Ritika Chopra
கொரோனா தொற்று காலத்தில் பொதுத்தேர்தல், சட்டசபை தேர்தல் நடத்தப்படும் சூழல் ஏற்படின், அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் குறித்த நெறிமுறைகளை, தலைமை தேர்தல் ஆணையம், கடந்த வாரம் வெளியிட்டது. இதன்மூலமாக, பீகார் சட்டசபை தேர்தல், கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிப்போகலாம் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் கொரோனா பாதிப்பு எந்தளவிற்கு உள்ளது?
தேசிய அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில், பீகார் 5ம் இடத்தில் உள்ளது. கடந்த 1 மாதமாக அங்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பில், ஆந்திராவுக்கு அடுத்து பீகார் உள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், பீகார் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரம் என்ற அளவில் இருந்து 1.2 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கு கீழ் தான் இருந்தது. ஆகஸ்ட் 24ம் தேதி நிலவரப்படி, பீகாரில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.22 லட்சமாக அதிகரித்திப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷன், பீகார் தேர்தலை ஒத்திப்போடாதது ஏன்?
தேர்தல் கமிஷன், இதுவரை பீகார் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உணர்த்துவது யாதெனில், தேர்தல் திட்டமிட்ட காலத்தில் நடைபெறும் என்பதே ஆகும். சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று காலத்திலேயே, பொதுத்தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பின்பற்றப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி இங்கும் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறிந்தபிறகே, இந்த வழிகாட்டு நெறிமுறைகளை, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.
எத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன?
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள், தேர்தல் நாளின் கடைசி ஒருமணிநேரத்தில் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். மற்றவர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தவர்கள் மட்டுமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு அளிக்க அனுமதி என வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் பேரணி செல்வோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று தேர்தல் பிரசாரம் செய்வோரின் எண்ணிக்கை 3 பேராக இருக்க வேண்டும். பேரணிக்கு 10 கார்களுக்கு பதிலாக 5 கா்ரகளுக்கு மட்டுமே அனுமதி. வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவருடன் 2 பேர் மட்டும் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாக்குச்சாவடியில், 1,500 பேர் வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அது தற்போது 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், வெப்பநிலை பரிசோதனை அவர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ள வெப்பநிலை அளவின்படி, வாக்காளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கடைசி 1 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு நோயாளிகள் வாக்களிக்க வசதி ஏற்பட்டுள்ளதால் அப்போது கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களும் கடைசி 1மணிநேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வாக்களர்களுக்காக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் பேரணியின் போது அரசியல் கட்சியினர் தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?
கொரோனா காலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் கமிஷன், 15 அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தியது. இதில், லோக் ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட 4 கட்சிகளே, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தன.
ராஷ்டிரிய ஜனதாதள கட்சி, கொரோனா காலத்தில் ஏன் தேர்தலை நடத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியது?, காங்கிரஸ் கட்சி பிரமுகர் பிரேம்சந்த் மிஸ்ரா, தேர்தலை ஒத்திவைக்க கோரினார். இதை தேர்தல் கமிஷன் அரசியல் கட்சிகளின் கருத்தாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஐக்கிய ஜனதா தளம், தேர்தலை பலகட்டங்களாக நடத்தாமல் ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் பிரசாரத்தை ஆர்ஜேடி, சிபிஎம், எல்ஜேபி,காங்கிரஸ், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் நாளன்று பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று 10 பே்ர மட்டுமே பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி, தற்போதே, விர்ச்சுவல் பிரசாரத்தை துவக்கிவிட்டது. பிரசாரத்திற்கு செல்பவர்களின் தேவைக்காக முகக்கவசம், சானிடைச்ர, பிபிஇ கிட்ஸ் உள்ளிட்டவைகள் வாங்குவதற்கான செலவையும் வேட்பாளர் ஏற்க வேண்டும் என்பதால், செலவுத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பலர் கையாளுகையில் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
டிஜிட்டல் பிரசாரத்திற்கு எதிர்ப்பு ஏன்?
பணபலம் உள்ள கட்சிகளே, விர்சுவல் மீட்டிங், டிஜிட்டல் பிரசாரம் செய்ய முடியும் என்பதால், பல கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வகை பிரசாரத்தை, தேர்தல் கமிஷன் முறையாக கண்காணிக்க முடியாது என்பதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் பிரசாரம் குறித்து தேர்தல் கமிஷன் முறையான அறிவிப்பு வெளியிடாதநிலையில், சாதாரண பிரசாரமும் பீகார் தேர்தல் பிரசாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றே தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.