Countries reopening: அதிக அளவில் தடுப்பூசிகள் மக்கள், உலக அளவில் செலுத்திக் கொள்வதாலும், , பல அதிகார வரம்புகள் கவனமாக அளவீடு செய்யப்பட்ட முறையில் இருந்தாலும், பல நாடுகளில் பயணத்திற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், இந்தியர்களுக்கான பல பிரபலமான இடங்கள் சில வகை பயணிகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கிறது. ஆனாலும் கூட பிரிட்டிஷ், தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களிடமும் பாரபட்சமாக செயல்பட்டதன் விளைவாக இந்தியர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
அமெரிக்கா
வெள்ளை மாளிகையின் தொற்றுநோய் ஒருங்கிணைப்பாளர் ஜெஃப் ஜியெண்ட்ஸ் திங்கள் கிழமை அன்று, அமெரிக்காவிற்கு பயணம் செல்ல விரும்பும் நபர்கள் தாங்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தை வழங்கினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். மேலும் அமெரிக்கா செல்லும் நபர்கள் மூன்று நாட்களுக்குள் எடுத்துக் கொண்ட கொரோனா சோதனையின் நெகடிவ் முடிவு சான்றுகளையும் சமர்பிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், எந்த விசா வகைகள் வழங்கப்படும், எந்த குறிப்பிட்ட தடுப்பூசிகள் "முழுமையாக" தடுப்பூசி போடும் திறன் கொண்டதாக கருதப்படும் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை.
ஜெஃப் குடும்பங்கள் மற்றும் நண்பர்களை இணைப்பதற்கும், வணிகங்கள் மற்றும் கருத்துக்கள் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதற்கும் சர்வதேச பயணம் மிக முக்கியமானது என்று கூறினார். எனவே சுற்றுலாவுக்காக மீண்டும் பயண தடைகள் நீக்கப்படுகிறதா என்பது குறித்து தெளிவான முடிவு கிடைக்கவில்லை. இந்தியா உட்பட 33 நாடுகளின் 18 மாத பயணத் தடையை நீக்குவது அமெரிக்காவில் தற்போது நலிந்து காணப்படும் சுற்றுலாத்துறையை புதுப்பிக்க உதவும் என்று குறிப்பிட்டுள்ளது தி நியூ யார்க் டைம்ஸ்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மக்களை "ஃபைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அல்லது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியின் ஒரே டோஸ் எடுத்த பிறகு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதுகிறது அமெரிக்கா என்று அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிடிசி செய்தித் தொடர்பாளர் தாமஸ் ஸ்கின்னரை மேற்கோள் காட்டி, உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகள் அஸ்ட்ராஜெனெகா போன்ற தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களும் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்று கருதப்படுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மேட்-இன்-இந்தியா வடிவமான கோவிஷீல்டும் தகுதியுடையதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
ஜனவரியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானங்களை முற்றிலுமாக தடைசெய்த பிறகு, ஃபால் செமஸ்டர்கள் படிக்க அமெரிக்காவுக்கு வரும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கனடா
செவ்வாய்க்கிழமை முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கனடாவுக்கு ஸ்டாப்ஓவர் விமானத்தில் செல்லும் போது இந்திய பயணிகள் உட்படுத்த வேண்டிய மூன்றாம் நாடு ஆர்டி-பிசிஆர் தேவையை தளர்த்தியது.
பயணத்திற்கு முந்தைய ஆர்.டி.பி.சி.ஆர் நெகடிவ் முடிவுகள் அனைத்தும் பயணத்தின் போது பாசிட்டிவாக மாறியதை தொடர்ந்து இந்திய விமானங்களை சில மாதங்களுக்கு முன்பு தடை செய்தது கனடா
தாய்லாந்து
டெல்லியில் அமைந்திருக்கும் தாய்லாந்து தூதரகம், மீண்டும் ஒரு சில விசாக்களை தாய் நாட்டை சேராத குடிமக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. மாணவர்களுக்கான விசாக்கள், வேலை அனுமதி பெற்றவர்கள், வதிவிட அனுமதி பெற்றவர்கள், முதலியன அடங்கும். ஆனால் மருத்துவ மற்றும் சுற்றுலா விசாக்கள் வழங்கப்படவில்லை.
பிரிட்டிஷ்
பிரிட்டிஷ் அக்டோபர் 4 ஆம் தேதி முதல், சர்வதேச பயணத்திற்கான 'டிராஃபிக் லைட் சிஸ்டத்தில்' 'அம்பர்' பட்டியலுடன் இங்கிலாந்து தனது விதிமுறைகளை நீக்கச் செய்துள்ளது. இந்தியா அம்பர் பட்டியலில் உள்ளது, இது ஒரு சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் தேவைகளை கட்டாயமாக்குகிறது.
ட்ராஃபிக் லைட்' சென்றவுடன், தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லையென்றால், முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கூட, கட்டாய தனிமைப்படுத்தல் தேவைகளுடன் கூடிய 'சிவப்பு' பட்டியலை மட்டுமே இங்கிலாந்து கொண்டிருக்கும். தற்போது வரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள் பட்டியலில் இல்லை. அந்நாட்டின் இந்த முடிவை எதிர்த்து இந்தியா அதிருப்தி தெரிவித்த நிலையில் இரு நாடுகளும் இது தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
மற்ற நாடுகள்
அமீரகம், ஜெர்மனி, ஸ்பெய்ன், மாலத்தீவுகள், துருக்கி போன்ற நாடுகள் இந்திய பயணிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. துபாயில் வருகின்ற 1ம் தேதி முதல் எக்ஸ்போ 2020 நடைபெற உள்ளதால் அமீரகம் சுற்றுலா விசாக்களை இந்தியர்கள் உட்பட பலருக்கும் வழங்க துவங்கியுள்ளது.
இந்த மாதத்தின் துவக்கத்தில் துருக்கி தூதரகம் டெல்லியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை துருக்கி செல்லும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பிரஜைகள் மேற்கொள்ள தேவையில்லை என்று கூறியது.
கடந்த மாதம் ஜெர்மனி இந்தியாவை அதிக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடு என்பதில் இருந்து நீக்கி வைரஸின் வேரியண்ட்டுகள் இருக்கும் நாடு என்று மாற்றி அறிவித்து இந்தியர்களுக்கான பயண தடையை ரத்து செய்தது. ஸ்பெய்ன் நாடு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.