கொரோனா வைரஸ் பாதிப்பு : தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் சென்னையின் பங்கு 55 சதவீதம்.

Coronavirus cases : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதில் 5 ஆயிரம் பாதிப்புகள் சென்னையில் தான் கண்டறியப்பட்டுள்ளது.

By: May 14, 2020, 4:03:16 PM

கொரோனா பாதிப்பில் தமிழகம், டெல்லியை முந்தியுள்ள நிலையில், குஜராத்தையும் முந்தும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. பட்டியலின் 2ம் இடத்தில் 8904 பேருடன் குஜராத்தும், 8718 பாதிப்புகளுடன் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதில் 5 ஆயிரம் பாதிப்புகள் சென்னையில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பில் 55 சதவீதம் ஆகும். தமிழகத்தில் சென்னையை போன்று, மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை ( 60 சதவீதம்), குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் ( 70 சதவீதம்), மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா உள்ளிட்ட நகரங்கள் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்ட பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நகரங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு தொற்று ஏற்பட்டு புதிய நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு படையெடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன்காரணமாக, அங்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சிறிய அளவிலான பரப்பிலான இடத்தில், கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில் நாம் உடனடியாக அங்குள்ளவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகளை அளித்து அங்கு மீண்டும் இயல்புநிலை திரும்ப வரவழைத்து விடலாம். பெரிய பெரிய நகரங்களில் அங்குள்ள மக்களின் எண்ணிக்கையைவிட அதிகளவிலான மருத்துவ கட்டமைப்புகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் பெரிய அளவிலான தொற்று பரவல்களை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். இல்லையெனில், அது நம் கட்டுப்பாட்டை மீறி அதிகளவிலான உயிர்ச்சேதத்தை விளைவித்துவிடும். இதுதான் தற்போது கொரோனா விவகாரத்தில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

மே 12ம் தேதி அன்றுமட்டும் ஒரேநாளில் 3,532 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 74,276 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில், 24,385 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,415 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களில், கடைசி 2 நாட்களில் மட்டும் அதீத அளவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மே மாதம் 4ம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு 2200 முதல் 2500 வரையிலான அளவிலேயே புதிய கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வந்தன. ஆனால், தற்போதோ நாள் ஒன்றுக்கு 3800க்கும் மேலான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இவற்றில் மகாராஷ்டிரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் பங்கே அளப்பரியது ஆகும். கடந்த 10ம் தேதி மட்டும் ஒரேநாளில் 4370 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டிருந்தது. கடைசி 2 நாட்களில் புதிய பாதிப்புகளின் அளவு 3600 கீழ் குறைந்தபாடில்லை.

 

கொரோனா பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து சராசரியாக மற்ற எத்தனை பேருக்கு அந்த தொற்று பரவுகின்றது என்பதே கொரோனா தொற்று பரவல் விகிதம் ஆகும். இந்த விகிதத்தில் கடந்தவாரத்தில் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. முதல் ஊரடங்கு நிறைவடைந்த ஏப்ரல் 13 முதல், மே 10ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவல் விகிதத்தை நாம் reproduction number என்று குறிப்பிட்டோம். கொரோனா பாதிப்பிற்கு உள்ளான 100 நபர்களின் மூலம் 123 நபர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் அப்போது reproduction number 1.23 ஆக இருந்தது. மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குநிகழ்வின் போது பாதிக்கப்பட்ட 100 நபர்களின் மூலம் 183 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் அபரிமிதமாக அதிகரித்தது. தமிழகத்தை தொடர்ந்து, ஒடிசா மாநிலத்திலும், கொரோனா பாதிப்பு விகிதம் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த மாநிலங்களின் அளவை போன்று கடுமையாக அதிகரித்தது. மே 12ம் தேதி, ஒடிசாவில் ஒரேநாளில் புதிதாக 101 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவே அந்த மாநிலத்தில் ஒரேநாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச அளவாகும். ஒடிசா மாநிலத்தில் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், கஞ்ஜம், பாலாசூர், ஜஜ்பூர், குர்தா மற்றும் பத்ராக் மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒடிசாவில் பெரும்பாலானோர் குணமடைந்துவந்த நிலையில் வெளிமாநிலங்களில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இந்தகாரணத்தினாலேயே, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்ஜம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Coronavirustamil nadu corona cases chennai corona casescovid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X