி உற்சாகமளிக்கும் செய்திகள் வெளிவந்துள்ளன. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஒரு இடைக்கால ஆய்வை வெளியிட்டது. அது ஒரு விண்ணப்பதாரரின் தடுப்பூசிக்கான முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பாளர்களிடமிருந்து உருவாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை விவரிக்கிறது. இந்த தடுப்பூசி அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயோடெக் நிறுவனமான மாடர்னாவால் உருவாக்கப்பட்டது. இதனிடையே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மற்றொரு விண்ணப்பதாரரின் தடுப்பூசியின் ஆரம்ப சோதனைகளில் வியாழக்கிழமைக்குள் சாதகமான செய்திகள் வெளியாகலாம் என்று ஐடிவி தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த இரண்டு விண்ணப்பதாரர்களுடைய தடுப்பூசி என்ன?

கோவிட்-19 க்கு எதிராக விண்ணப்பதாரரின் தடுப்பூசிக்கு மனித பரிசோதனையைத் தொடங்கிய முதல் நிறுவனம் மாடர்னா ஆகும். எம்.ஆர்.என்.ஏ -1273 என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி மார்ச் 16ம் தேதி முதல் கட்ட சோதனைகளுக்குச் சென்றது. தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதில் வைரஸை எதிர்த்துப் போராட புரதங்களை உருவாக்குவதற்கு மனித செல்களுக்குள் மரபணு வழிமுறைகளை செலுத்துவது அடங்கும். மாடர்னா ஜூலை 27ம் தேதி 3ம் கட்ட பரிசோதனையை தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன், அதனுடைய முதல் கட்ட பரிசோதனை விவரங்கள் வந்துள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதன் விண்ணப்பதாரரின் தடுப்பூசி ChAdOx1 nCoV-19ஐ உலகளாவிய உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து உருவாக்கியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு இது ஒரு SARS-CoV-2 புரதத்தை வழங்குகிறது. தடுப்பூசி ஏற்கனவே மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு சென்றுவிட்டது, ஆனால் கட்டம் I இன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மனித மருத்துவ பரிசோதனைகளின் போது, ​​மூன்று அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன:

எதிர்வினைத் தன்மை (Reactogenicity) (பொதுவான, பாதகமான எதிர்விளைவுகளை உருவாக்கும் திறன்), நோய் எதிர்ப்புத் திறன் தன்மை (Immunogenicity) (நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன்) மற்றும் பாதுகாப்பு (Safety) ஆகிய 3 அம்சங்கள் மதிப்பிடப்படுகின்றன.

மாடர்னா விண்ணப்பதாரரின் தடுப்பூசி மீதான முதல் கட்ட சோதனை முடிவுகள் என்றால் என்ன?

சோதனையில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு பதில் இருப்பதாக இடைக்கால பகுப்பாய்வு கண்டறிந்தது. முதல் கட்டத்தில், 15 பங்கேற்பாளர்கள் 25 மைக்ரோகிராம் குறைந்த அளவைப் பெற்றனர். 15 பேர் 100 மைக்ரோகிராம் நடுத்தர அளவைப் பெற்றனர், மேலும் 15 பேர் 250 மைக்ரோகிராம் அதிக அளவைப் பெற்றனர். ஒரு மாத இடைவெளியில் இரண்டு முறை வழங்கப்பட்டன.

இரண்டாவது தடுப்பூசியில், குறிப்பாக 250 மைக்ரோகிராம் அளிக்கப்பட்ட குழுவில், அதிக எதிர்வினை தொடர்ந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மதிப்பிடப்பட்ட மூன்று அளவுகளில், 100-மைக்ரோகிராம் டோஸ் உயர் நடுநிலைப்படுத்தல் பதில்கள் மற்றும் டி செல் எதிர்வினைகளை வெளிப்படுத்தியது. இது ஒரு எதிர்வினை விவரத்துடன் இணைந்து அதிக அளவை விட சாதகமாக இருக்கிறது. மூன்றாம் கட்டத்தில், பங்கேற்பாளர்களுக்கு 100-மைக்ரோகிராம் டோஸ் வழங்கப்படும்.

பக்க விளைவுகள் இருந்ததா?

ஆய்வில், சோர்வு, சளி, தலைவலி, உடல்வலி, மற்றும் ஊசி போடப்பட்ட இடத்தில் வலி ஆகியவை சோதனையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களில் பதிவாகியுள்ளன. இரண்டு டோஸ் தொடர் தடுப்பூசியானது பொதுவாக தீவிர நச்சுத்தன்மை இல்லாமல் இருந்தது என்று அது கூறியது. முதல் தடுப்பூசிக்குப் பிறகு முறையான பாதகமான நிகழ்வுகள், அனைத்தும் தரப்படுத்தப்பட்ட லேசான அல்லது மிதமானவை என்று அறிவிக்கப்பட்டன.

“முதல் தடுப்பூசிக்குப் பிறகு, முறையான பாதகமான நிகழ்வுகள் கோரப்பட்டதில், 25 மைக்ரோகிராம் குழுவில் 5 பங்கேற்பாளர்கள் (33%), 100 மைக்ரோகிராம் குழுவில் 10 பங்கேற்பாளர்கள் (67%) மற்றும் 250 மைக்ரோகிராம் குழுவில் 8 பங்கேற்பாளர்கள் (53%) அனைத்துமே லேசானவை அல்லது தீவிரத்தில் மிதமானவை” என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இரண்டாவது தடுப்பூசிக்குப் பிறகு பாதகமான நிகழ்வுகள் மிகவும் பொதுவானவையாக இருந்தன. “அது 25 மைக்ரோகிராம் குழுவில் 13 பங்கேற்பாளர்களில் 7 பேரில் (54%), 100 மைக்ரோகிராம் குழுவில் 15 பேரும், 250 மைக்ரோகிராம் குழுவில் 14 பேரும் 3 பங்கேற்பாளர்களில் (21%) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடுமையான நிகழ்வுகளைப் புகாரளித்தனர்.”

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி விண்ணப்பதாரர் பற்றிய செய்தி என்ன?

“ஆக்ஸ்போர்டு கோவிட்-19 தடுப்பூசியின் ஆரம்ப சோதனைகள் குறித்து விரைவில் (ஒருவேளை நாளை) சாதகமான செய்திகள் வரும் என்று நான் கேள்விப்படுகிறேன். இது அஸ்ட்ராசெனெகா மருந்து நிறுவனத்தால் ஆதரிக்கப்படுகிறது. மேலும், பல மில்லியன் பவுண்டுகள் அரசாங்க பணத்தின் மூலம் ஆதரிக்கப்படுகிறது” என்று ஐடிவியின் அரசியல் பிரிவு ஆசிரியர் ராபர்ட் பெஸ்டன் எழுதியுள்ளார். முதல் தரவு லான்செட்டில் வெளியிடப்பட உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் முதலாம் கட்டத்திற்காக, 1,102 பங்கேற்பாளர்கள் இங்கிலாந்தில் பல ஆய்வுத் தளங்களில் ஆள்சேர்ப்பு செய்யப்பட்டனர். ஆக்ஸ்போர்டு மே 22ம் தேதி, 1,000 நோய்த்தடுப்பு மருந்துகள் நிறைவடைந்துள்ளன என்றும் தற்போது அதன் தொடர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் அறிவித்தது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் ஒரு அறிக்கையில் கூறியதாவது: “மருத்துவ ஆய்வுகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. மேலும், தடுப்பூசி வயதானவர்களில் நோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை எவ்வளவு நன்றாகத் தூண்டுகிறது என்பதை மதிப்பீடு செய்வதற்கும், பரந்த மக்கள் தொகையில் இது பாதுகாப்பை வழங்குமா என்பதை சோதிப்பதற்கும் நாங்கள் இப்போது ஆய்வுகளைத் தொடங்குகிறோம்.” என்று கூறியுள்ளார்.

ஜூன் 27ம் தேதி பிரேசில் ஆக்ஸ்போர்டு விண்ணப்பதாரர் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கியது, 5,000 ஆரோக்கியமான தன்னார்வலர்கள் சேர்க்கைக்கு இலக்கு வைக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்காவிலும் சோதனைகள் நடத்தப்படும்.

ஒரு சோதனையின் முதல் கட்ட கண்டுபிடிப்புகள் எவ்வளவு முக்கியமானவை?

மருத்துவ பரிசோதனையின் முதல் கட்டம் ஒரு தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறனுக்கான சான்றுகளை மட்டுமே வழங்குகிறது. எனவே, அடுத்த கட்டத்தில் நிர்வகிக்க தேவையான சிறந்த டோஸ் எது என்பதற்கான அறிகுறியை இது தருகிறது.

இந்த கட்டத்தில் பதிலளிக்கப்படாத முக்கியமான கேள்வி: ஆன்டிபாடிகள் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க எவ்வளவு காலம் நீடிக்கும்? மேலும், முதல் கட்ட சோதனை ஒரு சிறிய எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது. இரண்டாம் கட்டத்தில், வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான நோய் எதிர்ப்பு நடவடிக்கையில் மாறுபாடு உள்ளதா என்பதைப் பார்க்க பங்கேற்பாளர்களின் வயது வரம்பு விரிவுபடுத்தப்படுகிறது. மூன்றாம் கட்டம், மிகப் பெரிய குழுவை உள்ளடக்கியது. ஒரு பெரிய சமூகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க தடுப்பூசி எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதை ஆராய்கிறது.

மூன்றாம் கட்டத்திற்குள் நுழைந்த பிற தடுப்பூசி விண்ணப்பதாரர்களின் நிலை என்ன?

மாடர்னா விண்ணப்பதாரரின் அதே எம்ஆர்என்ஏ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஃபைசரும் அதன் பிரெஞ்சு பங்குதாரர் பயோஎன்டெக் நிறுவனமும் ஜூலை 1ம் தேதி ஆரம்ப கட்ட சோதனைகளின் இடைக்கால அறிக்கையை அறிவித்தன. இந்த ஆய்வு, சக மதிப்பாய்வு செய்யப்படாத, தடுப்பூசி போட்ட 21 ஆம் தேதி ஆன்டிபாடிகளை நடுநிலையாக்குவதைக் கண்டறிந்தது.

மற்றொரு முக்கிய நிறுவனம் சீன பயோ மருந்து தயாரிப்பு நிறுவனமான சினோவாக் பயோடெக் ஆகும். இது செயலற்ற தடுப்பூசி விண்ணப்பதாரரான பிரேசிலின் புட்டான்டனுடன் கொரோனா தடுப்பூசியை உருவாக்க கூட்டு சேர்ந்துள்ளது. இந்த நிருவனத்தின் 3 கட்ட சோதனைக்கு பிரேசில் தேசிய ஒழுங்குமுறை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த சோதனை பிரேசிலில் 12 இடங்களில் கோவிட்-19 சுகாதார வசதிகளிலிருந்து 9,000 சுகாதார நிபுணர்களை நியமிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட 12 இடங்களில் இருந்து நெறிமுறை ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், இந்த மாதம் பதிவு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 16 முதல் ஜியாங்சு மாகாணத்தில் நடத்தப்பட்ட முதல் மற்றும் 2ம் கட்ட சோதனைகளின் ஆரம்ப முடிவுகளின் அடிப்படையில் பிரேசிலின் ஒப்புதல் வந்தது என்று ஜூன் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. 143 ஆரோக்கியமான தன்னார்வலர்களைக் கொண்ட முதல் கட்டம் அல்லது 600 ஆரோக்கியமான தன்னார்வலர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட சோதனைகளில் எந்தவொரு கடுமையான பாதகமான சம்பவமும் ஏற்படவில்லை என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட மருத்துவ சோதனை முடிவுகள் தடுப்பூசி 14 நாட்களுக்குப் பிறகு நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளைத் தூண்டுகிறது என்பதைக் காட்டுகிறது.

இரண்டாம் கட்ட ஆய்வு அறிக்கை மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ ஆய்வு நெறிமுறையை சீனக் கட்டுப்பாட்டாளருக்கு எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்கள் மருத்துவ பரிசோதனைகள் குறித்த முழு தரவையும் கல்வி வெளியீடுகள் மூலம் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள நிறுவனம் எதிர்பார்க்கிறது” என்று அது கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus China England Brazil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment