கை கழுவுதல் பற்றி பேசுகையில், நீர்வள மேலாண்மை பற்றியும் பேச வேண்டும்

குளோரின் மாத்திரைகள், ப்ளீச்சிங் பவுடர், சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் உள்ளிட்ட சுத்திகரிக்கும் ரசாயனங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தேசிய பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்யவும்,நிர்வகிக்கவுமாரு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) ஆலோசனையை வெளியிட்டது

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான கை கழுவும் திரவங்கள் நல்ல பயனைத் தரும் என்று சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக, ஆல்கஹால் அடிப்படையிலான கை கழுவும் திரவங்கள் கிடைக்காத கிராமப்புறங்களில்,”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைகள் என்ன கூறுகிறது?

மாநில அரசின் சுகாதாரப் பொறியியல் துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் விநியோகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்ட மக்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், குடிசை குரியிருப்புப் பகுதிகள் போன்றவைகளில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

குளோரின் மாத்திரைகள், ப்ளீச்சிங் பவுடர், சோடியம் ஹைபோகுளோரைட் கரைசல் உள்ளிட்ட சுத்திகரிக்கும் ரசாயனங்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் பட்டியலின் கீழ், சுத்திகரிக்கும் ரசாயனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீர்வளங்களை அவ்வப்போது சோதனை செய்யும் பொருட்டு, கிராமங்களுக்கு கள சோதனை கருவிகளை அனுப்புமாறும் , சோதனை கருவிகளின் விநியோகத்தை உறுதிப்படுத்த, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

பொது குடிநீர் குழாய்களில் மக்கள் சமூக விலகல் பின்பற்றுவதை உறுதி செய்ய, தண்ணீர் கிடைக்கும் நேரத்தை அதிகரிக்கு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றது. பொது மக்களின் குறைகளை தீர்க்கும் வழிமுறைகளை செயல்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் துயரங்கள் : கைகளை சுத்தம் செய்வது, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக கருதப்பட்டாலும், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்பதே ஒரு நீண்ட நெடிய போராட்டமாகத் தான் இருந்து வருகிறது.

2017 ஆம் ஆண்டில், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், 2001 ஆம் ஆண்டில், சராசரி தனிநபர் நீர் இருப்பு 1820 கன மீட்டராக மதிப்பீடு செய்யப்பட்டது. 2011ம் ஆண்டில், இது 1545 கன மீட்டராக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 2025 மற்றும் 2050 ஆண்டுகளில், தனிநபர் நீர் இருப்பு முறையே 1341 மற்றும் 1140 ஆகக் குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வருடாந்திர தனிநபர் நீர் இருப்பு, 1700 கன மீட்டருக்கும் குறைவானதாக இருந்தால், நீர் நெருக்கடி நிலையாக கருதப்படுகிறது. அதேசமயம்,வருடாந்திர தனிநபர் நீர் இருப்பு, 1000 கன மீட்டருக்கும் குறைவானதாக இருந்தால் நீர் பற்றாக்குறை நிலையாக கருதப்படுகிறது. ஒழுங்கற்ற மழைப்பொழிவு முறைகள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் தேசிய சராசரியை விட நீர் இருப்பு குறைவாகவே உள்ளது. இந்த பகுதிகள் நீர் நெருக்கடி/ பற்றாக்குறை பகுதிகளாக கருதப்படலம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு, WaterAid என்னும் சர்வதேச நீர் மற்றும் சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், குடியிருப்புப் பகுதிகளில், சுத்தமான தண்ணீரை மிகக் குறைந்த அளவு அணுகும் 10 நாடுகளில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்தியாவில், 16.3 கோடி மக்கள் சுத்தமான தண்ணீரை அணுக முடியாதவர்களாக உள்ளனர்.

அதே அறிக்கை அரசாங்கத்தின் முயற்சிகளையும் கவனத்தில் கொண்டு, “ தூய்மையான தண்ணீரை அதிக மக்களுக்கு கொண்டு செல்லும் மிகவும் மேம்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. இருப்பினும், நிலத்தடி நீர்மட்ட வீழ்ச்சி, தொழிச்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபாடு, வேளாண்மை துறைகளின் மோசமான நீர்வள மேலாண்மை போன்றவைகளால் இந்தியா போசமான சவால்களை எதிர்கொள்கிறது. காலநிலை மாற்றம் தீவிரமடையும் போது, இந்தியாவின் நீர் அழுத்தம் இன்னும் அதிகமாகும்” என்று கூறப்பட்டது.

ஜல் சக்தி அமைச்சகம் தனது இணையதளத்தில்,“நாட்டின் பெரும்பாலான ஆறுகள் மாநிலங்களுக்கு இடையிலானவை என்பதால், நதிநீரை ஒழுங்குபடுத்துவதிலும்,மேம்படுத்துவதிலும் மாநிலங்களுக்கு கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுக்கின்றன. இந்திய அரசியலமைப்பில், நீர் என்பது அதாவது மாநில பட்டியலில் நுழைவு 17 இல் சேர்க்கப்பட்டுள்ளது. எவ்வாராயினும், மத்திய பட்டியலில் இருக்கும் நுழைவு 56 இன் விதிமுறைக்கு, நுழைவு 17 உட்பட்டதாக கருதப்படும்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Web Title: Covid 19 pandemic wash your hands directive india water issues

Next Story
திருச்சூர் பூரம் திருவிழா : அறிந்ததும், அறியாததும்!!!thrissur pooram keralas largest temple festival - திருச்சூர் பூரம் திருவிழா : அறிந்ததும், அறியாததும்!!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express