கோவிட் -19-ஐக் கொண்ட பெரும்பாலான மக்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது மீண்டும் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால், வயதான நோயாளிகள் மறு தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பால் மதிப்பிடப்பட்டபடி, கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமான SARS-CoV-2, 2021 மார்ச் 7-ம் தேதி நிலவரப்படி 117 மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருந்தாலும், SARS-CoV-2 உடனான தொற்று எந்த அளவிற்கு அடுத்தடுத்த மறு தொற்றுக்கு பாதுகாப்பை அளிக்கிறது என்பதைத் தெளிவாக விவரிக்கவில்லை.
2020-ம் ஆண்டில், டென்மார்க்கின் விரிவான, கட்டணமில்லா பி.சி.ஆர்-சோதனை ஸ்ட்ராட்டஜியின் ஒரு பகுதியாக, ஏறக்குறைய 4 மில்லியன் நபர்கள் (மக்கள் தொகையில் 69 சதவீதம்) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 2020 முதல் இந்த தேசிய பி.சி.ஆர்-சோதனைத் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 உடன் மீண்டும் தொற்றுநோய்க்கான பாதுகாப்பை மதிப்பிட்டனர்.
2020-ம் ஆண்டில் டென்மார்க்கில் மறு தொற்று விகிதங்களின் பெரிய அளவிலான மதிப்பீடு, ஒரு சிறிய பகுதியினர் (0.65%) மட்டுமே இரண்டு முறை பாசிட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையை அளித்ததை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், முந்தைய நோய்த்தொற்று 65 வயதிற்குப்பட்டவர்களுக்கு மறு தொற்றுக்கு எதிராக 80 சதவிகித பாதுகாப்பைக் கொடுத்தாலும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, இது 47 சதவிகித பாதுகாப்பை மட்டுமே அளித்தது. அதாவது அவர்கள் மீண்டும் கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.
இந்த வகையான முதல் பெரிய அளவிலான ஆய்வின் ஆசிரியர்கள் ஆறு மாத பின்தொடர்தல் காலத்திற்குள் மறுதொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்துவிட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை.
அவர்களின் கண்டுபிடிப்புகள் தொற்றுநோய்களின் போது வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, கோவிட் -19-லிருந்து மீண்டு வந்தவர்களுக்கும்கூட, மேம்பட்ட சமூக விலகல் மற்றும் தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்றவை அடங்கும். இயற்கை பாதுகாப்பு, குறிப்பாக வயதானவர்களிடையே நம்ப முடியாது என்பதால், ஏற்கெனவே இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பகுப்பாய்வு கூறுகிறது.
ஜனவரி 2021 நிலவரப்படி, கோவிட் -19, 100 மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்களையும், உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், மறு தொற்று அரிதானவை என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது ஆறு மாதங்கள் நீடிக்கும் என்றும் கூறுகின்றன.
“பலர் பரிந்துரைத்ததை எங்கள் ஆய்வு உறுதிப்படுத்துகிறது: கோவிட் -19 உடன் மறு தொற்று இளைய, ஆரோக்கியமான மக்களில் அரிதானது. ஆனால், வயதானவர்கள் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். வயதானவர்கள் கடுமையான நோய் அறிகுறிகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் இறந்துவிடுவதால், தொற்றுநோய்களின் போது வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. அவர்கள் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் ஏற்கனவே கோவிட் -19-ஐ கொண்டிருந்தாலும் கூட, தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க, செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை முடிவுகள் வலியுறுத்துகின்றன. பரந்த தடுப்பூசி உத்திகள் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கொள்கைகளையும் எங்கள் நுண்ணறிவு தெரிவிக்கக்கூடும்” என்று டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீன் எத்தெல்பெர்க் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.