கொரோனா வைரஸ் தொற்று ஏன் இந்திய மருந்தியல் துறையை பாதிக்கக்கூடும்?

 Prabha Raghavan N கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்று இப்போது இந்தியாவிலும் நுழைந்திருக்கும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்று பரவலைத் தடுக்க வலுவான, விரைவான செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அதிக மக்கள்தொகை, குறைந்த அளவிலான பொது விழிப்புணர்வு மற்றும் சுகாதார வலையமைப்பில் உள்ள பாதிப்புகள் ஆகியவை நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் வலுவான சவால்களை முன்வைக்கின்றன. அத்தியாவசிய மருந்து தயாரிப்புகள் உட்பட பல தொழில்கள் தயாரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் […]

corona virus wuhan
corona virus wuhan

 Prabha Raghavan

N கொரோனா வைரஸ் (2019-nCoV) தொற்று இப்போது இந்தியாவிலும் நுழைந்திருக்கும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொற்று பரவலைத் தடுக்க வலுவான, விரைவான செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் அதிக மக்கள்தொகை, குறைந்த அளவிலான பொது விழிப்புணர்வு மற்றும் சுகாதார வலையமைப்பில் உள்ள பாதிப்புகள் ஆகியவை நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் வலுவான சவால்களை முன்வைக்கின்றன.

அத்தியாவசிய மருந்து தயாரிப்புகள் உட்பட பல தொழில்கள் தயாரிப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கூறுகளுக்கு சீனாவை பெரிதும் சார்ந்து இருப்பதால் இந்தியாவும் கொரோனா விவகாரத்தில் பாதிக்கப்படும். சீனாவிலிருந்து அதன் இறக்குமதி 2014-15 ஆம் ஆண்டில் 60.41 பில்லியன் டாலர்களிலிருந்து 2017-18 ஆம் ஆண்டில் 76.38 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது 2018-19ல் 70.32 பில்லியன் டாலர்களாகக் குறைந்தது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் இன்னும் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது – இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது.


மற்ற வர்த்தக கூட்டு நாடுகளிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் பல தயாரிப்புகளும் அதிக சீன இருப்பைக் கொண்டுள்ளன. உதாரணமாக, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சி, பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

2003ல் பரவிய சார்ஸ் பாதிப்பின் பாதி எண்ணிக்கையை எட்டிய கொரோனா வைரஸ்

நிலைமை விரைவில் மேம்படவில்லை என்றால், இந்தியாவில் பல தொழில்கள் பாதிக்கப்படும். இறுதியில், இந்திய குடிமக்கள் பாதிக்கப்படலாம்.

மருந்தியல் துறையில் பாதிப்பு

அரசாங்க தரவுகளின்படி, மருந்துகள் தயாரிக்க மொத்தமான Drugs, 2015 மற்றும் 2019 க்கு இடையில் சீனாவிலிருந்தே அதிகம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நிலைமை மேம்படவில்லை எனில் மருந்து துறை மிகக் கடுமையாக பாதிக்கப்படக் கூடிய துறையாக இருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் மருந்துகளை தயாரிக்க இறக்குமதி செய்யப்படும் மொத்த மருந்துகள் மற்றும் இடைநிலைகளில் (மூலப்பொருட்கள்) கிட்டத்தட்ட 70% சீனா வழங்குகிறது. சில 354 மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள் 2017 ல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

சீனாவில் செயல்பாடுகள் நிறுத்தப்படுவது தொடர்ந்தால், பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நொதித்தல் அடிப்படையிலான பொருட்களின் விநியோகம் மிகவும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மொத்த மருந்து ஏற்றுமதிக்கான முக்கிய மையங்கள் வுஹானி மாகாணத்தில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளன. ஆனால் புத்தாண்டு விடுமுறைகள் நீட்டிக்கப்படுவதால், இந்த மையங்களிலிருந்தான மருந்துகள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நிலைமையை “உன்னிப்பாக” கண்காணித்து வருவதாக சில நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான நிறுவனங்கள் 1-3 மாதங்களுக்கு நீடிக்கும் அளவுக்கு இந்த பொருட்களின் இருப்புகளை வைத்துள்ளன. ஆனால் ஆன்டிபயாடிக் மற்றும் வைட்டமின்கள் தயாரிக்க இந்த பொருட்களுக்கு பிற நாடுகளில் “வரையறுக்கப்பட்ட” மாற்று வழிகள் உள்ளன. இருப்பினும், பிற மருந்துகளுக்கு மூலப்பொருட்களை உற்பத்தி செய்ய இந்தியாவுக்கு போதுமான திறன் உள்ளது.

குணால் கம்ராவிற்கு தடை : பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தடை விதிக்கிறது?

நோயாளிகளுக்கு பாதிப்பு

நிலைமை விரைவில் மேம்படவில்லை என்றால், இந்தியாவில் மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை உயரும் என்று தொழில் நிர்வாகிகள் அஞ்சுகின்றனர். விலைக் கட்டுப்பாட்டில் உள்ள தயாரிப்புகளின் விஷயத்தில், வாடிக்கையாளர்கள் செலுத்தும் விலைகள் பாதிக்கப்படக்கூடாது. இருப்பினும், கடந்த காலங்களில், மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய சிகிச்சை பொருட்களின் விலைகள் அதிகரிப்பது நாட்டில் மருந்துகளின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

முந்தைய சந்தர்ப்பங்களில், தொழில்துறை அமைப்புகள் இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க முயன்றன, அவற்றை உற்பத்தி செய்வதற்கான செலவை அவர்களால் மீட்டெடுக்க முடியவில்லை என்று வாதிடுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus virus could hit indian pharma industry

Next Story
2003ல் பரவிய சார்ஸ் பாதிப்பின் பாதி எண்ணிக்கையை எட்டிய கொரோனா வைரஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express