Advertisment

கொரோனாவை சுயமாகவே கட்டுப்படுத்த முடியும்; நிபுணர்கள் கூறுவது என்ன?

ஆக்ஸிஜன் அளவு 94 அல்லது அதற்கு மேல் கொண்டுள்ள, அதே நேரத்தில் லேசான அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. தேவையற்ற சி.டி. ஸ்கேன் நோயாளிகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

author-image
WebDesk
New Update
Covid is a self-limiting illness in most

Covid is a self-limiting illness : உங்கள் குடும்பத்தில் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் பயப்பட வேண்டாம். வீட்டில் இருந்தபடியே சுய மேற்பார்வை திட்டம் உள்ளிட்ட கொரோனா தொற்றை நிர்வகிக்கும் சில முக்கிய விசயங்களை நீங்கள் பின்பற்றினால் மருத்துவமனை செல்லும் அவசியம் ஏற்படாது என்கிறார் பேராசிரியர் பங்கஜ் மல்ஹோத்ரா. பி.ஜி.ஐயின் உள் மருத்துவத்துறையில் பணியாற்றி வரும் நம்முடைய சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

Advertisment

கொரோனா தொற்று வைரஸ் நோயாகும். 3 முதல் 10 நாட்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, சுவை மற்றும் வாசம் இழப்பு ஆகியவை பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது, இருதய நோய், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள், கட்டுப்பாடற்ற நீரிழிவு பிரச்சனைகள், உடல் பருமன் போன்று ஏற்கனவே இருக்கும் இதர உடல் நலக்குறைபாடுகள் தொற்றை மேலும் கடுமையாக்கும். அவர்கள் நிச்சயமாக குடும்ப மருத்துவரை அணுகுவது நல்லது.

மேலும் படிக்க : மீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது?

கொரோனா பாசிட்வ் என்று முடிவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்? நான் மருத்துவரை அணுக வேண்டுமா?

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டால் நீங்கள் பயப்படவேண்டாம். 85 முதல் 90% நோயாளிகளுக்கு சுயமாக இந்த நோயை கட்டுக்குள் கொண்டுவர முடியும். நீங்கள் உங்களின் குடும்ப மருத்துவர் அல்லது கொரோனா உதவி மையத்தை நாட வேண்டும். . கோவிட் கண்காணிப்பு விளக்கத்திட்டம் இணை நோய் உள்ளவர்களுக்கும் உதவும். இது உங்களுக்கும் உங்களின் மருத்துவர்களுக்கும் தொற்றின் முன்னேற்றத்தை அறிய நிச்சயமாக உதவும். இதனை கண்டிப்பாக பராமரித்து உங்கள் மருத்துவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எப்போதைய கால கட்டத்தில் நான் கவலை கொள்ள வேண்டும்? மருத்துவமனையின் உதவியை நாட வேண்டும்?

நீங்கள் ஒரு சார்ட்டை பராமரித்து மேற்பார்வையிட்டு வருகின்றீர்கள் எனில், உங்கள் மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் அவர்கள், நீங்கள் எப்போது மருத்துவமனை செல்ல வேண்டும் என்பது குறித்து கூறுவார்கள். ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் குறைவாக செல்லும் போது நீங்கள் உங்கள் மருத்துவருடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பொதுவான செறிவுநிலைகள் என்ன? ஆக்ஸிஜன் அளவு 94க்கு கீழே செல்லும் போது நான் கவலை கொள்ள வேண்டுமா?

பொதுவான ஆக்ஸிஜன் அளவு 94%க்கும் மேலே தான் உள்ளது. பேட்டரிகள் அல்லது ஆக்ஸிமீட்டர்களில் உள்ள சிக்கல்களால் ஒற்றை மாறுபட்ட வாசிப்பு (94% க்கும் கீழே) நிகழலாம். ஆக்ஸிஜன் அளவு 94க்கும் கீழே சென்றால் உடனே பேட்டரிகள் மற்றும் ஆக்ஸிமீட்டர்களை சரிபார்க்கவும். ஆக்ஸிஜன் செறிவு சோதனையை மற்றொரு கையில் மேற்கொள்ளவும். ஆரம்ப எச்சரிக்கை என்பது 6 நிமிட நடை பயிற்சி சோதனையில் ஆக்ஸிஜன் அளவு 94%க்கும் கீழே செல்வது ஆகும். ஆக்ஸிஜன் அளவு 94% க்கும் குறைவாக இருந்தால், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது கோவிட் உதவி மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.

பல நோயாளிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வெளியே ஆக்ஸிஜன் வழங்கப்படுவதால், கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆக்ஸிஜன் தெரப்பி தேவை மற்றும் பலன்கள் தொடர்பாக சில முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

கோவிட் தொற்று நோயாளிகளில் 85-90 சதவீதம் பேர் தாங்களாகவே குணமடைவதால் பீதி அடையத் தேவையில்லை. உங்களுக்கு பின்னர் ஆக்ஸிஜன் தேவைப்பட்டால் கண்காணிப்பு விளக்கத்திட்டம் உங்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞைகளை ஆரம்பத்திலேயே தர துவங்கியிருக்கும். 94% க்கும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு முறை முடிவுகள் காட்டினால் நீங்கள் மறுபரிசோதனை செய்து கொள்ளுங்கள். 94% க்கு மேல் இருந்தால் ஆக்ஸிஜனைக் கொடுப்பதால் எந்த நன்மையும் இல்லை.

மேலும் படிக்க : இந்திய அரசின் “ஜீனோம் மேப்பிங்” குழுவில் இருந்து விலகிய முக்கிய ஆராய்ச்சியாளர்

இந்த அலையில் ஹைபோக்சியா அறிகுறிகளும் அதிகம் காணப்படுகிறது. அது தான் இளைய நோயாளிகளின் நிலையை மேலும் சிக்கல் ஆக்குகிறதா?

நாள் ஒன்றுக்கு 4 முதல் 6 முறை ஆக்ஸிஜன் அளவை 6 நிமிட நடைபயிற்சி சோதனைக்கு பிறகு பரிந்துரை செய்யப்படுகிறது. உங்களால் 6 நிமிடங்கள் நடக்கமுடியவில்லை என்றால் ஒரு நிமிடம் ஸ்டாண்ட் சிட் சோதனை முடிந்த பிறகு ஆக்ஸிஜன் அளவை பரிசோதனை செய்யுங்கள்.

வீட்டிலேயே ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பரிந்துரை செய்யப்படுகிறதா? நாசல் ப்ரோங்க்ஸ் பயன்பாடு குறித்து?

ஆக்சிஜன் 6-9 லிட்டர் / நிமிடம் என்ற குறைந்தபட்ச தேவை இருந்தால் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் உதவியாக இருக்கும். ஆக்ஸிஜனின் தேவை குறைவாக இருந்தால் நாசி முனைகள் வழியாக ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது. மருத்துவர் மேற்பார்வையின் கீழ் இவற்றைப் பயன்படுத்தவும்.

நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி) காரணமாக பல நோயாளிகள் உயிரிழப்பதை நாம் பார்க்கின்றோம். ஏற்கனவே சி.ஓ.பி.டி. நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிகம் உள்ளாதா? கோவிட் இந்த நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

ஏற்கனவே இருக்கும் நோய்கள் அல்லது இணை நோய்களான சி.ஒ.பி.டி., இதய நோய், சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயாளிகள் சிக்கல்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள 10-15 சதவீத பிரிவில் வரலாம். இந்த நோயாளிகள் தங்கள் குடும்ப மருத்துவருடன் தவறாமல் தொடர்பு கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அளவை 4-6 மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக கண்காணிப்பது சிக்கல்களைத் தடுக்க உதவும்.

நிறைய நோயாளிகள் தாங்களாகவே சி.டி. ஸ்கேன் எடுக்க செல்கிறார்கள்? சிலருக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நாம் எப்போது சி.டி.ஸ்கேன் எடுக்க செல்லவேண்டும்? நீண்ட காலத்திற்கு இது தீங்கு விளைவிக்க முடியுமா? தயவு செய்து விவரிக்கவும்

ஆக்ஸிஜன் அளவு 94 அல்லது அதற்கு மேல் கொண்டுள்ள, அதே நேரத்தில் லேசான அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. தேவையற்ற சி.டி. ஸ்கேன் நோயாளிகளுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும்.

லேசான கோவிட் -19 உள்ள பல நோயாளிகளுக்கு பல மருத்துவர்கள் இரத்த பரிசோதனைகளை பரிந்துரைக்கின்றனர், ஏனெனில் இது சாத்தியமான சிக்கல்களின் ஆரம்ப எச்சரிக்கைகளை வழங்கக்கூடும் என்று அவர்கள் கூறுகிறார்கள், இருப்பினும் சோதனைகள் லேசான நோய்க்கான நிலையான வழிகாட்டுதல்களில் சேர்க்கப்படவில்லை. இது குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?

2020 பெருந்தொற்றின் ஆரம்ப காலத்தில் மருத்துவர்கள் புதிய நோய் குறித்து அதிக கவலை அடைந்ததால் லேசான அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கும் ரத்த பரிசோதனைகளை பரிந்துரை செய்தனர். தற்போது அது போன்ற நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை தேவையில்லை என்பதை உணர்ந்துள்ளனர். இந்த இரத்த பரிசோதனைகளின் அடிப்படையில் சிகிச்சையும் மாற்றியமைக்கப்படுவதில்லை என்பதையும் மருத்துவர்கள் புரிந்துகொண்டனர். இரத்த பரிசோதனைகளின் முடிவுகள் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடையே அதிக பீதியை உருவாக்குகின்றன. பெரும்பாலான நோயாளிகள் தாங்களாகவே குணமடைகிறார்கள், எனவே லேசான நோய்களில் இந்த சோதனைகள் பரிந்துரைக்கப்படவில்லை.

நோய் அறிகுறிகள் இல்லை. ஆனால் கொரோனா பாசிட்டிவ் உள்ளது? தொற்றில் இருந்து முழுமையாக குணம் அடைந்துவிட்டேன் என்பதை எப்போது நான் அறிந்து கொள்ள முடியும்? 14 நாட்களுக்கு பிறகு நான் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமா?

நீங்கள் அறிகுறியற்ற நேர்மறையானவர், ஆனால் நீங்கள் இன்னும் 10-14 நாட்கள் வரை மற்றவர்களுக்கு தொற்றுநோயை பரப்பலாம். எனவே, நீங்கள் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும். குறைந்தது சில நாட்களுக்கு காய்ச்சல் இருந்தாலும் கூட 9-10 நாட்களுக்கு பிறகு வைரஸின் ரிப்ளிகேஷன் செயல்முறை நின்றுவிடுகிறது. எனவே அதன் பிறகு ஆர்.டி.பி.சி.ஆர் அல்லது இரத்த பரிசோதனைகள் தேவையில்லை.

6 நாட்களுக்கு பிறகும் காய்ச்சல் இருக்கிறது… பாராசிட்டமால் பயன்படுத்தியும் காய்ச்சல் குறையவில்லை என்றால் என்ன செய்வது?

10 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். டோலோ உட்கொண்ட பிறகும் காய்ச்சல் குறையவில்லை என்றால் காம்பிஃப்ளாம் அல்லது மெஃப்தால் (Combiflam or Meftal) மாத்திரைகளை 2 அல்லது மூன்று நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு குறைந்த அளவில் காய்ச்சல் நீடிக்கும் அதற்கு நீங்கள் மத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தொடர்ச்சியாக உடல் சோர்வாக இருத்தல், தொண்டையில் எரிச்சல் ஏற்படுதல் மற்றும் இருமல் இருப்பது குறித்து?

காய்ச்சல் குறைந்தாலும் இரண்டு வாரங்களுக்கு உடல் பலவீனமாகவே இருக்கும். சரியான உணவு மற்றும் போதுமான நீர் / திரவ உட்கொள்ளலில் கவனம் செலுத்துங்கள். உடற்சோர்வு குறைந்துவிடும்.

ஆக்ஸிஜன் செறிவு 94% க்கும் அதிகமாக இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. தொண்டை எரிச்சல் மற்றும் இருமல் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.

மிதமான இருமல் மற்றும் தொண்டையில் எரிச்சல் இருக்கிறது… தற்போது நான் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டுமா?

நிச்சயமாக ஆம்… ஆனால் இன்னும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்க. உங்களின் குடும்ப மருத்துவர் அல்லது அரசின் கொரோனா உதவி மையத்தை மேற்கொண்ட உதவிகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு அழையுங்கள்.

கோவிட்19 இந்த ஒரு வருடத்தில் நாம் கற்ற படிப்பினை என்ன?

நாம் நம்மை ஒழுங்குபடுத்தி கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவின் கோவிட் அப்ரோபிரியேட் பிஹேவியர் வழிகாட்டுதல்களாஇ முறையாக பின்பற்றினால் (முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல், சானிடைஸர் பயன்படுத்துதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை மூலம் நாம் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முடியும். இந்தியா வளரும் நாடு, சுகாதார உள்கட்டமைப்பை உருவாக்கும் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம். தொற்றில் இருந்து பாதுகாத்தல் போன்றவை தொடர்பாக நாம் அதிகம் கற்க வேண்டும். அதற்கு நாம் இந்திய ராணுவம் போல் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். மேற்கூறிய அனைத்தையும் நாம் முறையாக பின்பற்றினால் இந்த போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment