கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரிக்க காரணம் என்ன?

கேரளாவில் சில வாரங்களாக இறப்பு எண்ணிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

கேரளாவில் சில வாரங்களாக இறப்பு எண்ணிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

author-image
WebDesk
New Update
கேரளாவில் மீண்டும் தொற்று அதிகரிக்க காரணம் என்ன?

Amitabh Sinha

ஒரு காலத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்த கேரளா, பல வாரங்களாக ஒப்பீட்டளவில் அதிகப்படியான பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதன் மூலம், கொரோனாவால் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 50,000- ஐ எட்டியது.

Advertisment

கடந்த ஒரு மாதத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கேரளாவின் தினசரி கொரோனா பாதிப்பு 4.01 சதவீதம், தேசிய தினசரி பாதிப்பு விகிதத்தை (2.8 ) விட மிக அதிகமாக உள்ளது. உண்மையில், அதிக  கேஸ் லோடுகளை ( உதாரணாமாக, 20,000 பாதிப்புகள்) கொண்ட மாநிலங்கள் பட்டியலில், பாதிப்பு விகிதங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் பஞ்சாபிற்கு அடுத்த படியாக கேரளா உள்ளது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்கள் கொண்ட மாநிலங்களில்  ஒன்றாக கருதப்படும் கேரளாவில், சில வாரங்களாக இறப்பு எண்ணிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதுவரை, கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  225  ஆக உள்ளது. அவற்றில் 43 உயிரிழப்புகள் கோவிட் - 19 அல்லாத    பிற காரணங்களால் நிகழ்ந்தன என்று  அம்மாநில அரசு தெரிவித்தது.

publive-image

மே மாதம் முதல் வாரத்தில், பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட  பின்னர் கேரளாவில் கொரோனா தொற்றுப் பாதிப்புகள்  மீண்டும் ஆரம்பித்தது. அந்த நேரத்தில், கண்டறியப்பட்ட  பெரும்பாலான பாதிப்புகள் பெரும்பாலானவை வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 5  லட்சம் பேர் கேரளாவிற்கு திரும்பியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போதும் கூட, மாநிலத்தின் மொத்த  பாதிப்புகளில் நான்கில் ஒரு பங்கு, மாநிலங்களுக்கிடையேயான அல்லது சர்வதேச பயண வரலாறைக்  கொண்ட மக்களாக உள்ளனர். இருப்பினும், இந்த தொற்று, உள்ளூர் மட்டத்திலும் பரவியுள்ளது.  கேரளாவின் கடலோர மாவட்டங்கள் கொரோனாவால் மோசமாக பாதிப்படைந்துள்ளன. அனைவருக்கும் முன்னதாகவே,சமூகப் பரவலை கேரளா மாநிலம் ஒப்புக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது .

Advertisment
Advertisements

கேரளாத் தவிர, மகாராஷ்டிரா உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில், தங்களது ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்தன. உத்தரப்பிரதேசம் முதன்முறையாக கொரோனா பாதிப்பு  5000 ஐத் தாண்டியது, மகாராஷ்டிராவின் பாதிப்பு 13,000க்கும் அதிகமானது.

இந்தியாவில், புதன்கிழமை மட்டும் 69,000 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.36 லட்சமாக அதிகரித்தது.  கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60,091 என்ற அளவை அடைந்து உள்ளது . குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 21 லட்சத்தை தாண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும்? வேலூர் சி.எம்.சி மருத்துவ நிபுணருடன் உரையாடல்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 9 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரையிலும் மொத்தமாக 3 கோடிக்கும் அதிகமான  கொரோனா மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே  இந்தியாவை விட அதிகமான பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன. மருத்துவ பரிசோதனையில் ஓரளவுக்கு முன்னால் உள்ள ரஷ்யாவை, இன்று இந்தியா முறியடிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, அதிகப்படியான கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை தற்போது உத்தரபிரதேசம் முந்தியது. சோதனையை 40 லட்சத்துக்கும் அதிகமாக அதிகரித்ததால், கொரோனா பரிசோதனை திறனில் உத்தரப்பிரதேசம்  மாநிலம் முன்னணியில் உள்ளது. இருப்பினும் இவற்றில் பெரும்பாலானவை ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள் மூலமாகவே செய்யப்பட்டுள்ளன. ஆர்டி பி.சி.ஆர் அடிப்படையிலான   சோதனைகளை தமிழகம் தொடர்ந்து பயன்படுத்துகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Virus Corona Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: