scorecardresearch

கொரோனா வைரஸ் இருந்தும் லாக்டவுன் அமல்படுத்தாத நாடுகள் – ஏன்?

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத உலகின் சில நாடுகளில் துர்க்மெனிஸ்தான் ஒன்றாகும். நோய் பரவத் தொடங்கிய போது, பெய்ஜிங் மற்றும் பாங்காக்கிலிருந்து விமானங்களும் பின்னர் அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன

கொரோனா வைரஸ் இருந்தும் லாக்டவுன் அமல்படுத்தாத நாடுகள் – ஏன்?
sweden lockdown, south korea lockdown, lockdown list, countries with no lockdown, india lockdown extension, explained news, indian express explained, கொரோனா வைரஸ், உலக செய்திகள், தென் கொரியா, ஸ்வீடன், சுவீடன்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், உலகெங்கிலும் உள்ள நாடுகள் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு தணிக்கும் நடவடிக்கையாக முழுமையான அல்லது பகுதி லாக் டவுனை நம்பியுள்ளன. இந்த நாடுகளில், இந்தியா, சீனா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளால் விதிக்கப்பட்ட லாக்டவுன் மிக நீளமானவை, கடுமையானவையும் கூட. அப்படியிருந்தும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் மூடப்பட்டுள்ளன, பொருளாதாரங்கள் சரிவின் விளிம்பில் உள்ளன. எனினும், சில நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தவில்லை.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையத்தின்படி, உலகம் முழுவதும் 187 நாடுகள் / பிராந்தியங்கள் இந்த நோய்களைப் பதிவு செய்துள்ளன. இப்போது உலகளவில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன, மேலும் 1,72,000 க்கும் அதிகமான இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அமெரிக்கா அதிக எண்ணிக்கையிலான பாதிப்பாக ஒரு மில்லியனுக்கும் அதிகமாக பதிவு செய்துள்ளது.

கேரளாவில் புது தொற்று எண்ணிக்கை ஜீரோ, மற்ற மாநிலங்களின் நிலை என்ன?

லாக்டவுன் இல்லாத நாடுகளில் எவ்வாறு சமாளிக்கப்படுகின்றன?

ஸ்வீடன்: லாக்டவுன் விதிக்காமல் மிகவும் தனித்து நின்ற நாடுகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நாட்டில், இதுவரை 21,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,400 க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளன. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இன்னும் திறந்த நிலையில் உள்ளன, தேவைப்படாவிட்டால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். வயதானவர்களுக்கு மட்டும் சமூக விலகலை பராமரிக்கவும், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், நாட்டில் இறப்பு எண்ணிக்கையில் பெரும் பகுதியினர் 70 வயதிற்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கிஇருக்கிறது, ஏனெனில் பராமரிப்பு இல்லங்களில் தொற்று பரவுகிறது.

கொரோனா வைரஸைக் ஸ்வீடன் கையாள்வது குறித்து தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் கூறுகையில், மற்ற நாடுகளைப் போலவே, ஸ்வீடனும் கூட நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்க விரும்புகிறது. ஆனால் ஒரு லாக்டவுனால் அல்லாமல், மக்கள் மீது சமூக-தொலைதூர நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கான பொறுப்பை கொடுக்கலாம் என்கிறார். பெரும்பான்மையான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதே நாட்டின் கொள்கை என்ற கூற்றுகளையும் டெக்னெல் நிராகரித்தார்.

மார்ச் மாதத்தில் ஒரு ஸ்வீடிஷ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டெக்னெல் கூறுகையில், “முக்கிய தந்திரம் (நோய் எதிர்ப்பு சக்தி) பற்றியது அல்ல, ஆனால் எங்களுக்கு தொற்று மெதுவாக பரவுவதால், சுகாதார அமைப்புக்கு ஓரளவிலான அளவு வேலையே கிடைக்கிறது” என்றும் கூறினார்.

சில சுகாதார வல்லுநர்கள் ஸ்வீடனின் அணுகுமுறையை ஏற்கவில்லை. சமீபத்தில் ஒரு ஸ்வீடிஷ் செய்தித்தாளான டேஜென்ஸ் நைஹெட்டரில் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில், 22 விஞ்ஞானிகள் கோவிட் -19 க்கு எதிரான நாட்டின் கொள்கையை வடிவமைப்பதற்கு பொறுப்பான அதிகாரிகள் பின்பற்றிய அணுகுமுறையை கேள்விக்குள்ளாக்கியதுடன், அரசியல்வாதிகள் தலையிட்டு “விரைவான மற்றும் தீவிரமான நடவடிக்கைகளை” மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர். ஸ்வீடனின் பொது சுகாதார ஆணையம் (PHA) ஒரு தன்னாட்சி அமைப்பு மற்றும் அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக செயல்படுகிறது, இதன் காரணமாக அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாமல் முடிவுகளை எடுக்க முடியும். உண்மையில், இந்த நோய் குறித்த பெரும்பாலான ஊடக சந்திப்புகளில், அரசியல்வாதிகள் அரிதாகவே காணப்படுகிறார்கள்.

தென் கொரியா: நோய் பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் தென் கொரியா மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும், ஆனால் லாக்டவுன் இல்லாமல் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்த சில நாடுகளில் ஒன்றாக இது திகழ்கிறது. அதிகமான சோதனை, பாதிக்கப்பட்ட நபர்களை விரைவில் கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவற்றை நாடு பின்பற்றியது. கடந்த வியாழக்கிழமை அன்று, 10 வாரங்களில் முதல் முறையாக புதிய உள்நாட்டு பதிப்புகள் எதுவும் அங்கு பதிவு செய்யவில்லை. நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளன, இதில் 247 பேர் உயிரிழந்துள்ளனர்.

துர்க்மெனிஸ்தான்: கொரோனா வைரஸ் தொற்று இல்லாத உலகின் சில நாடுகளில் துர்க்மெனிஸ்தான் ஒன்றாகும். நோய் பரவத் தொடங்கிய போது, பெய்ஜிங் மற்றும் பாங்காக்கிலிருந்து விமானங்களும் பின்னர் அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. நாட்டில் லாக்டவுன் நடவடிக்கைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அப்படியிருந்தும், பெரிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்குள் நுழைய சோதனைச் சாவடிகள் உள்ளன, அங்கு பயணிகளின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு வெவ்வேறு மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், உள்ளூர் விடுமுறையான குதிரை தினத்தை கொண்டாட ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அரங்கங்களில் கூடியிருந்தனர், அங்கு ஜனாதிபதி குர்பங்குலி பெர்டிமுகமடோவின் குதிரை நீதிபதிகளால் மிகவும் அழகான குதிரையாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டில் நோய்க்கான பாதிப்புகள் இல்லை என்ற கூற்று குறித்து சந்தேகம் உள்ளது. ஏப்ரல் 28 அன்று, ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா ரேடியோ லிபர்ட்டி (RFE / RL) WHO இன் நிபுணர்களின் நாட்டிற்கு வருகை தருவதற்கு முன்னர், கொரோனா வைரஸின் சந்தேகத்திற்குரிய பாதிப்புகளை மறைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களிலிருந்து நூற்றுக்கணக்கானவர்களை வெளியேற்றுவதாக தெரிவித்தனர். எவ்வாறாயினும், வெளியுறவு மந்திரி ரஷீத் மெரெடோவ் அவர்கள் எதையும் மறைக்கவில்லை என்று கூறுகிறார்.

மொபைல் போன்களால் கொரோனா ஆபத்து: ஆய்வு சொல்வது என்ன?

உண்மையில், சில செய்தி அறிக்கைகள் “கொரோனா வைரஸ்” என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்த தடை விதித்ததாகவும், அதைப் பற்றி விவாதித்தால் நபர்களைக் கைது செய்வதாகவும் கூறியுள்ளனர். RFE / RL இன் ஒரு அறிக்கை, மாநில ஊடகங்கள் கொரோனா வைரஸின் பாதிப்புகள் குறித்து எதுவும் சொல்லாததால் இந்த நோய் இல்லாதது போல் தெரிகிறது என்று கூறியது. “மேலும் இந்த வார்த்தை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பணியிடங்களில் விநியோகிக்கப்படும் சுகாதார தகவல் பிரசுரங்களிலிருந்து கூட நீக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் குரோனிக்கிள்ஸின் கூற்றுப்படி, செய்திகள் வெளியிட்ட சில தனியார் அமைப்புகளின் செய்தித் தளம் நாட்டிற்குள் முடக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

தஜிகிஸ்தான்: தஜிகிஸ்தான் தனது முதல் 15 பாதிப்புகளை ஏப்ரல் 30 அன்று அறிவித்தது. பள்ளிகள் ஏப்ரல் 25 முதல் மூடப்பட்டு அதன் உள்நாட்டு கால்பந்து லீக் ஏப்ரல் 26 அன்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக நோய் பரவுவது குறித்த செய்திகளை அந்நாடு பெரும்பாலும் மறுத்து வருகிறது

யூரேசியநெட்டின் கூற்றுப்படி, ரமலான் உட்பட வெகுஜன கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன, மேலும் மருத்துவ மாஸ்க்குகள் கட்டாயமாக உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Covid 19 virus affected countries that have not imposed lockdown and why