சுயமாக கோவிட் -19 பரிசோதனை செய்துகொள்வதற்கு மைலேப் கோவிசெல்ஃப் கிட்!

Covid-19 home test kits: இந்த கிட் தற்போதுள்ள ஆய்வகங்களின் மீதான சுமையைக் குறைக்கும். வீட்டு பரிசோதனைக்குத் தேவையான மனிதவளத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும், விரைவாக முடிவுகளை வழங்கும்.

Covid-19 home test kits, covid 19 home test kit how to use it, கோவிட் 19 வீட்டு பரிசோதனை கிட், மைலேப் கோவிசெல்ஃப், மைலேப் கோவிசெல்ஃப் பரிசோதனை கிட், Mylab Coviself, the self-testing Covid-19 kit, Mylab Coviself covid 19 test kit, covid 19 india

தங்களுக்கு கோவிட்-19 தொற்று இருக்கலாம் என்று சந்தேகப்படுவர்கள் வீட்டிலேயே சுயமாக பரிசோதனை செய்துகொள்வதற்கு நாட்டிலேயே முதல் கோவிட் 19 சுய பரிசோதனை கிட்டுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இந்த கிட் தற்போது நிலவும் பரிசோதனை ஆய்வகங்களின் சுமையை குறைக்கும். வீடுகளில் பரிசோதனை செய்வதற்கு தேவையான மனிதவளத்திற்கான அழுத்தத்தையும் குறைப்பதோடு விரைவான முடிவுகளையும் அளிக்கும்.

இருப்பினும், இது 100 சதவீதம் செயல்திறன் கொண்டதல்ல, ஒரு நபருக்கு கோவிட் -19 தொற்று இருந்தாலும் தவறாக நெகட்டிவ் என காட்ட வாய்ப்புள்ளது.

மைலேப் கோவிட்-19 வீட்டு பரிசோதனை கிட்

புனேவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் இந்த மைலேப் கிட்டை வடிவமைத்துள்ளது. இது விரைவான ஆண்டிஜென் கொள்கையை பின்பற்றுகிறது. மூக்கில் பரிசோதனை பஞ்சால் துடைத்து மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து 15 நிமிடங்களுக்குள் முடிவுகளைத் தருகிறது. “இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் இதுபோன்ற கருவிகளின் விலையில் ஒரு பகுதி விலையிலேயே மில்லியன் கணக்கான கிட்களை நாங்கள் இங்கே கிடைக்கச் செய்வோம்” என்று மைலேப் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹஸ்முக் ராவல் கூறினார். இந்த கிட் விலை ரூ.250 ஆகும். மைலேப்பின் தற்போதைய உற்பத்தி திறன் வாரத்திற்கு 70 லட்சம் கிட் ஆகும். இது அடுத்த பதினைந்து வாரங்களில் வாரத்திற்கு ஒரு கோடி கிட் வரை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

“பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அந்நாட்டு குடிமக்களை சுயமாக பரிசோதனை செய்டுகொள்வதற்கு அனுமதித்துள்ளன. மேலும், தொற்று சங்கிலியை உடைக்க இது ஒரு சக்திவாய்ந்த கருவியாக கருதப்படுகிறது. இதை எளிதாக பயன்படுத்துவதற்கு இந்த பரிசோதனை மைலேப்பின் AI பவர்ட் மொபைல் ஆப்புடன் இணைந்துள்ளது. இதன் மூலம் இந்த கிட்டை பயன்படுத்துபவர் தொற்று நிலையை அறிந்து கொள்ள முடியும். இதன் விளைவாக ஐ.சி.எம்.ஆருக்கு நேரடியாக கண்டுபிடிக்கும் தன்மைக்கு சமர்ப்பிக்கலாம். மேலும், பரிசோதனை முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். கோவிட் பரவல் இரண்டாவது அலை மற்றும் அடுத்தடுத்த அலைகளைத் தணிப்பதில் இந்த சிறிய நடவடிக்கை ஒரு பெரிய பாய்ச்சலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் இயக்குனர் சுஜித் ஜெயின் கூறினார்.

கோவிட் வீட்டு பரிசோடனை கிட்டை யார் பயன்படுத்தலாம்?

தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது கோவிட் தொற்று நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வீட்டிலேயே பரிசோதனை நடத்த வேண்டியவர்களுக்கு மட்டுமே இந்த பரிசோதனையை ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது. தொற்று உறுதியானால், அந்த நபர் கோவிட் -19 தொற்று நோயாளியாகக் கருதப்படுவார். மேலும், தொற்றை உறுதிப்படுத்துகிற ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை தேவையில்லை. இந்த சோதனை மொபைல் ஆப் உடன் இணைந்துள்ளது. இது ஐசிஎம்ஆர் தளத்தில் தரவை நேரடியாக தொடர்பு கொள்ள உதவுகிறது. வணிகர்கள், அரங்க உரிமையாளர்கள் அல்லது பயணிகளுக்கு பொது இடங்களில் பொதுத் வெப்பத் திரையிடலுக்கு இந்த சோதனை அறிவுறுத்தப்படவில்லை.

ஒரு நபருக்கு அறிகுறிகள் இருந்து இந்த கிட்டின் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால் அவர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த பரிசோதனைக்கு ரூ.250 செலவாகும். ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனைக்கு விலை ரூ.500 முதல் 1500 வரையிலும் ஆய்வகத்தில் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கு வெவ்வேறு மாநிலங்களில் ரூ.300-900 வரையிலும் செல்வாகும்.

கோவிட்-19 வீட்டு பரிசோதனை கிட் பயன்படுத்துவதற்கான செயல்முறை

இந்த கிட் ஒரு முன் நிரப்பப்பட்ட பிரித்தெடுக்கும் குழாய், நாசியை துணியால் துடைப்பது, ஒரு பரிசோதனை அட்டை மற்றும் ஒரு பயோ பை உடன் வருகிறது. சோதனையை மேற்கொள்பவர் முதலில் கோவிசெல்ஃப் மொபைல் பயன்பாட்டில் அனைத்து விவரங்களையும் பதிவிறக்கம் செய்து நிரப்ப வேண்டும். பின்னர், அந்த நபர், தனது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர் கிட் வைக்கும் மேற்பரப்பை சுத்தம் செய்ய வேண்டும். அவர் தனது மூக்கில் 2-4 செ.மீ உள்ளே அல்லது மூக்கின் ஆழத்தை தொடும் வரை பச்சை நுழைக்க வேண்டும். பின்னர், அதை பிரித்தெடுக்கும் குழாயின் உள்ளே நுழைத்து குழாய் இறுக்கமாக மூடி திரவத்துடன் கலக்க வேண்டும். பிரித்தெடுக்கும் குழாயில் இருந்து இரண்டு துளி பரிசோதனை அட்டையில் கொட்டப்படுகிறது. இதன் முடிவு 15 நிமிடங்களுக்குள் வருகிறது. ஒரு நபருக்கு கோவிட்-19 தொற்று உறுதி என்றால், பரிசோதனை அட்டையில் 2 கோடு தோன்றும். மார்க்கர் ‘டி’ மற்றும் தரக் கட்டுப்பாட்டு கோடு ‘சி’ ஆகியவற்றுக்கு இரண்டு கோடுகள் தோன்றினால் தொற்று உறுதி. மார்க்கர் ‘சில் ஒரு கோடு தோன்றினால் நெகட்டிவ் ஆகும்.

இதையடுத்து, அந்த குழாய் மற்றும் பயோ பை, மூக்கில் நுழைத்து சேகரிக்கப்பட்ட பஞ்சு ஆகியவற்றை மூடி உயிரியல் மருத்துவக் கழிவுகளாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

இந்த பரிசோதனை எப்போது செல்லாது என கருதப்படுகிறது?

பரிசோதனை முடிவுகளைக் காடுவதற்கு 20 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டால் அல்லது மார்க்கர் ‘சி’ முழுவதும் ஒரு கோடு தோன்றவில்லை என்றால் பரிசோதனை தவறானது.

கோவிட் -19 வீட்டு பரிசோதனை கிட்டின் குறைபாடுகள்

கோவிட்-19 பாதிக்கப்பட்ட ஒருவர் அறிகுறி இல்லாமல் இருந்தால் மற்றும் நெகட்டிவ் என பரிசோதிக்கபட்டால், இந்த பரிசோதனை தவறான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும். இது விரைவான ஆன்டிஜென் பரிசோதனை, விரைவான பொதுமக்கள் கண்காணிப்பு கருவியாக செயல்படும் அதே வேளையில், பரிசோதனைக்கு இதை நம்பியிருப்பது நல்லதல்ல. இது ஒரு துணை பரிசோதனையாக மட்டுமே இருக்க வேண்டும். பெரிய அளவில் மொத்தமான பரிசோதனையாக உருவாக்கக்கூடாது. இந்த பரிசோதனை தவறாக நெகட்டிவ் முடிவுகள் அளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆர்.டி-பி.சி.ஆர் தான் கோவிட் -19 பரிசோதனைக்கான தரமாக கருதப்படுகிறது. அறிகுறி உள்ள நபர் விரைவான ஆன்டிஜென் பரிசோதனை மூலம் கோவிட்-19 நெகட்டிவ் என்று பரிசோதனை செய்தால் அவருக்கு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

பரிசோதனைக்கான மாதிரி சரியாக சேகரிக்கப்படாவிட்டால் அல்லது மூக்கில் பஞ்சு துடைக்கப்படும் பஞ்சு மாசுபட்டால் பரிசோதனை ஒரு பயனற்ற செயல்முறையாக இருக்கும். பரிசோதனைக்கு நாசியில் இருந்து மாதிரியை சேகரிப்பதற்கு முறையாக நுழைப்பது மற்றும் பிரித்தெடுத்தல் தேவைப்படுகிறது. பொதுவாக சாமானியர்களுக்கு இல்லாத இந்த அடிப்படை பயிற்சி தேவைப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 home test kits how to use it

Next Story
சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்கா கூறுவது ஏன்?Why Nancy Pelosi called for a boycott of 2022 Beijing Winter Olympics
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com