சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஜூன் 28ம் தேதி 10 மில்லியன் என்ற அளவை எட்டியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 50 சதவீதம் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியா நாடுகளிலேயே பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் 2.5 மில்லியன் அளவில் பாதிப்பும், இந்தியா மற்றும் ரஷ்யாவில் தலா அரை மில்லியனுக்கும் மேல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் 1 முதல் 2 சதவீதமாக உள்ளது. அதாவது, நாள்தோறும் சர்வதேச அளவில் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. பாதிப்பு எண்ணிக்கையை விட, நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தினந்தோறும் 80 ஆயிரம் முதல் 1,30,000 வரை குணமடைந்து வருகின்றனர். இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், நாம் இன்னும் கொரோனாவின் கோர முகத்தை எட்டவில்லை என்பது புலனாகிறது.
இந்தியாவில் நாள்தோறும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான புதிய தொற்றுக்கள் கண்டறியப்படுகின்றன.நேற்று (ஜூன் 28ம் தேதி) 19 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5.5 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக, டெல்லியில், கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணைந்துள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. கர்நாடகா மாநிலம், பட்டியலின் கடைசி இடத்தின் உள்ளது.
மத்தியபிரதேசதத்தில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்தநிலையில், அது பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால், கிரேட்டர் ஐதராபாத் முனிசிபல் கார்ப்பரேசனுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜூன் 27ம் தேதி தெலுங்கானாவில் புதிதாக 1,087 தொற்று கண்டறியப்பட்டதில், 888 பாதிப்பு ஐதரபாத்தில் கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் சென்னை, கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் இதேநிலை நீடித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மும்பை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடரங்கு தளர்த்தப்பட உள்ளது. ஆனால், முழுமையாக தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். மும்பைவாழ் மக்கள், தங்களது தேவைகளை 2 கிலோமீட்டர் தொலைவிலேயே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். உரிய காரணமின்றி 2 கிமீ தொலைவை கடக்கும் வாகனங்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தற்போதைய நிலையில் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு விகிதம், தேசிய சராசரியை விட 3.68 சதவீதம் என்ற அளவில் உள்ளது. பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், டெல்லி, தமிழ்நாடு, ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து 3வது நாளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.