குடல் நோய் நோயாளிகளுக்கு கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானதா?

Covid 19 vaccines bowel disease patients research இரைப்பை குடல் அறிகுறிகளில் பெரும்பாலானவை குறுகிய காலத்தில் அல்லது தானாகவே தீர்க்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Covid 19 vaccines bowel disease patients research Tamil News
Covid 19 vaccines bowel disease patients research Tamil News

Covid 19 vaccines bowel disease patients research Tamil News : அழற்சி குடல் நோய்கள் (inflammatory bowel diseases (IBD)) நோயாளிகளுக்கு ஃபைசர் அல்லது மாடர்னா கோவிட் -19 தடுப்பூசிகளினால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரியவில்லை என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், மேம்பட்ட நோயெதிர்ப்பு மாற்றும் சிகிச்சைகள் மூலம் சிகிச்சையாக்கப்படுபவர்கள் பொது மக்களை விட குறைவான பக்க விளைவுகளை அனுபவிக்கக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.

ஐபிடி என்பது குடல் நோயெதிர்ப்பு அமைப்பு, அதிகப்படியான செயலில் இருக்கும்போது ஏற்படும் நாட்பட்ட நிலைமை. இதனால், நாள்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் பிற செரிமான அறிகுறிகள் ஏற்படுகின்றன.

அமெரிக்காவின் சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள், சிடார்ஸ்-சினாயில் பராமரிக்கப்படும் நாடு தழுவிய கோவிட் -19 தடுப்பூசி பதிவேட்டில், 246 வயது வந்த ஐபிடி நோயாளிகளுக்குத் தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகளை மதிப்பீடு செய்யப்பட்டனர். இந்த நோயாளிகள், பொது மக்களைப் போலவே, தடுப்பூசிக்குப் பிறகு, உட்செலுத்தப்பட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கத்தை அடிக்கடி புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து சோர்வு, தலைவலி மற்றும் தலைச்சுற்றல், காய்ச்சல், குளிர் மற்றும் இரைப்பை குடல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றின. பெரும்பாலான பக்க விளைவுகள் லேசானவை மற்றும் சில நாட்கள் மட்டுமே நீடித்தன.

மிகக் குறைவான ஐபிடி நோயாளிகள் மட்டுமே சோர்வு, காய்ச்சல் மற்றும் தலைவலி உள்ளிட்ட கடுமையான பக்க விளைவுகளைப் புகாரளித்தனர். இந்த ஆய்வு செய்த 246 நோயாளிகளில் இருவர் கடுமையான இரைப்பை குடல் அறிகுறிகளைப் புகாரளித்தனர்.

பல ஐபிடி நோயாளிகள், தடுப்பூசி ஒரு “விரிவடைய” அல்லது அவர்களின் நிலை மோசமடையக்கூடும் என்று கவலை தெரிவித்தனர். எப்படி இருந்தாலும், இரைப்பை குடல் அறிகுறிகளில் பெரும்பாலானவை குறுகிய காலத்தில் அல்லது தானாகவே தீர்க்கப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வில், சுமார் 80% நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகள் மூலம் சிகிச்சையாக்கப்படுகின்றன. அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை இலக்கு வழியில் தடுக்கின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தின் இந்த தடுப்பு, நோயாளிகள் தெரிவித்த பக்க விளைவுகளின் சற்றே குறைந்த எண்ணிக்கையை விளக்குகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covid 19 vaccines bowel disease patients research tamil news

Next Story
பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?petrol diesel prices are high, petrol price, diesel price are high, petrol diesel prices, global crude oil, பெட்ரோல் விலை, டீசல் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன, இந்தியா, தமிழ்நாடு, மத்திய வரி, மாநில வரி, central state taxes, What reason for high petrol diesel prices, india, tamil nadu, delhi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com