காற்று வழியாக வைரஸ் பரவுமா?

239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுதல் சாத்தியம் என்று கடிதம் எழுதியுள்ளனர். இது உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, இதன் தாக்கங்கள் என்ன?

239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுதல் சாத்தியம் என்று கடிதம் எழுதியுள்ளனர். இது உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது, இதன் தாக்கங்கள் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, Could virus be airborne, coronavirus airborne, coronavirus airborne disease, coronavirus airborne news, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுமா, காற்று வழியாக பரவுமா கொரோனா, coronavirus airborne who, coronavirus airborne india, coronavirus air transmission, coronavirus airborne disease, coronavirus transmission through air

coronavirus, Could virus be airborne, coronavirus airborne, coronavirus airborne disease, coronavirus airborne news, கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுமா, காற்று வழியாக பரவுமா கொரோனா, coronavirus airborne who, coronavirus airborne india, coronavirus air transmission, coronavirus airborne disease, coronavirus transmission through air

32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்துக்கு (WHO) ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கோவிட் -19 வைரஸ் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு காற்றில் பறக்கக்கூடும் என்பதால் அது தானாக காற்றில் பரவும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment

விஞ்ஞானிகள் “சிறிய துகள்கள் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை மாற்றியமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.” ‘கோவிட்-19 காற்றுவழியாக பரவும் என்பதை அடையாளம் கண்பதற்கான நேரம் இது’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை அடுத்த வாரம் அறிவியல் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட உள்ளது.

இதற்கு பொருள் என்ன?

கோவிட் -19 போன்ற சுவாச நோய்த்தொற்று வெவ்வேறு அளவு நீர்த் துளிகள் வழியாக பரவுகிறது. நீர்த்துளிகளின் துகள்கள் 5-10 மைக்ரான் விட்டத்தை விட பெரியதாக இருந்தால், அவை சுவாச துளிகள் என்று குறிப்பிடப்படுகின்றன; அவை 5 மைக்ரான் விட்டம் கொண்டதாக இருந்தால், அவை துளி கருக்கள் (Droplet nuclei) என குறிப்பிடப்படுகின்றன.

“தற்போதைய ஆதாரங்களின்படி, கோவிட்-19 வைரஸ் முதன்மையாக மக்களுக்கு இடையே சுவாச துளிகள் மற்றும் தொடர்புகொள்வதன் வழியாக பரவுகிறது” என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், விஞ்ஞானிகள் எழுதியுள்ள கடிதம், காற்றுவழியாகவும் பரவுதல் நடக்கக்கூடும் என்று கூறுகிறது.

Advertisment
Advertisements

இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பேசும்போது, இருமல், தும்மலின்போது அதிலிருது உற்பத்தியாகும் வைரஸைக் கொண்ட நீர்த்துளிகள் 5-10 மைக்ரான் விட்டம் கொண்ட பெரிய நீர்த்துளிகள் இறுதியில் புவி ஈர்ப்புக்கு ஆளாகி 1 மீட்டருக்கும் குறைவான பயணத்திற்குப் பிறகு தரையில் விழும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் பார்வை.

239 விஞ்ஞானிகள், மறுபுறம், வைரஸ் 1 மீட்டருக்கு மேல் பயண தூரம் செல்லும் துளி கருக்களில் (5 மைக்ரானுக்கு குறைவான விட்டம்) இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்களை மேற்கோள் காட்டி வைரஸ் நீண்ட நேரம் காற்றில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இது நிறுவப்பட்டால் முன்னர் நினைத்ததைவிட தொற்று பரவும் ஆபத்து அதிகமாக இருக்கும் என்று அர்த்தம்.

இது புதிய கண்டுபிடிப்பா?

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் அமைப்புகளில் காற்றுவழியாக பரவுதல் சாத்தியமாகும். இதில் காற்றில் நீர்த்துளிகளை உருவாக்கும் நடைமுறைகளில் பின்வரும் அமைப்புகளும் அடங்கும்; மூக்கு வாய்வழியாக மருத்துவ டியூப்கள் செலுத்துதல், டியூப் மூலம் மருந்து செலுத்தி சிகிச்சை அளித்தல், மருத்துவ டியூப் செலுத்துவதற்கு முன்பு கையால் இயக்கப்படும் வெண்டிலேஷன், வெண்டிலேட்டரில் இருந்து ஒரு நோயாளியை விடுவித்தல், ஆக்கிரமிப்பு அல்லாத நேர்மறையான-அழுத்தம் உள்ள வெண்டிலேஷன்; கழுத்துப்பகுதியில் துளையிட்டு தற்காலிகமாக சுவாசக் குழாய் பொருத்துதல்; அவசர நேரங்களில் மார்பில் கைகளால் அழுத்தி இதயத்தை மீண்டும் துடிக்க வைத்தல் ஆகியவையும் அடங்கும்.

இந்த கருத்து நிறுவப்பட்டால் என்ன செய்வது?

முகக் கவசம் அணிவது முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்கும். மருத்துவமனைகளில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் N-95 முகக் கவசங்களை, நீர்த்துளிகள் உருவாக்கத்தின் மூலம் காற்றுவழியாக பரவுவதைத் தடுக்க அவை கிடைக்கும் அளவு மற்றும் ஒரு நபரின் உடல்நிலையைப் பொறுத்து பரிந்துரைக்கப்படலாம்.

காற்றுவழியாக பரவுவது பற்றி இதுவரை கிடைத்த ஆதாரங்கள் என்ன?

* நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்ட முதல் ஆய்வுகளில் ஒன்று, ரென்மின் மருத்துவமனை மற்றும் வுஹானில் உள்ள வுச்சாங் ஃபாங்காங் ஃபீல்ட் மருத்துவமனையில் நடத்தப்பட்டது. SARS-CoV-2 வைரஸின் ஏரோடைனமிக் தன்மையை காற்றின் நீர்த்துளிகளில் வைரஸின் ஆர்.என்.ஏவை அளவிடுவதன் மூலம் அது ஆய்வு செய்தது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் காற்றோட்டமான நோயாளி அறைகளில் கண்டறியப்பட்ட நீர்த்துளிகளில் வைரஸின் செறிவு மிகக் குறைவு என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அது நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறை பகுதிகளில் அதிகமாக இருந்தது. திரள்வதற்கு வாய்ப்புள்ள இந்த இரண்டு பகுதிகளைத் தவிர பெரும்பாலான பொது இடங்களில், காற்று வழியாக பரவும் அளவைக் கண்டறிய இயலவில்லை.” என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.

மேலும், “இந்த மருத்துவமனை பகுதிகளில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றுத் தன்மையை நாங்கள் நிறுவவில்லை என்றாலும், SARS-CoV-2 காற்று வழியாக நீர்த்துளிகள் மூலம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கலாம் என்று நாங்கள் முன்மொழிகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் ஆராய்ச்சியாளர்களால் NEJM-இல் வெளியிடப்பட்ட ஒரு கடிதம், காற்றில் உருவாக்கப்படும் நீர்த்துளிகளில் SARS-CoV-2-இன் (மற்றும் SARS-CoV-1, SARSஐ ஏற்படுத்தும்) ஸ்திரத்தன்மையை பல்வேறு பரப்புகளில் மதிப்பீடு செய்தது. SARS-CoV-2 பரிசோதனை காலத்தில் காற்றின் நீர்த்துளிகளில் 3 மணிநேரம் நீடித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

“SARS-CoV-2 நீர்துளிகள் மற்றும் குமிழ்கள் மூலம் பரவுதல் நம்பத்தகுந்தவை என்பதை எங்கள் முடிவுகள் குறிப்பிடுகின்றன. ஏனெனில், வைரஸ் சில மணிநேரங்களுக்கு நீர்த்துளிகளில் நீடிப்பதால் அது தொற்றுநோயாகவும் கூடும்” என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

NEJM கட்டுரையின் கண்டுபிடிப்புகளுடன் உடன்படாத உலக சுகாதார நிறுவனம் “… 3 மணி நேரம் வரை காற்றில் நீர்த்துளி துகள்களில் COVID-19 வைரஸைக் கண்டுபிடித்திருப்பது ஒரு மருத்துவ சூழலை பிரதிபலிக்காது. அதில் காற்றில் நீர்த்துளிகள் உருவாக்கும் நடைமுறைகள் செய்யப்படுகின்றன. அதாவது இது ஒரு சோதனை ரீதியாக நீர்த்துளிகளை உருவாக்கும் செயல்முறை” என்று கூறுகிறது.

* மே மாதத்தில், யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி), “கூட்டாக பாடும் இசை பயிற்சி நிகழ்ச்சியில் SARS-CoV-2 உயர் தாக்குதல் வீதம்” என்ற தலைப்பில் ஒரு ஆய்வை வெளியிட்டது. அதில் “சூப்பர் ஸ்பிரெடிங் நிகழ்வுகளை” ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அறிகுறி உள்ள நோயாளி உட்பட 61 பேர் கலந்துகொண்ட 2.5 மணி நேர கூட்டாக பாடும் இசை பயிற்சி நிகழ்ச்சியை தொடர்ந்து, அதில் 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் 20 பேர் இரண்டாம் நிலை கோவிட் -19 வழக்குகளாக இருந்தனர். 3 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2 பேர் இறந்தனர்.

பாடும் செயலில் வாயிலிருந்து வெளியேறும் உமிழ்நீர்த் துளிகள் பரவுதலில் பங்களித்திருக்கலாம். அது குரல்வளையின் சத்தத்தால் பாதிக்கப்படுகிறது” என்று அந்த ஆய்வு குறிப்பிட்டது.

மேலும், ‘சூப்பர் எமிட்டர்கள்’ (Super emitters) என அழைக்கப்படும் சில நபர்கள், தங்கள் சகாக்களைவிட பேச்சின்போது அதிக உமிழ்நீர்த்துளி துகள்களை வெளியிடுகிறார்கள். இது முன்னர் கூறப்பட்ட COVID-19 சூப்பர் ஸ்பிரெடிங் நிகழ்வுகளில் பங்களித்திருக்கலாம் என்று கூறியது.

“…உரையின்போது வாயிலிருந்து நீர்த்துளிகள் வெளியேறுவது குரலின் சத்தத்துடன் தொடர்புடையது. மேலும், சில நபர்கள், தங்கள் சகாக்களை விட அதிகமான துகள்களை வெளியிடுகிறார்கள். அவர்கள் சூப்பர் எமிட்டர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். மேலும், அது அதிவேக பரவுதல் நிகழ்வுகளுக்கு பங்களிப்பதாக கருதுகின்றனர். பாடும்போது உறுப்பினர்கள் ஒரு தீவிரமான மற்றும் நீடித்த வெளிப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகருகே 6-10 அங்குல இடைவெளியில் உட்கார்ந்து பாடும்போது வாயில் இருந்து உமிழ்நீர் நீர்த்துளிகளை வெளியேற்றலாம்” என்று அந்த ஆய்வு கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
America India Coronavirus Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: