Advertisment

இந்தியாவில் பரவியுள்ள கோவிட்-19 ஒழிக்க கடினமாகிறதா?

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், தொற்று பரவலில் இந்தியா ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குள் நுழைவதாக தெரிகிறது என்று கூறினார். வைரஸ் எல்லா காலத்திலும் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி, எதிர்கால அலைகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றிற்கான தாக்கங்கள் என்ன?

author-image
WebDesk
New Update
இந்தியாவில் பரவியுள்ள கோவிட்-19 ஒழிக்க கடினமாகிறதா?

SARS-CoV-2 வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாராகிவரும் நிலையில், ​​உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், “இந்தியா கோவிட்-19 நோய்த்தொற்றின் ஒரு கட்டத்திற்குள் நுழைவதாகத் தெரிகிறது. குறைவான நிலையில் இருந்து மிதமான பரவல் நிலைக்கு செல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த ஆண்டு தொடக்கத்தில், நேச்சர் ஆய்வு இதழால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் விஞ்ஞானிகள் SARS-CoV-2 வைரஸ் தொற்றுநோயாக மாறப்போகிறது என்றும் உலக மக்கள்தொகையில் தொடர்ந்து பரவி வருகிறது என்றும் குறிப்பிட்டனர்.

தொற்று பரவல் நிலை என்றால் என்ன?

தொற்று பரவல் ஒழிக்க முடியாத அளவு கடினமாகிறது (Endemic) என்பது எல்லா காலத்திலும் இருக்கிற ஒரு நோய் என்று அர்த்தம். முன்னணி வைராலஜிஸ்ட் டாக்டர் ஷாஹித் ஜமீல், கூறுகையில், உதாரணமாக முழுமையாக ஒழிக்கப்பட்ட பெரியம்மை போல இல்லாமல், இன்ஃபுலுயென்ஸா காய்ச்சல் ஒழிப்பதற்கு கடினமான அளவில் பரவியுள்ள ஒரு தொற்றுநோய் ஆகும் என்று கூறினார்.

மற்ற விலங்கினங்களை ஆதாரமாக கொண்டிருக்காத நோய்க்கிருமிகளை மட்டுமே அழிக்க முடியும். பெரியம்மை மற்று போலியோ மனித வைரஸ்களுக்கு உதராணம். ரிண்டர்பெஸ்ட் ஒரு கால்நடை வைரஸ் ஆகும். வவ்வால்கள், ஒட்டகங்கள் அல்லது சிவெட் பூனைகள் போன்ற சில விலங்குகளில் வைரஸ் / நோய்க்கிருமிகள் இருந்தால், அதனால், ஏற்படும் நோய்க்கு எதிராக மக்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறினார்.

“கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பொறுத்தவரை, அது விலங்குகளில் ஆதாரமாக இருப்பதால் அது தொடர்ந்து சுழற்சியில் இருக்கும். இது மக்களை தடுப்பூசி அல்லது நோய் வெளிப்பாடு இல்லாத அளவுக்கு நோயை ஏற்படுத்தும். இருப்பினும், போதுமான அளவில் மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அல்லது நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்தால், வைரஸ் அறிகுறி நோய்த்தொற்றை ஏற்படுத்தும் ஆனால் அது நோய் அல்ல. எனவே, அதுவே தொற்றுநோயாகக் கருதப்படுகிறது - அதாவது தொற்று இருக்கிறது ஆனால், நோயை ஏற்படுத்தாது” என்று டாக்டர் ஷாஹித் ஜமீல் கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) கடைசி சீராலாஜிக்கல் சர்வேயில், மக்கள்தொகை மாதிரியிலிருந்து காட்டியது - 718 மாவட்டங்களில் 70 மாவட்டங்களில் - மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு ஆன்டிபாடிகள் உள்ளன. மீண்டும், அந்த மூன்றில் இரண்டு பாகங்களில், சிலருக்கு ஆன்டிபாடிகள் இருந்திருக்கும். ஏனெனில், அவர்களுக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இருப்பினும், தடுப்பூசி விகிதங்கள் இன்னும் குறைவாக இருப்பதால், ஆன்டிபாடிகள் உள்ள பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அனைவருக்கும் நோய் இல்லை என்பது பொதுவான அனுமானம். இதன் பொருள் பெரும்பான்மையானவர்கள் பின்னர் நோய் அறிகுறியில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். அதாவது அவர்கள் பாதிக்கப்படலாம் ஆனால் பாதுகாக்கப்படுவார்கள் என்று டாக்டர் ஜமீல் விளக்கினார்.

“வைரஸ் எளிதில் மீண்டும் பரவினாலும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் ஒரு வடிவத்திற்கு மாறப்போவதில்லை என்று அது கருதப்படுகிறது. தடுப்பூசிகள் செயலிழக்கத் தொடங்கும் இடத்திற்கு வைரஸ் மாறுமா எப்போது என்று யாராலும் கணிக்க முடியாது” என்று பேராசிரியர் ஜமீல் கூறினார்.

ஆன்டிபாடிகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

இது ஒரு வெளிப்படையான கேள்வி என்று இந்திய அரசின் தேசிய அறிவியல் தலைவர் பேராசிரியர் பார்த்தா மஜும்தர் கூறினார். “இப்போது எல்லோரிடமும் ஆன்டிபாடிகள் உள்ளன. அவை தொற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான நோய்களை உருவாக்காவிட்டாலும்கூட ஆண்டிபாடிகள் உள்ளன். இந்த வைரஸ் நம்முடன் இருக்கும். நாம் ஏற்கனவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கலாம். இது நம்மில் பெரும்பாலோருக்கு ஆன்டிபாடிகள் இருப்பதைக் குறிக்கிறது - தொற்று அல்லது தடுப்பூசி காரணமாக - எனவே தொற்று ஏற்பட்டால் நாம் கடுமையான நோயை உருவாக்காமல் இருக்கலாம்” என்று அவர் கூறினார்.

“பரவல் விகிதம் மற்றும் அதன் பிறழ்வு விகிதத்தில் இருந்து, நம்மில் பலர் உண்மையில் இந்த கொரோனா வைரஸ் அழிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறோம் - இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் - பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் வைரஸ் தங்கியிருக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் பாதுகாப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பார்கள்” என்று அவர் கூறினார்.

மருத்துவ தொற்றுநோயியல் நிபுணர் கர்னல் (ஓய்வுபெற்ற) டாக்டர் அமிதாவ் பானர்ஜியும், நாடு தழுவிய சீரம் சர்வேக்களைக் குறிப்பிட்டு கூறினார். “இது கிட்டத்தட்ட 67% இந்தியர்களி குழந்தைகள் உட்பட அதிக அளவில், IgG ஆன்டிபாடிகள் இருப்பதைக் குறிக்கிறது. ஆன்டிபாடி அளவு காலப்போக்கில் குறைந்து வருவதால், நினைவகம் மற்றும் டி செல்கள் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கிறது. இந்த 67 சதவிகிதத்தை தாண்டி மிகப் பெரிய விகிதம் வைரஸை எதிர்கொண்டது. இயற்கை நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி இருந்திருக்கும் என்று நாம் கருதலாம். IgG அளவுகள் மேற்கொள்ளப்படுவதற்கு அதிக சீரம் சர்வேக்கள் தேவை” என்று கர்னல் பானர்ஜி கூறினார்.

கூடுதல் தடுப்பூசி டோஸ் உதவுமா?

தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் தேவையா இல்லையா, என்பது குறித்து பேராசிரியர் மஜும்தார் கூறுகையில், அது சராசரியாக ஒரு தனிநபருக்கு ஆன்டிபாடி அளவு எவ்வளவு விரைவாக குறைகிறது என்பதைப் பொறுத்தது என்று கூறினார். “தனிநபர்களிடையே ஆன்டிபாடி அளவு குறைந்து வரும் போக்கில் பரந்த வேறுபாடுகள் உள்ளன; பூஸ்டர் டோஸின் தேவையை உறுதியாகத் தீர்மானிக்க போதுமான தரவு இன்னும் திரட்டப்படவில்லை” என்று பேராசிரியர் மஜும்தார் கூறினார்.

“தடுப்பூசியின் செயல்திறன் காலப்போக்கில் குறைந்து வருவதாகத் தோன்றினாலும், கணிசமான பாதுகாப்பு இன்னும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மூன்றாவது ஷாட் அல்லது பூஸ்டர் தேவைப்படலாம். உண்மையில், இன்ஃப்ளூயன்ஸாவைப் போலவே வழக்கமான தடுப்பூசி பூஸ்டர் ஷாட் குறிக்கப்படலாம்” என்று அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் பேராசிரியர் க கௌதம் மேனன் கூறினார்.

தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரும் என்று நாம் கவலைப்பட நேரிடுமா?

பேராசிரியர் மேனனின் கருத்துப்படி, மக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால், கடுமையான நோய், மருத்துவமனையில் சிகிச்சை அல்லது இறப்பு விகிதம் குறைந்து வருவதற்கான சாத்தியக்கூறுகளுடன், மக்கள்தொகைக்குள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொற்றுநோயை எதிர்பார்க்கலாம் என்று கூறினார்.

டெல்டா மாறுபாடு இப்போது நாடு முழுவதும் புதிய தொற்றுநோய்களில் ஆதிக்கம் செலுத்துகிறது. வைரஸ்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், கேள்வி என்ன என்றால், டெல்டாவை விட அதிகமாக பரவும் ஒரு புதிய திரிபு வருமா மற்றும் முந்தைய தொற்று அல்லது தடுப்பூசியிலிருந்து நோயெதிர்ப்பு தன்மையை தவிர்க்குமா” என்று கூறினார்.

“அப்படி இல்லாத வரை, ஒரு சிறிய பின்னணியில் தடுப்பூசி முன்னேற்றங்கள் குறைந்த, நிலையான அளவில் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை பராமரிக்க உதவும் என்று நாம் எதிர்பார்க்கலாம். சில பகுதிகளில், குறிப்பாக குறைந்த சீரம் பரவல் மற்றும் குறைந்த தடுப்பூசி விகிதங்கள் கூர்மையாக காணப்படும் பகுதிகளில் ஒரு நிலையான தொற்றுகள் இருக்க வாய்ப்புள்ளது. இரண்டாவது அலையுடன் ஒப்பிடக்கூடிய தொற்று எண்ணிக்கைகளை நாம் பார்ப்பது முற்றிலும் சாத்தியமில்லை” என்று பேராசிரியர் மேனன் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coronavirus Covid 19 In India Covid 19 Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment