Advertisment

கொரோனா தொற்று விகிதம்: அச்சமூட்டும் 4 மாநிலங்கள்

Coronavirus Cases and Deaths : கடந்த 24 மணி நேரத்தில்,  நாடு முழுவதும் 67,000 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன

author-image
WebDesk
New Update
கொரோனா தொற்று விகிதம்: அச்சமூட்டும் 4 மாநிலங்கள்

Amitabh Sinha

Advertisment

கடந்த ஒன்றரை மாதங்களில் ஆந்திரா,கர்நாடகா கொரோனா பாதிப்பில் வியத்தகு உயர்வைக் கண்டிருந்தாலும், இந்தியாவில் கணிசமாக நான்கு பிற மாநிலங்களிலும் இந்த நோய்த் தாக்குதலின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

ஜூலை மாதத்தில் இருந்து உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளன. வழக்கமாகக் கூறப்படும் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைத் தவிர, தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் மேற்கூறிய நான்கு மாநிலங்கள் மிகப்பெரிய பங்களிப்பாளர்களாக உள்ளனர்.

மேற்கு வங்கம், உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே  கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிய நிலையில், பீகார் மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை அந்த இலக்கை நெருங்கி வருகிறது . அசாம், மாநிலத்தின் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 68,000 ஆக இருந்தாலும், தினசரி பாதிப்பு வளர்ச்சி விகிதம் அங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

 

 

ஜூலை மாதத்தில் இருந்து, கொரோனா தொற்றின் தேசிய வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், இந்த நான்கு மாநிலங்கள் நித்தமும், 4 சதவீதத்திற்கும் அதிகமான தினசரி வளர்ச்சி விகிதங்களைக் கண்டறிந்து  வருகின்றன. தற்போது, தேசிய வளர்ச்சி விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. ஜூலை தொடக்கத்திலிருந்து, பீகார்,அசாமில் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 8 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 4, 5 மடங்காக அதிகரித்தன. இந்த இரண்டு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்புகளின் விகிதாசாரம் பாதிப்புக்கு ஏற்றார் போல் அதிகரித்தன. தற்போது வரை ,2,200 க்கும் மேற்பட்ட மரணங்கள் இந்த இரு மாநிலங்களில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

ஒப்பீட்டளவில பீகார், அசாம் மாநிலங்களின் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.  474 இறப்புகளை பீகார் மாநிலம் பதிவு செய்துள்ள நிலையில், அசாமின் உயிரிழப்பின் எண்ணிக்கை 161 ஆக உள்ளது.

இதற்கிடையே, ஒடிசா,கேரளா, ​​பஞ்சாப் ஆகிய மூன்று மாநிலங்கள், ஒப்பீட்டளவில்  நீண்ட காலத்திற்குப் பிறகு அதிகளவு கொரோனா பாதிப்பை உறுதி செய்து வருகின்றன. ஒடிசாவில், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 50,000 க்கும் அதிகமாக  உயர்ந்துள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வருகையால் பரவல் காணப்பட்ட  கஞ்சம்,  குர்தா போன்ற கடலோர மாவட்டங்களில்  பெரும்பாலான பாதிப்புகள் கண்டறியப்படுகிறது.

கொரோனாவைக் கட்டுபடுத்துவதில் முன்மாதிரியாக திகழ்ந்த கேரளா, கடந்த ஒன்றரை மாதங்களாக ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளைச் சேர்த்து வருகிறது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 40,000 ஐ நோக்கி செல்லும் வேளையில், தொற்றுப் பரவலின் வளர்ச்சி விகிதம் அங்கு தேசிய வளர்ச்சி சராசரியை விட அதிகமாக உள்ளது.

ஜூன்,  ஜூலை மாதங்களில்,  தினசரி பாதிப்பு  எண்ணிக்கையை பத்துக்கும் குறைவாக பஞ்சாப் , தற்போது மீண்டும் கொரோனா ஆபத்தை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில், 7,000 க்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாநிலத்தின், மொத்த பாதிப்பின் எண்ணிக்கை எண்ணிக்கை தற்போது 27,000 ஐக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில்,  நாடு முழுவதும் 67,000 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17,00,000 ஐ தாண்டியுள்ளது. குணமடைந்தவர்கள் விகிதம் 71 விழுக்காடு என்ற உயர்ந்த அளவை எட்டியுள்ளது.

 

publive-image

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment