Advertisment

தொடர்ந்து 7-வது நாளாக பாதிப்பை விட மீள்கிறவர்கள் எண்ணிக்கை அதிகம்

இருப்பினும், கொவிட் சிகிச்சை  பெறுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருவதால், மருத்துவமனைகளுக்கு சுமை குறைகிறது.

author-image
WebDesk
New Update
தொடர்ந்து 7-வது நாளாக பாதிப்பை விட மீள்கிறவர்கள் எண்ணிக்கை அதிகம்

தொடர்ந்து ஏழாவது நாளாக, புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது. தொடர்ந்து 7 நாட்கள் என்ற முக்கிய  மைல்கல்லையும் இந்தியா கடந்தது.

Advertisment

கடந்த 22 நாட்களில், கிட்டத்தட்ட 17 நாட்கள், புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை புதிய பாதிப்புகளை விட அதிகாமாக காணப்படுகிறது.   இதன் விளைவாக, இந்தியாவில் கொவிட் சிகிச்சை  பெறுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12.65%வீதமாக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1/8 பங்கு. கடந்த 24 மணி நேரத்தில், 82,753 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் 73,272 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏழு நாட்கள், புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கும் போக்கு வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஏனெனில், இது தொற்று பரவல் உச்சநிலையை நோக்கி நகர்வதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், கொரோனா போன்ற ஒரு பெருந்தொற்று  பரவலில், உச்சநிலையைப் பற்றி பேசுவது அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

ஏனெனில், ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் தடுப்பாற்றல் நிலையை நாம் எட்டவேண்டும் (அ)  தடுப்பு மருந்து மூலம் வைரஸிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருந்தால் மட்டுமே இது போன்ற ஒரு தொற்றுநோய் முடிவுக்கு வர முடியும். இவை, இரண்டும் தற்போது  இந்தியாவில் சாத்தியமில்லை.

தினசரி நோய்த் தொற்று பாதிப்புகளின் தற்போதைய வீழ்ச்சி, ஒரு தற்காலிக நிகழ்வாக மட்டுமே இருக்க முடியும். மேலும், டெல்லி, கேரளா விஷயத்தில் நடந்ததைப் போல நிலைமை எந்த நேரத்திலும் மோசமடையக் கூடும்.

இருப்பினும், கொவிட் சிகிச்சை  பெறுபவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருவதால், மருத்துவமனைகளுக்கு சுமை குறைவதுடன், ஆபத்தான கட்டத்தில் இருப்பவர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். இதன் விளைவாக, இறப்பு விகிதத்தையும் குறைக்க முடியும்.

கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதால், இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. 22,000-க இருந்த மகாராஷ்டிராவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 2 வாரங்களாக 16,000 என்ற வரம்பில் தான்  காணப்படுகின்றன. இதன் விளைவாக,  அங்கு இந்தியாவில் கொவிட் சிகிச்சை  பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த 20 நாட்களில், 3 லட்சத்திலிருந்து சுமார் 2.35 லட்சமாக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த சிகிச்சை  பெறுபவர்களின் எண்ணிக்கையில்    27 வீதமாக உள்ளது

நாட்டின் இரண்டாவது அதிகபட்ச  கொரோனா பாதிப்பைக் கொண்ட மாநிலமான ஆந்திராவிலும்  தற்போது புதிய பாதிப்புகள் குறையத் தொடங்கின. அதன் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போது 5,000க்கும் குறைவாக பதிவு செய்யப்படுகிறது.

publive-image

இதற்கிடையே, கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுகின்றன. கடந்த புதன்கிழமை, மாநிலத்தில் முதன் முறையாக 10,000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன.  ஆனால், மறுநாள் இந்த எண்ணிக்கை 5,500 என்ற குறைந்தது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில்    (வெள்ளிக்கிழமை) கொரோனா நோய்த் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  9,250ஆக அதிகரித்து.

வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக உயரக்கூடும் என்று கேரள சுகாதார அமைச்சர் கே கே ஷைலாஜா கூறினார். "தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20,000-ஐ விட அதிகமாக இருக்கும். அதை, 15,000 க்கும் குறைவான நிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நவம்பர் மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு கே.கே. ஷைலஜா பல காரணங்களை மேற்கோள் காட்டினார்.

“ஜூன்- செப்டம்பர் மாதங்களுக்கு இடையே, பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் ஒன்பது லட்சம் பேர் கேரளாவிற்கு திரும்பினர். மக்கள் தொகை அடர்த்தியான மாநிலங்களில் ஒன்றாகவும் கேரளா உள்ளது. ஓணம் பண்டிகை திருவிழாவின் போது, மக்கள் வழிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. இத்தகைய, காரணங்களால் ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்தன.  அதன் பின், அரசு நிர்வாகத்திற்கு  எதிராக எதிர்க்கட்சி மேற்கொண்ட தடுப்புப் போராட்டங்கள் (blockade)   பாதிப்புகளை அதிகரித்தது. கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது, நோய் பரவாமல் தடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் நீர்த்து போக செய்ததோடு மட்டுமல்லாமல், அரசாங்கம் தேவையின்றி கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்ற உணர்வையும் மக்களிடத்தில்  கொடுத்தது,”என்று அவர் கூறினார்.

பொது சுகாதார நிபுணரும், மாநிலத்தின் கோவிட் -19 மேலாண்மைக் குழுவின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் முகமது அஷீல் கூறுகையில்,“தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5,000 (அ) 10,000-ஐ கடந்திருக்கிறதா?என்பது முக்கியமல்ல; ஒவ்வொரு நாளும் 5,000 அல்லது 10,000  பாதிப்புகளை கையாளும் திறன் நமது பொது சுகாதார அமைப்புகளுக்கு உள்ளதா என்பதுதான் முக்கியமான கேள்வி. கேரளா, கடந்த நான்கரை மாதங்களில் தனது சமூக கண்காணிப்பு மற்றும் சுகாதார கட்டமைப்புகளை வலுபடுத்தியது. எனவே, தற்போதைய பாதிப்பு உச்சநிலையை சமாளிக்க கேரளா சிறந்த நிலையில் உள்ளது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment