Coronavirus vaccine tracker: அமெரிக்காவில் புதிய கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்டப் பாதிப் பேர் இன்றைக்குக் கிடைத்தாலும் நிச்சயமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Centre) கடந்த செப்டம்பர் 8 முதல் 13ம் தேதி வரையில் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கிடையே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், கோவிட்-19 தடுப்பூசிக்கான மருந்தை எடுத்துக்கொள்ளத் தயாராக உள்ளவர்களின் சதவிகிதம் கடுமையாகக் குறைந்துவிட்டது என்று வெளியிட்டனர். மே மாதத்தில் 72 சதவிகிதம் பேர் மருந்து எடுக்கத் தயாராக இருந்தனர். ஆனால், இம்முறை வெளியிடப்பட்ட முடிவில் 51 சதவிகிதம் பேர் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.
பதிலளித்தவர்களில் 21 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி இப்போது கிடைத்தால் நிச்சயம் எடுத்துக்கொள்வதாகக் கூறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதில் பொதுமக்களின் நம்பிக்கை தற்போது குறைந்திருக்கிறது. தடுப்பூசிக்கான செயல்முறைகளில் இருக்கும் வேகம் மற்றும் விஞ்ஞானத்தால் அல்லாமல் அரசியல் கருத்தினால் அதிகம் இயக்கப்படுகிறது போன்ற அச்சமும்தான் அதற்கான முதன்மை காரணம்.
பியூ கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 77 சதவீதம் பேர், கொரோனா வைரஸ் தடுப்பூசி அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படலாம் என்று நம்புவதாகக் கூறினர்.
இத்தகைய சந்தேகங்களின் காரணமாக, கோவிட் 19 நோய்க்கான தடுப்பூசி உருவாக்கும் ஒன்பது பெரிய மருந்து நிறுவனங்கள், இந்த மாத தொடக்கத்தில் தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் அறிவியலின் முறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதாக உறுதியளித்தன. கடந்த வாரம், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca), ஃபைசர் (Pfizer) மற்றும் மாடர்னா (Moderna) ஆகிய மூன்று முன்னணி டெவலப்பர்கள், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகள் பற்றிய விரிவான தகவல்களை வெளியிட்டன. சோதனைகள் முடிவடைந்து அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும் வரை இதுபோன்ற தகவல்கள் பொதுவாக வெளியிடப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
பியூ கணக்கெடுப்பில் தடுப்பூசி எடுக்கத் தயங்குவதாகக் கூறியவர்களில், 76 சதவீதம் பேர் சாத்தியமான பக்க விளைவுகள் குறித்த கவலைகளை மேற்கோளிட்டனர். அதே நேரத்தில், 72 சதவீதம் பேர் இந்த தடுப்பூசிகளைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவதாகக் கூறினர்.
இவர்களில் சுமார் 31 சதவீதம் பேர் தங்களுக்குத் தடுப்பூசி தேவை என்று நினைக்கவில்லை என்றும் பகிர்ந்துள்ளார்.
இதுவரை கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்:
*முன் மருத்துவ அல்லது மருத்துவ பரிசோதனைகளில் 187 தடுப்பூசி வேட்பாளர்கள் பங்குபெற்றுள்ளனர்
*அவர்களில் 36 பேர் மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டனர்
*இறுதிக் கட்டங்களில் அதாவது மூன்றாம் கட்ட மனித சோதனைகளில் ஒன்பது பேர் இருக்கின்றனர்
*இந்தியாவில் குறைந்தது எட்டு தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு முதல் கட்ட சோதனையை முடித்து இரண்டாம் கட்ட சோதனையில் நுழைந்துள்ளன.
அதிகம் பேசப்பட்டவை:
* அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
* மாடர்னா
* ஃபைசர் (Pfizer) / பயோஎன்டெக் (BioNTech)
* ஜான்சன் & ஜான்சன்
* சனோஃபி / கிளாக்சோ ஸ்மித் க்லைன்
* நோவாவக்ஸ்
* மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ரஷ்ய தடுப்பூசி
*மூன்றாம் கட்ட சோதனைகள் நிறைவடையாமல் மூன்று தடுப்பூசிகள் சீனாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.