scorecardresearch

நோய் எதிர்ப்பு சக்தியா, தடுப்பூசியா – எது சிறந்தது?

COVID-19 vaccine updates, Vaccines & Immunization :

கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான பந்தயத்தில் முன்னிலையில் இருக்கும்  ஃபைசர் மற்றும் மாடர்னா மருந்து நிறுவனத்தின்  MRNA தடுப்பூசிகளில் 95 சதவீதம் பயன்திரன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா சென்ட் அவை உறுப்பினர்  ராண்ட் பால் என்பவரின் ட்வீட் பலரையும்  ஆத்திரமூட்டும் வகையில் அமைந்தது .

பால் தனது ட்வீட்டில் ,”புதிய தடுப்பு மருந்துகள் 90 மற்றும்  94.5% பயன்திரன் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  ஆனால், கோவிட்- 19 நோய்த் தொற்றில் இருந்து பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி 99.9982% பாதுகாப்பானவை என்று அவர் கூறினார்.

கொரோனா நோய்த் தொற்றுக்கான ஊரடங்கு மற்றும் பொருளாதார இழப்புகளை கடுமையாக விமர்சித்த  பலரில் ஐவரும் ஒருவர். சில மாதங்களுக்கு முன்பாக இவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, மேலும், நோய்த் தொற்றால் பெறப்பட்ட எதிர்ப்பு சக்தி அதிக பாதுகாப்பை அளிக்கிறது என்றும், தடுப்பு மருந்தை விட குறைவான அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும் வாதிட்டார்.

இருப்பினும், நோய்த் தொற்றில் இருந்து யாரெல்லாம்  உயிர் பிழைக்கமுடியும் என்று  கணிப்பது மிகக் கடினமாக இருக்கும்போது இத்தகைய தர்க்கம் தேவையற்றது என்று  டொராண்டோ பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு நிபுணர் ஜெனிபர் கோமர்மேன் கூறினார். தனி நபரின் நோய் எதிர்ப்புத் திறன், உள்ளூர் அளவிலான மருத்துவமனை கட்டமைப்பு போன்றவைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தடுப்பு மருந்தை விட பிந்தைய நோய் எதிர்ப்பு சக்தியை தேர்ந்தெடுப்பது “மிகவும் மோசமான முடிவு” என்று அவர் கூறினார்.

தடுப்பு மருந்து யூகிக்கக்கூடியது மற்றும் பாதுகாப்பானது. ”  நோயெதிர்ப்பு நினைவகத்தை செயற்கையாகத் தூண்டுவதற்கு உகந்ததாக அனைத்து தடுப்பூசிகளும்  வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இருப்பினும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானாதாக அமையும்? முதலில், இதில் ஏதேனும் ஆபத்து உள்ளதா? என்ற கேள்விகளும் தற்போது முன்வைக்கப்படுகிறது.

எது சிறந்தது?   

பொதுவாக நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவுடன், மனித நோயெதிர்ப்பு மண்டலம் ஆன்டிஜெனுடன் பொருந்தக்கூடிய ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது

நிமோகோகல் பாக்டீரியா போன்ற சில நோய்க்கிருமிகளுக்கான தடுப்பூசிகள், இயற்கையான  நோய்க் கிருமியைக் காட்டிலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. கோவிட்-19 தடுப்பூசிகளும் இதுபோன்று தான் வரக்கூடும் என்று ஆரம்பகால சான்றுகள் தெரிவிக்கின்றன.

மாடர்னா தடுப்பூசி நிர்வகிக்கப்பட்ட தன்னார்வலர்கள்  தங்கள் இரத்தத்தில் அதிக ஆன்டிபாடிகளைக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிட் தடுப்பு மருந்தான ஆக்ஸ்பர்ட் ஆஸ்ட்ராசெனிக்கா 60 முதல் 70 வயதுள்ளவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து வரும் ஆக்ஸ்பர்ட் தடுப்பு மருந்து உற்பத்தி பிரிவின் பரிசோதகர் மருத்துவர் மகேஷி ராமசாமி இரண்டாவது தவணை தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இரண்டு வாரங்களில் அனைத்து வயதினருக்கும் 99 சதவிகித பயனளிக்கும் என்று தெரிவித்தார்.

இருப்பினும், மற்ற சந்தர்ப்பங்களில், தடுப்பூசியை விட இயற்கையான நோய்க் கிருமிகள் மிகவும் சக்தி வாய்ந்தது. உதாரணமாக, ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தாளம்மை நோய்க் கிருமியை எடுத்துக் கொள்ளுங்கள். இது, வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, ஆனால், இந்த நோய்க்கான தடுப்பூசியை பெற்ற சிலர் ( 1 அல்ல 2 டோஸ்) இன்னும் நோயைப் பெறுகிறார்கள்.

கொரோனா வைரஸ் போராட்டத்தில் மனித நோயெதிர்ப்பு மண்டலம் தயாரிக்கும் இயற்கை நோயெதிர்ப்பு சக்தி அதிர்ஷ்டவசமாக மிகவும் வலுவானது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குறைந்தது சில ஆன்டிபாடிகள் மற்றும் நோயெதிர்ப்புக் கொலையாளி செல்களை உற்பத்தி செய்கின்றனர். அவை, தொற்றுநோயை எதிர்த்துப் போராடலாம். இதன் மூலம் கிடைக்கக் கூடிய பாதிப்புகள், மறுதொற்று ஏற்படுவதை தடுக்காவிட்டாலும், கடுமையான பாதிப்பை தடுக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

மிக லேசான / அறிகுறி தென்பட்ட மக்கள், மறுதொற்று ஏற்படுவதை தடுக்கக்கூடிய நோயெதிர்ப்பு சக்தி சில மாதங்களுக்குள் குறையக்கூடும். இத்தகைய மக்கள், தடுப்பூசியால் அதிகம் பயனடைவார்கள் என்று  ஹார்வர்ட் டி.ஹெச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (Harvard T.H. Chan School of Public Health) நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையில் வைரசால் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால், அவரின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். வைரசின் பாதிப்பின் அளவில் நோயெதிர்ப்பு சக்தி மாறுபடுகிறது.

ஒரு தடுப்பூசி மூலம், அனைவருக்கும் ஒரே அளவு டோஸ் வழங்கப்படுகிறது.”நிர்வகிக்கப்படும் அளவை நாங்கள் அறிவோம். மேலும் நோயெதிர்ப்பு சக்தியை செயற்கையாக தூண்டும் அளவையும் நாங்கள் அறிவோம்,” என்று கோமர்மேன் கூறினார்.

எனக்கு கொரோனா நோய்த் தொற்று இருந்தது. தடுப்பூசி பெறுவது எனக்கு பாதுகாப்பானதா? 

கொரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்ட எவரும்  ஒரு கட்டத்தில் தடுப்பூசி பெறுவது பாதுகாப்பானது, அநேகமாக நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

“முதல் தொற்றுநோயிலிருந்து நீங்கள் பெற்ற எந்தவொரு நோய் எதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசி மூலம்  அதிகரிப்பதன் மூலம் நீங்கள் இன்னும் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியைப் பெற முடியும்.” என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நீங்கள் ஏற்கனவே, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்திருந்தால், மற்றவர்களைப் போலல்லாமல்  சிறிது காலத்திற்குப் பிறகு தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசி விநியோகம் குறித்து நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் ஏ.சி.ஐ.பி, “கடந்த 90 நாட்களாக நோய்த்தொற்று ஏற்படாதவர்களுக்கு தடுப்பு மருந்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தது.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Covid 19 vaccine updates vaccines and immunization