80% கோவிட் நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைபாடு: அதிர்ச்சி ஆய்வு

வயதானவர்கள், கொமொர்பிடிட்டி (comorbidities) நோயாளிகள் மற்றும் நர்சிங் ஹோம் குடியிருப்பாளர்கள் போன்றவர்கள், கோவிட்-19-ன் முக்கிய இலக்கு நபர்களாக உள்ளனர்.

covid 19 patients deficit in vitamin d corona latest tamil news
Covid 19 patients deficit in Vitamin D

Covid 19 patients deficit in Vitamin D Tamil News: 216 கோவிட் -19 நோயாளிகளைக் கொண்ட ஓர் ஆய்வில், 80 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த நோயாளிகள் ஸ்பெயினில் உள்ள யுனிவர்சிட்டாரியோ மார்குவேஸ் டி வால்டெசிலாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், பெண்களை விட ஆண்களுக்கே வைட்டமின் டி அளவு குறைவாக இருந்திருக்கிறது. குறைந்த வைட்டமின் டி அளவைக் கொண்டவர்கள், அழற்சி குறிப்பான்களின் சீரம் அளவு அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வு, மருத்துவ உட்சுரப்பியல் மற்றும் வளர்சிதை மாற்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. “வைட்டமின் டி குறைபாட்டைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது ஓர்விதமான அணுகுமுறை. குறிப்பாக வயதானவர்கள், கொமொர்பிடிட்டி (comorbidities) நோயாளிகள் மற்றும் நர்சிங் ஹோம் குடியிருப்பாளர்கள் போன்றவர்கள், கோவிட்-19-ன் முக்கிய இலக்கு நபர்களாக உள்ளனர்” என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியர் ஜோஸ் எல் ஹெர்னாண்டஸ் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆதாரம்: The Endocrine Society

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 patients deficit in vitamin d corona latest tamil news

Next Story
சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர் கோட்ஸே குறித்து கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து!Loksabha election results 2019
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express