Advertisment

ஒடிசா பழங்குடிகள் மத்தியில் பரவும் கொரோனா ; இந்த சூழல் ஏன் அச்சமூட்டுவதாக இருக்கிறது?

ஒடிசாவில் இருக்கும் 62 பழங்குடியின குழுவில் 13 பிரிவினர் பி.வி.டி.ஜியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே இது அதிக எண்ணிக்கை கொண்டதாகும்.

author-image
WebDesk
New Update
Covid-19 reaches remote tribes of Odisha: why it’s a matter of concern

Aishwarya Mohanty

Advertisment

Covid-19 reaches remote tribes of Odisha: why it’s a matter of concern :  ஒடிசாவில் இருக்கும் இரண்டு பழங்குடியின மக்களில் 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநில அரசை கொரோனா குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு தேசிய பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. போண்டா (Bonda) பழங்குடியில் ஒருவருக்கும், திதாயி (Didayi) பழங்குடியில் 5 பேருக்கும் ஆகஸ்ட் இறுதி வாரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தேசிய பழங்குடியினர் ஆணையம் இதனை ”மிகவும் கவலை அளிக்கும்” விசயமாக குறிப்பிட்டுள்ளது. ஒடிசாவில் 1,62,920 நபர்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர், 36, 473 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு (Particularly Vulnerable Tribal Group) என்றால் என்ன?

குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு என்பது (முன்பு, தொன்மையான பழங்குடிகள்) பழங்குடியினரின் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தன்மை, தேங்கி நிற்கும் நிலை அல்லது குறைந்து வரும் மக்கள் தொகை, குறைவான கல்வி அறிவு மற்றும் விவசாயத்திற்கு முந்தைய நிலையான வேட்டையாடுதல், உணவு சேகரிப்பு மற்றும் கொத்துக்காடு விவசாய முறை போன்றவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

பழங்குடிகளிலும் முன்னேற்றத்தில் சமநிலை இல்லை என்று தேபர் ஆணையம் (1960-1961) அறிவித்ததை தொடர்ந்து குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழு என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. நான்வாது ஐந்தாண்டு திட்டங்களின் போது, பட்டியல் பழங்குடியினருக்குள், வளர்ச்சியில் கீழ் நிலையில் இருக்கும் பழங்குடியினரை அடையாளம் காண உட்பிரிவு உருவாக்கப்பட்டது. முன்பு இது ப்ரிமிட்டிவ் ட்ரைபல் க்ரூப் என்று அழைக்கப்பட்டது. தற்போது பி.வி.டி.ஜி என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஒடிசாவில் இருக்கும் குறிப்பாக பாதிக்கப்பட கூடிய பழங்குடி குழுக்கள் எது?

ஒடிசாவில் இருக்கும் 62 பழங்குடியின குழுவில் 13 பிரிவினர் பி.வி.டி.ஜியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே இது அதிக எண்ணிக்கை கொண்டதாகும். ஒடிசாவில் இந்த 13 பிரிவினரின் மொத்த மக்கள் தொகை 2.5 லட்சம். இவர்கள் 1,429 கிராமங்களில், 11 மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். போண்டா(Bonda), பிர்ஹோர்(Birhor), சுக்தியா(Chuktia), புன்ஜியா (Bhunjia), திதாயி (Didayi), துங்கரியா(Dungaria), கந்தா(Kandha), மலைக் கரியா (Hill Kharia), ஜுவாங் (Juang), குடியா கோந்த் (Kutia Kondh), லஞ்சியா (Lanjia), சவோரா (Saora) ,லோதா (Lodha), மன்கிரிதா (Mankirida), பௌடி (Paudi), புயான்(Bhuyan) சவோரா(Saora )ஆகிய குழுக்கள் பி.வி.டி.ஜியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போண்டா மற்றும் திதாயி இனக்குழுக்கள் மல்கங்கிரி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் ஆந்திராவும், மேற்கு பகுதியில் சத்தீஸ்கரும் உள்ளது. போண்டா இன மக்கள் மல்கங்கிரி மாவட்டத்தில் இருக்கும் கிழக்கு தொடர்ச்சி மலையின் 32 மலை கிராமங்களில் வசித்து வருகின்றனர். 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து முதன்முறையாக புலம் பெயர்ந்து இங்கு வந்து தங்கியதாக நம்பப்படுகிறது. திதாயி இன மக்கள் போண்டா குழுவினருக்கு மிக அருகில் வசிக்கும் ஆஸ்திரேலிய - ஆசிய பழங்குடிகள் ஆவார்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இவர்களுக்கு கொரோனா பரவுவது ஏன் அதிகபட்ச கவலை அளிக்கும் ஒன்றாக கருதப்படுகிறது?

