Covid 19 vaccine Tamil News : ஸ்வீடிஷ்-பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கடந்த திங்களன்று தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி AZD1222-ன் செயல்திறன் பற்றிய தகவல்களை வெளியிட்டன. இந்தியாவில், இந்த தடுப்பூசியின் பதிப்பு (கோவிஷீல்ட்) தற்போது சோதனைக்கு உட்பட்டுள்ளது:
கண்டுபிடிப்புகள் என்ன?
AZD1222-ன் செயல்திறன் (தடுப்பூசி போட்டவர்களில் கோவிட் -19 அறிகுறியைக் குறைப்பதற்கான அதன் திறன்), இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் நடந்து வரும் சோதனைகளில் நிர்வகிக்கப்படும் அளவுகளின் கலவையைப் பொறுத்து மாறுபடும். இடைக்கால பகுப்பாய்வின்படி, AZD1222 தடுப்பூசியின் ஒரு மாத இடைவெளியில் ஒரு முழு டோஸைத் தொடர்ந்து அரை டோஸ் கலவையைப் பெறுபவர்களில், அறிகுறிகள் உள்ள கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கையை 90% குறைப்பதாகக் கண்டறியப்பட்டது. ஆனால், குறைந்தது ஒரு மாத இடைவெளியில் இரண்டு முழு டோஸுகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அதன் செயல்திறன் 62 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குறைந்த அளவு மற்றும் அதிக அளவு ஆகியவற்றின் கலவை, உண்மையில் அதிக செயல்திறனைக் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. அதே வரையறுக்கப்பட்ட விநியோகத்தைப் பயன்படுத்தி அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போட முடியும் என்பதே இதன் பொருள்.
இரண்டு முழு டோசேஜுகளுடன் குறைந்த செயல்திறன் எதனால் ஏற்படுகிறது?
அது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சாத்தியமான காரணங்களைப் பற்றி வல்லுநர்கள் ஊகிக்கும்போது, தகவலறிந்த கருத்தைத் தெரிவிக்க அவர்கள் கூடுதல் தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள்.
"குறைந்த அளவிலான வெளிப்பாடு ஆரம்பத்தில் இந்த அமைப்பை மிகவும் சிறப்பாக மதிப்பிடக்கூடும் என்று நினைத்தேன். இரண்டாவது டோஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது ஆனால், இது ஊகமே" என்று இந்திய சுகாதார அறக்கட்டளையைச் சேர்ந்த டாக்டர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறினார். “முதல் டோஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தீர்த்து வைக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தால் அடுத்த டோஸ், தேவைப்படும் உயர்ந்த ரெஸ்பான்ஸை வெளிப்படுத்தாது. காரை ஓட்டும் போது கியர்களை மிக வேகமாக மாற்றுவது போல இருக்கலாம். நீங்கள் இயந்திரத்தை சூடாக்கலாம் ஆனால், அது வேகத்தைக் குறிக்காது. அது இங்கே சாத்தியம், ஆனால் அதை ஆராய வேண்டும்.
கோவிஷீல்ட் என்றால் என்ன?
AZD1222-ன் “மாஸ்டர் விதை”யை பயன்படுத்தி சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உருவாக்கிய கோவிஷீல்ட், 1,600 பங்கேற்பாளர்கள் மீது இந்தியாவில் பிற்பகுதியில் மனித சோதனைகளுக்கு உட்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது கோவிஷீல்டின் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் (நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன்) ஆகியவற்றைப் படிப்பதை இந்த சோதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆய்வு SII கோவிஷீல்ட்டை இந்தியாவில் தொடங்குவதற்கு உதவக்கூடும். இது AZD1222-ன் உலகளாவிய சோதனைகளிலிருந்து கூடுதல் தகவல்களைப் பயன்படுத்தி இந்திய மருந்து கட்டுப்பாட்டாளருக்கு அதன் பயன்பாடுகளை ஆதரிக்கிறது. இரண்டு வேட்பாளர்களும் ஒத்தவர்கள் என்று ஆய்வு நிரூபித்தால், SII பெறும் செயல்திறன் முடிவுகளும் ஒத்ததாக இருக்கலாம்.
கோவிஷீல்ட் சோதனை பங்கேற்பாளர்களை, AZD1222 சோதனைகள் நடத்தப்படும் விதத்தில் வெவ்வேறு அளவைக் கொண்டு சோதனை செய்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
“அவர்கள் முழு டோஸ்-முழு டோஸ் விதிமுறையை மட்டுமே பயன்படுத்துகிறார்களானால், கோவிஷீல்ட் இதேபோன்ற செயல்திறனை 60% வரை வெளிப்படுத்தக்கூடும். இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்க இது அவர்களுக்கு இன்னும் போதுமானதாக இருக்கும். ஏனெனில், அதன் வழிகாட்டுதல்கள், கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற சுமார் 30-50% செயல்திறனைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறுகிறது. இப்போது, 60-70% குறைந்த செயல்திறன் பெரிய பிரச்சினையாக இருக்காது. ஏனென்றால், இந்தியாவில் இன்னும் கோவிட் -19 தடுப்பூசி இல்லை. ஆனால், இப்போதிலிருந்து ஒரு வருடம், பல தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டவுடன், செயல்திறனில் 15-20% வித்தியாசம் இருக்கும்” என்று மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட தடுப்பூசி நிபுணர் டாக்டர் டேவிந்தர் கில் கூறுகிறார்.
தடுப்பூசி செயல்திறன் மற்றும் செலவு தொடர்பானவை மற்ற வேட்பாளர்களுடன் எவ்வாறு ஒப்பிடுகிறது?
செயல்திறன் தகவல்களை அறிவித்த பிற தடுப்பூசிகளில், ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா, அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (NIAID) மற்றும் ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் ஆகியவை அடங்கும். அஸ்ட்ராஜெனெகா உள்ளிட்ட எந்த அறிவிப்புகளும் விஞ்ஞான இதழில் வெளியிடப்படவில்லை மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்படவில்லை. அதாவது, அவற்றின் தரவு குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் காணப்படவில்லை.
mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயோஎன்டெக் உடனான அதன் தடுப்பூசி 95% செயல்திறன் விகிதத்தைக் கொண்டுள்ளது என்று ஃபைசர் கூறுகிறது. இருப்பினும், வேட்பாளருக்கு ஏறக்குறைய கிரையோஜெனிக் அளவிலான குளிர் சேமிப்பு தேவைப்படுகிறது. மேலும், இந்தியா போன்ற நாடுகளில் பெரிய அளவிலான விநியோகத்தை ஒரு சவாலாக மாற்றுகிறது. அதன் விலை, இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஒரு டோஸ் $19 (ரூ.1,400-க்கு மேல்) அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மாடர்னா மற்றும் என்.ஐ.ஐ.டி இன் தடுப்பூசி சுமார் 94.5% செயல்திறனைக் கொண்டுள்ளது. இதற்கு சுமார் -20°C ஆழமான freezer தேவைப்பட்டாலும், இது ஒரு மாதம் வரை சுமார் 2°C முதல் 8°C வரை குளிரூட்டப்பட்ட வெப்பநிலையிலும் சேமிக்கப்படும். இந்த தடுப்பூசி விலை வெவ்வேறு அரசாங்கங்களுக்கு ஒரு டோஸ் சுமார் 25 டாலர் முதல் 37 டாலர் வரை இருக்கும். இந்தியா போன்ற நாடுகளுக்குத் தடைசெய்யக்கூடியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, AZD1222 மற்றும் கோவிஷீல்ட் போன்று, பிரதிபலிக்காத வைரஸ் திசையன் எனும் ஒருவித தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (The Russian Direct Investment Fund-RDIF) சுமார் 92% செயல்திறனை இது கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த தடுப்பூசி அதன் திரவ வடிவத்தில் 18°C மற்றும் அதன் உறைந்த உலர்ந்த வடிவத்தில் சுமார் 2°C முதல் 8°C வரை சேமிக்கப்படுகிறது. ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைக் காட்டிலும் இதன் விலை “மிகக் குறைவாக” இருக்கும் என்று RDIF தெரிவித்துள்ளது.
இந்தியாவில், SII-ன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, "2°C மற்றும் 8°C-க்கு இடையில் வெப்பநிலையில் சேமிக்கக்கூடிய கோவிஷீல்ட், அரசாங்கத்திற்கு ஒரு டோஸுக்கு சுமார் $3 மற்றும் "பொது மக்களுக்கு" கிட்டத்தட்ட $7-8 விலையில் இருக்கும்" என்று கூறினார்.
இன்னும் என்ன கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படவில்லை?
எந்தவொரு கோவிட் -19 தடுப்பூசியைப் பற்றிய மிகப்பெரிய கேள்வி, அது உருவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“பாதுகாப்பின் காலம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. செயல்திறன் குறித்த நியாயமான தகவல் எங்களிடம் உள்ளது ஆனால், அது முழுமையடையாமல் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் ஆராயப்படாமல் இருக்கின்றன. தடுப்பூசியின் ஒருசில தாமதமான விளைவுகள் இன்னும் அறியப்படவில்லை என்பதால், பாதுகாப்பு குறித்த பாதி தகவல்களே எங்களிடம் உள்ளன” என்று டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறினார்.
இந்த தடுப்பூசியை இந்தியா எவ்வளவு விரைவில் பெற முடியும்? அனைவருக்கும் இது கிடைக்குமா?
SII ஏற்கனவே கோவிஷீல்டின் அளவுகளைச் சேமிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவுக்கு ஏற்கெனவே சுமார் 40 மில்லியன் டோஸ் தயாரித்ததாக இந்த மாதம் அறிவித்தது. இந்த தடுப்பூசி ,முன்னணி தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. பூனவல்லாவின் கூற்றுப்படி, ஏப்ரல் மாதத்திற்குள் இது பொது மக்களுக்குக் கிடைக்கும்.
நேர்மறையான முடிவுகளைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் AZD1222 அத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றால், டிசம்பர் மாதத்தில், அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக நிறுவனம் இந்தியாவில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பிக்கும் என்று கடந்த வாரம் அவர் கூறினார்.
பிப்ரவரி மாதத்திற்குள் மாதாந்திர உற்பத்தியை 50-60 மில்லியன் டோஸிலிருந்து 100 மில்லியனாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், டாக்டர் ரெட்டி போன்ற வல்லுநர்கள், பெரிய அளவிலான மக்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கு போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இருக்கிறார்களா என்பது போன்ற அம்சங்களையும் அணுகலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.