கோவிட்-19 தடுப்பூசி நிலவரம்: மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது சீனா

சீன மூத்த சுகாதார அலுவலர் ஒருவர் அரசு தொலைக்காட்சியில், ஜூலை 22 முதல் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தின் கீழ் மக்களுக்கு தடுப்பூசி ஏற்கனவே நிர்வகிக்கப்பட்டு வருவதை தெரிவித்தார்.

By: August 25, 2020, 6:25:49 PM

அனைத்து கட்டாய சோதனை நடைமுறைகளையும் முடிக்காமல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்ததற்காக ரஷ்யா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனா ஏற்கனவே தனது மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசி போடுவது என்பது இன்னும் முன்னேற்றத்தில் உள்ளது. கேள்விக்குரிய தடுப்பூசியை அரசுக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 3ம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீன மூத்த சுகாதார அலுவலர் ஒருவர் அரசு தொலைக்காட்சியில், ஜூலை 22 முதல் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தின் கீழ் மக்களுக்கு தடுப்பூசி ஏற்கனவே போடப்பட்டு வருவதை தெரிவித்தார்.

தி வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான ஒரு செய்தியில், சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி மேம்பாட்டு திட்டத்தின் தலைவரான ஜெங் சோங்வே, ஜூலை 22 முதல் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சில அரசு ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்படுவதாக அரசு தொலைக்காட்சியில் ஒப்புக் கொண்டார். மேலும், இனி வரும் மாதங்களில் அது இன்னும் பல மக்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்ரு தெரிவித்துள்ளது.

“இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் நோய் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, இந்த திட்டத்தில் ஒரு மிதமான விரிவாக்கத்தை நாங்கள் பரிசீலித்து வருகிறோம் … மக்கள்தொகையில் உள்ள சிறப்புக் குழுக்களிடையே முதலில் நோய் எதிர்ப்பு சக்தி தடுப்பை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருக்கும்” என்று ஜெங் கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த தடுப்பூசி சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ வீரர்களுக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட மருந்திலிருந்து வேறுபட்டது. அந்த தடுப்பூசி, இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியுடன் இணைந்து கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கியது. அதற்கு ஜூன் கடைசி வாரத்தில் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்கனவே, அந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை.

எனவே, சினோபார்ம் தடுப்பூசி, பொது மக்களில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் தடுப்பூசி ஆகும். இருப்பினும், இப்போது சிறப்புக் குழுக்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு, நாவல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து அமெரிக்க அரசாங்கத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று பார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தெரிவித்துள்ளது.

பைனான்சியல் டைம்ஸில் ஞாயிற்றுக்கிழமை வெளியான ஒரு செய்தியில், தேர்தலுக்கு முன்னதாக, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு வரும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது.

“சாத்தியம் குறித்து ஊகிப்பது முன்கூட்டியே இருக்கும்” என்று மருந்து நிறுவனத்தின் அறிக்கை பற்றி தி பொலிட்டிகோவில் வெளியான ஒரு செய்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போதைப்பொருள் கட்டுபபட்டாளரும் உணவு போதைப்பொருள் (drug) நிர்வாக அமைப்பு, தனது மறுதேர்தலுகான வாய்புகளை நாசமாக்குவதற்காக நாவல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஒப்புதலை வேண்டுமென்றே தாமதப்படுத்தியதாக டிரம் சனிக்கிழமை குற்றம் சாட்டினார். கடந்த காலத்தில், தேர்தலுக்கு முன்னர் ஒரு தடுப்பூசி சாத்தியமாகும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தேடுதல்; இதுவரை நடந்தவை

மருத்துவ பரிசோதனைக்கு முன் அல்லது மருத்துவ பரிசோதனைகளில் 160 தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் உள்ளனர். அவர்களில் 30 தடுப்பூசி விண்ணப்பதாரர்கள் மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். அவர்களில் 6 தடுப்பூசிகள் இறுதிக் கட்டத்தில் 3-ம் கட்ட மனித பரிசோதனைகளில் உள்ளன. இந்தியாவில் குறைந்தது 8 விண்ணப்பதாரர்கள் தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். அவற்றில் முதல் கட்ட பரிசோதனையை முடிது 2வது கட்ட பரிசோதனைக்கு சென்றுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirus vaccine tracker china has started covid 19 vaccinating to its people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X