Advertisment

பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கிய கொரோனா: இன அடிப்படையும் காரணமா?

Covid 19 infection gender race research கோவிட் -19 நோயாளிகளுக்கான வயது, இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைக் குறிக்கும் தரவுகளைச் சேகரித்த ஒரே இரண்டு அமெரிக்க மாநிலங்கள் இவைதான்.

author-image
WebDesk
New Update
Covid 19 infection gender race research Tamil News

Covid 19 infection gender race research Tamil News

Covid 19 infection gender race research Tamil News : தொற்றுநோயின் ஆரம்பக் கட்டங்களிலிருந்து, ஆண்கள் கோவிட் -19-க்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது. அவர்கள் பெண்களை விட அடிக்கடி நோய்வாய்ப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் இறப்பு விகிதங்களும் அதிகமாக உள்ளன. ஆனால், ஒரு புதிய ஆய்வில் பாலினத்தை விட சமூக பின்னணிகள் நோய் விளைவுகளில் அதிக பங்கு வகிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisment

இரண்டு அமெரிக்க மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, பொது உள் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பல முந்தைய ஆய்வுகளைப் போலவே, இதுவும் பெண்களை விட ஆண்கள் கோவிட் -19-க்கு அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டறிந்தது. ஆனால், அதே இனக்குழுவிற்குள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, கறுப்பின பெண்கள் வெள்ளை ஆண்களை விட கோவிட் -19-ஆல் இறப்பதற்கு 4 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆசிய அமெரிக்க ஆண்களை விட கறுப்பின பெண்கள் கோவிட் -19-ஆல் இறப்பது மூன்று மடங்கு அதிகம். ஆயினும்கூட கறுப்பின பெண்கள் கறுப்பின ஆண்களை விடவும், வெள்ளை பெண்கள் வெள்ளை ஆண்களை விடவும், ஆசியப் பெண்கள் ஆசிய அமெரிக்க ஆண்களை விடக் குறைவாகவும் இறப்பு சதவிகிதத்தில் உள்ளனர்.

வெள்ளை, கருப்பு மற்றும் ஆசிய / பசிபிக் தீவுவாசி ஆகிய மூன்று இனக்குழுக்களுக்கான இரு பாலினங்களையும் இந்த ஆய்வு பார்க்கிறது. இனம் மற்றும் பாலினம் ஆகிய இரண்டாலும் வரையறுக்கப்பட்ட ஆறு குழுக்களில், கறுப்பின ஆண்கள் அதிக கோவிட் -19 இறப்பு விகிதங்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இது வெள்ளை ஆண்களிடையே உள்ள விகிதங்களை விட ஆறு மடங்கு அதிகம்.

publive-image

இந்த கண்டுபிடிப்புகள், சமூக குழுக்கள் முழுவதும் மற்றும் இடையில் கோவிட் -19 சுகாதார விளைவுகளில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்குவதற்கு, சமூகத்தின் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் ஒரு முக்கிய காரணி என்று ஆராய்ச்சியாளர்கள் வலுவாகத் தெரிவிக்கின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள், செப்டம்பர் 2020-ன் பிற்பகுதியில் ஜார்ஜியா மற்றும் மிச்சிகனில் இருந்த புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தினர். கோவிட் -19 நோயாளிகளுக்கான வயது, இனம் மற்றும் பாலினம் ஆகியவற்றைக் குறிக்கும் தரவுகளைச் சேகரித்த ஒரே இரண்டு அமெரிக்க மாநிலங்கள் இவைதான். ஒட்டுமொத்தமாக, அவர்கள் ஜார்ஜியா மற்றும் மிச்சிகன் இரண்டிலும் இதே போன்ற பேட்டர்னை கண்டறிந்தனர்.

மிச்சிகன் "சாத்தியமான" மற்றும் "உறுதிப்படுத்தப்பட்ட" இறப்புகளைப் பட்டியலிட்டது, ஜார்ஜியா "உறுதிப்படுத்தப்பட்ட" மரணங்களை மட்டுமே பட்டியலிட்டது என்று தரவு கிடைப்பதில் உள்ள வரம்புகளை ஆசிரியர்கள் மேற்கோள் காட்டினர். மேலும், தொழில் மற்றும் மாநில அளவிலான கொள்கைகள், அண்டை பண்புகள் மற்றும் சமூக பொருளாதார நிலை போன்றவைத் தொடர்பாக இந்தத் தரவை ஆராய்வது சக்தி மற்றும் ஒடுக்குமுறைகளைக் குறைப்பதில் விளைவுகளை ஏற்படுத்துவதற்குத் தேவைப்படுகிறது" என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

மிச்சிகனில், கறுப்பின ஆண்களின் இறப்பு விகிதம், கறுப்பின பெண்களின் விகிதத்தை விட 1.7 மடங்கு அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளையர்களிடையே இறப்பு விகிதம், பெண்களை விட ஆண்களுக்கு 1.3 மடங்கு அதிகம். இந்த மாறுபாடு உயிரியலைக் காட்டிலும் சமூக ஏற்றத்தாழ்வுகளின் ஒப்பீட்டு முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்று அவர்கள் கூறினர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment