திங்களன்று ( அக்டோபர், 21 ), ஆஸ்திரேலிய செய்தித்தாள் வாசகர்களுக்கு எதிர்பாராத அனுபவம் ஒன்று ஏற்பட்டது . அவர்கள் எந்த செய்தித் தாளை எடுத்தாலும், அதன் முதல்பக்கம் தலைப்பு செய்திகளுக்கு பதிலாக கறுப்பு நிறமாகவே இருந்தது. ஆஸ்திரேலியா அரசாங்கம் கருத்து சுதரந்தித்தை பரிக்கின்றது என்ற எதிர்ப்பை சொல்லாமல் சொல்வதற்காக இந்த முயற்சியில் அந்த நாட்டு ஊடகங்கள் எடுத்துள்ளன.
கடந்த இரண்டு சாகப்பதங்களாகவே தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புலனாய்வு செய்யும் பத்திரிகையின் சுதந்திரத்தை பறிப்பதோடு மட்டுமல்லாமல், புலனாய்வு செய்யும் பத்திரிக்கையும், பத்திரைக்கையாளர்களையும் குற்றவாளியாக்கி வருகிறது அந்நாட்டு அரசு. உதாரணமாக, நியூஸ் கார்ப் என்ற தினசரி பத்திரிகையில் நிருபராக இருக்கும் அன்னிகா ஸ்மெதுர்ஸ்ட், நாட்டு மக்களை உளவு பார்க்கும் அரசாங்கத்தின் செயல்திட்டங்களை விசாரித்து இது தொடர்பான ஆவனங்களையும் பொது மக்களுக்கு வெளியிட்டார் . இதன் விளைவாக, ஆஸ்திரேலியா போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை நிகழ்வு, அந்நாட்டு மக்களிடம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள அனைத்து ஊடகங்களும் ஒன்றாக சேர்ந்து 'தெரிந்து கொள்ள உரிமையிருக்கிறது' என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். அந்த கூட்டமைப்பின் சார்பாக தான் கடந்த திங்களன்று அனைத்து செய்தித் தாள்களும் முதல்பக்கத்தை கறுப்பாக்கினர். முன்னதாக, அனைத்து டிவி சேனல்களிலும் ப்ரைம்டைம் எந்த நிகழ்ச்சிகள் இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வார்த்தக ரீதியாக ஒவ்வொரு செய்தி நிறுவனங்களும், வெவ்வேறாக இருந்தாலும், அனைவரும் ஒன்றாக அரசாங்கத்திற்கு எதிராக தங்களது கருத்தை( முதல் பக்கத்தை கறுப்பாக்கியது ) நாட்டு மக்கள் அனைவரையும் சிலிர்க்க வைத்தது.
பத்திரிக்கைகளின் கோரிக்கை தான் என்ன ?
உளவு பார்ப்பதற்கான தடை சட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்களையும், விசில்ப்ளோயர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பின் அடிப்படை வாதமாக இருக்கின்றது. பத்திரகையாளர்கள் நாட்டு மக்களுக்கு வேண்டிய தகவலை தருவதற்காகத் தான் உழைத்து வருகின்றனர். அவர்கள் ஆய்வு செய்து வெளியிடும் தகவல்களை எல்லாம் அரசுக்கு எதிராக உளவு பார்க்கின்றது என்று குற்றவாளியாக பார்த்தால் ஜனநாயகத்தின் மரபு சீரழியும் என்று ஏபிசி நிர்வாக இயக்குனர் டேவிட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அரசாங்கம் என்ன சொல்கிறது:
ஆஸ்திரேலியா வின் ஜனநாயகத்திற்கு பத்திரிகை சுதந்திரத்தின் இன்றியமையாததாக இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமம், பத்திரிகையாளர்கள் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.