வறுமை மற்றும் மனித மேம்பாட்டு கண்காணிப்பு ஏஜென்சி ( Poverty and Human Development Monitoring Agency (PHDMA)) 2018ம் ஆண்டு வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஒடிசாவின் பி.வி.டி.ஜி குழுக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. ”வறுமை, படிப்பறிவின்மை, பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை, மோசமான சுகாதார சூழல், கடினமான வாழிடம், போஷாக்கு பற்றாக்குறை, தாய் - சேய் நல சேவைகளை பெறுவதில் இருக்கும் சிக்கல்கள், மூட நம்பிக்கைகள், காடுகள் நீக்கம் மற்றும் போதுமான சுகாதார சேவைகள் இல்லாத நிலை ஆகியவை காரணமாக இவர்களின் ஆரோக்கியம் மோசமடைகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  சுவாச பிரச்சனை மற்றும் மலேரியா போன்ற நோய்கள், கடுமையான வயிற்றுப்போக்கு, குடல் புரோட்டோசோவா போன்ற இரைப்பை குடல் கோளாறுகள், நுண் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தோல் தொற்று ஆகியவை அவர்களுக்கு பொதுவாக ஏற்படும் நோய்கள் என்று அரசு தரப்பு செய்தி தெரிவிக்கிறது.

பழங்குடி மக்களுக்காக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்கள், பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் தேவையான நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு குறைவாக உள்ளது. அவர்கள் ஒரு குழுவாக சமூக வாழ்க்கை வாழ்கின்றனர். ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், அது அதிக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு சிறப்பு கவனம் தேவை என்று கூறப்படுகிறது. கடந்த 20-30 வருடங்களில், அவர்களின் வாழும் நிலை மாறிவிட்டது. அவர்கள் ஆரம்பத்தில் உப்பு மற்றும் காட்டில் விளைந்த உணவுகளை உட்கொண்டனர். தற்போது நிர்வாகத்தால் தரப்படும் ரேசன் உணவுகளை சார்ந்து உள்ளனர். இருப்பினும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி விவாதத்திற்கு உரியதாகவே இருக்கிறது என்று பி.வி.டி.ஜிகளுடன் நெருக்கமாக பணிபுரியும் ஒரு பழங்குடி ஆராய்ச்சியாளர் கூறினார்.

ஒடிசாவில் இருக்கும் இந்த பழங்குடியினருக்கு எப்படி நோய் தொற்று ஏற்பட்டது?

பாதிப்படையக்கூடிய பழங்குடிகள் முன்பு தங்களுக்கான எல்லையிலேயே வாழும் பழக்கத்தை கொண்டிருந்தனர். தற்போது போதுமான வாழ்வாதாரம் இல்லாத நிலையில் வேலைகள் தேடி அருகில் இருக்கும் மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இருப்பினும் அவ்வாறு குடியேறியவர்கள் குறைவானவர்கள் தான். எவ்வாறு இவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவியது என்பது இன்னும் கண்டறியாத ஒன்றாகவே இருக்கிறது. “நோய் பரவ பல்வேறு காரணங்கள் இருக்கலாம். வாரம் ஒருமுறை கிராம சந்தைகளுக்கு அவர்கள் சென்று வருகின்றனர். அவர்களில் சிலர் மற்ற மாவட்டங்களில் இருந்து தங்களின் பழங்குடியின கிராமங்களுக்கு திரும்பி வந்துள்ளனர். எனவே நோய் தொற்றின் மூலத்தை அறிவதில் சிரமம் உள்ளது. இருப்பினும் நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மல்கங்கிரி மாவட்ட ஆட்சியர் மணீஷ் அகர்வால் அறிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment