புதிய ஆய்வு: கோவிட்-19 இறப்புகள் நுரையீரலில் உள்ள வைரஸ் அளவுடன் தொடர்பு

கோவிட்-19 நோயால் இறந்த மக்கள், நோய்களிலிருந்து தப்பிய கடுமையான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் போலவே சராசரியாக 10 மடங்கு அதிகமான வைரஸை தங்கள் சுவாசப்பாதையில் வைத்திருந்தனர் என்று இந்த புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Covid 19 deaths, virus lungs, new research, covid 19, coronavirus, covid 19 explained, புதிய ஆய்வு, கோவிட்-19 இறப்புகள், கொரோனா இறப்புகள் நுரையீரலில் உள்ள வைரஸ் அளவுடன் தொடர்பு, coronavirus expalained, covid 19 india, NYU Grossman school of medicine

கொரோனா தொற்றுநோயில் காணப்படும் அதிகபட்சமான இறப்பு விகிதங்களுக்குப் பின்னால் நுரையீரலில் கொரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. நியூயார்க் பல்கலைக்கழகம் கிராஸ்மேன் மருத்துவக் கல்லூரியின் (NYU Grossman School of Medicine) செய்தி அறிக்கையின்படி, பாக்டீரியா நிமோனியா அல்லது உடலின் நோயெதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பின் அதிகப்படியான எதிர்விளைவு போன்றவை ஒரே நேரத்தில் ஏற்படும்போது நோய்த்தொற்றுகள் மரணத்தின் அபாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்ற முந்தைய சந்தேகங்களுக்கு மாறாக இந்த முடிவுகள் வேறுபடுகின்றன. இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் இதை நேச்சர் மைக்ரோபயாலஜி அய்விதழில் வெளியிட்டுள்ளனர்.

கோவிட் -19 நோயால் இறந்த மக்கள், தொற்று நோய்களிலிருந்து தப்பிய கடுமையான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளைப் போலவே சராசரியாக 10 மடங்கு வைரஸை தங்கள் கீழ் சுவாசப் பாதையில் வைத்திருந்தனர் என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆய்வாளர்கள் இறப்புக்கு காரணம் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுநோயைக் குறிக்கும் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும், இது தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு அடிக்கடி கொடுக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளின் (antibiotics) காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

“நுரையீரலை பாதிக்கும் அதிக எண்ணிக்கையிலான வைரஸ்களை சமாளிக்க முடியாத உடலின் தோல்வியே கோவிட்-19 தொற்றுநோய்களில் இறப்புகளுக்கு பெரும்பாலும் காரணம் என்று எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன” என்று இந்த ஆய்வை நடத்திய ஆசிரியர்களில் ஒருவான இம்ரான் சுலைமான் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் -19 இறப்பில் இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள், வைரஸ் அளவு மற்றும் நோயெதிர்ப்பு செல்களின் பங்கை தெளிவுபடுத்த இந்த ஆய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுலைமானை மேற்கோள் காட்டி, இந்த ஆய்வு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கீழ் சுவாசப்பாதை சூழல் பற்றிய மிக விரிவான ஆய்வை அளிக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லாங்கோன் மையத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 589 ஆண்கள் மற்றும் பெண்களின் நுரையீரலில் இருந்து பாக்டீரியா மற்றும் பூஞ்சை மாதிரிகளை சேகரித்தனர். இவர்கள் அனைவருக்கும் வெண்டிலேட்டர் சிகிச்சை தேவைப்பட்டது. அதில் 142 பேர்கொண்ட ஒரு குழுவினர் அவர்களின் சுவாசப் பாதைகளை சுத்தம் செய்ய ஒரு ப்ரோன்கோஸ்கோபி நடைமுறையைப் பெற்றனர். இந்த் அஆய்வு அவர்களின் கீழ் சுவாசப் பாதையில் உள்ள வைரஸின் அளவை பகுப்பாய்வு செய்தது. மேலும், உயிர் பிழைத்த நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, ​​இறந்தவர்களுக்கு சராசரியாக 50% குறைவான நோயெதிர்ப்பு வேதியியல் உற்பத்தி குறைவாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 deaths virus lungs new research

Next Story
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்கா; அடுத்து என்ன நடக்கும்?US troops have left Afghanistan, taliban, world news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com