இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் கொரோனா தொற்று பரவல் விகிதம் - இவ்வளவு வித்தியாசமா?.

சமூக விலகல் என்பது யாதெனில், , தொற்று உள்ளவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் சேர்ந்து விவாதிப்பதை தவிர்த்தல். இதன்மூலம், தொற்று பரவல்...

கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த சில நாட்களாக இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் இதன்பாதிப்பு குறைவே ஆகும்.

இந்தியாவில் கடந்த மார்ச் 19ம் தேதி நிலவரப்படி, இந்த வைரஸ் சராசரியாக 1.7 அளவிற்கே மக்களிடையே பரவிவந்தது. ஆனால் இதன் விகிதம் மார்ச் 26ம் தேதிவாக்கில், 1.81 ஆக அதிகரித்தது. ஈரான், இத்தாலி நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று பரவல் மிகக்குறைவுதான் என்று சென்னையில் உள்ள கணித அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சிதாப்ரா சின்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாடுகளை ஒப்பிடும்போது, வைரஸ் தொற்று விகிதம் 2 முதல் 3 என்ற அளவில் உள்ளது.

மார்ச் 26ம் தேதி சின்கா அளித்த நேர்காணலில் சிதாப்ரா சின்கா கூறியதாவது, மார்ச் மாத இறுதிக்குள், இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும். எப்ரல் 5ம் தேதிக்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரிக்கும். நாம் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளாவிட்டால், இதன் எண்ணிக்கை 5 ஆயிரமாக கூட அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவின் மூலமாகவே, நம்மால் இந்த வைரஸின் பாதிப்பை இந்தளவிற்கு கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிகிறது.

30 நாட்கள், ஆறு நாடுகள்

இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவு என்றபோதிலும் கடந்த ஒருமாத கால அளவில், கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து ஆயிரமாக அதிகரித்துள்ளதை நாம் மறந்துவிடமுடியாது. இதேபோன்றதொரு நிலைதான் தென்கொரிய நாட்டிலும் தென்பட்டது. இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வரும்போதிலும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காதது ஒருவிதத்தில் மனநிறைவையே அளிக்கிறது.

தென்கொரியா, ஸ்பெயின், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைவு என்றாலும், சிங்கப்பூரை ஒப்பிடும்போது இந்த தடுப்பு நடவடிக்கைகளில் நாம் பின்தங்கித்தான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று அவர் கூறினார்.
இந்த நாடுகள் அனைத்தும் கொரோனா தொடர்பான சோதனைகளுக்கு தேவையான நிதியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு உலக சுகாதார அமைப்பை சார்ந்துள்ளன. ஆனால், இந்தியா இந்த விவகாரத்தில் தனித்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவும், நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைவதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாரங்கள் அளவிலான சோதனை

இந்தியாவில் ஒவ்வொரு வார கால இடைவெளியிலும் முதல் தேதியிலிருந்து 3 -43 -114 -415-1071- 29ம் தேதி வரையிலான கால அளவில் அதிகரித்துள்ள பாதிப்பு நபர்களின் எண்ணிக்கை ஆகும்

தென்கொரியா = 4 to 23 to 28 to 104 to 1,766 29ம் தேதி நிலவரம்

30ம் தேதி இதன் எண்ணிக்கை 1776 ஆக அதிகரித்தது. இதில் 31 வது நோயாளி சூப்பர் ஸ்பிரெட்டர் ஆக செயல்பட்டுள்ளார். இவரின் மூலம் அதிகப்படியான நபர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் = 4 to 18 to 43 to 75 to 90 29 நாள் நிலவரம்

30ம் தேதி இதன் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்தது.

ஸ்பெயின் = 2 to 151 to 1,639 to 11,178 to 39,673 29 நாள் நிலவரம்

30ம் தேதி இதன் எண்ணிக்கை 47 ஆயிரமாக அதிகரித்தது.

இத்தாலி = 3 to 650 to 3,858 to 15,113 to 41,035 29 நாள் நிலவரம்

30ம் தேதி இந்த எண்ணிக்கை 47,021 ஆக அதிகரித்தது.

ஈரான் = 2 to 141 to 2,922 to 9,000 to 17,361 29 நாள் நிலவரம்

30ம் தேதி இந்த எண்ணிக்கை 18,407 ஆக உயர்ந்தது.

இந்த 6 நாடுகளில் ஏற்பட்ட மரணங்களை கணக்கிடும்போது இந்தியாவில் மரண விகிதம் மிக மிகக்குறைவு ஆகும்.

கொரோனாவால் முதல் மரணம் நிகழ்ந்ததை தொடர்ந்து அடுத்த 2 வார கால இடைவெளிகளில்

இந்தியாவில் = 1 to 4 to 17
தென்கொரியா = 1 to 13 to 35
ஸ்பெயின்= 1 to 48 to 598
ஈரான் = 2 to 22 to 92
இத்தாலி = 2 to 29 to 234 ஆக மரணங்கள் அதிகரித்துள்ளன.

தொற்று பரவலின் விகிதம்

ஐரோப்பிய தேசிய நோய் தடுப்பு மையத்தின் அறிக்கையின் படி, இத்தாலியில் வைரஸ் தொற்று சராசரி விகிதம் 2.76 முதல் 3.25 ஆக இருந்ததாகவும், இதுவே இந்தியாவில் 1.81 என்ற அளவிலேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொற்று பரவலை நிபுணர்கள் R0 என்று குறிப்பிடுகின்றனர். R0 என்பது ஒன்றை விட குறைவானது. இந்த மதிப்பு இருப்பின், நோய் தொற்று கொண்ட நபரால் மற்றவர்களுக்கு இந்த தொற்றை ஏற்படுத்த இயலவில்லை. இது சாதாரண தொற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது.
இதன் மதிப்பு ஒன்றுக்கு மேல் இருக்கும் பட்சத்தில், தொற்று விகிதம் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்த தொற்று பரவலின் விகிதத்தை தடுக்க சமூக விலகல் பேரூதவி புரிகிறது. சமூக விலகல் என்பது யாதெனில், , தொற்று உள்ளவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதால், மக்கள் சேர்ந்து விவாதிப்பதை தவிர்த்தல். இதன்மூலம், தொற்று பரவல் தடுக்கப்படுகிறது. மேலும் சிறந்த சிகிச்சை முறைகளின் மூலம், பாதிப்பு உள்ளவர் விரைவில் குணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க..

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close