கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு அதிகம் சுற்றுலாப்பயணிகளை இறக்கிய நாடு எது?

2017 ஆம் ஆண்டில், பங்களாதேஷில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டின் 12,80,409 என்ற எண்ணிக்கையிலிருந்து 21,56,557 ஆக அதிகரித்துள்ளது

By: November 22, 2019, 2:05:29 PM

2018 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்த முதல் மூன்று நாடுகளில் பங்களாதேஷ், அமெரிக்கா மற்றும் யுனைட்டட் கிங்டம் ஆகிய நாடுகள் உள்ளதாக சுற்றுலா அமைச்சகம் பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சகத்தின் தரவுகளில் ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தொடர்ச்சியான அதிகரிப்பு மற்றும் 2016, 2017 மற்றும் 2018 ஆண்டுகளில் அந்நிய செலாவணி வருவாய் குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.

Foreign Tourist arrivals Foreign Tourist arrivals

தனிப்பட்ட மாநிலங்களில், 2018 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிட்டது தமிழக மாநிலம் தான் – அந்த ஆண்டில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழகத்தை சுற்றிப் பார்த்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 50 லட்சம் சுற்றுலாப்பயணிகளும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 37 லட்சம் சுற்றுலாப்பயணிகளும் வருகை தந்தனர்.

2017 ஆம் ஆண்டில், பங்களாதேஷில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டின் 12,80,409 என்ற எண்ணிக்கையிலிருந்து 21,56,557 ஆக அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை மேலும் 22,56,675 ஆக உயர்ந்தது. பாகிஸ்தானில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை முற்றிலும் வேறுபட்ட முடிவைக் காட்டுகிறது. 2016ல் 1,04,720 பேர் வருகை தர, 2017ல் 44,266 பேர் வந்துள்ளனர். 2018 இல் 41,659 ஆக இது மேலும் குறைந்தது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Countries that dominated tourist arrivals in india in last 3 years

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X