Advertisment

இரட்டை டோஸ்கள் கொரோனா தாக்கத்தை பாதியாக குறைக்கிறது - ஆராய்ச்சி முடிவுகள்

வயது ஒரு பெரிய காரணியாக செயல்படவில்லை என்ற போதிலும், உடல் பலவீனம் போன்ற உடல்நலக் கோளாறு உள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பிறகும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்காக உள்ளது.

author-image
WebDesk
New Update
Covid19 Double vaccination

Covid19 Double vaccination : லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை தி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிசீசஸ் என்ற இதழில் வெளியிட்டுள்ளனர். இரட்டைத் தடுப்பூசிகள் செலுத்திய பின்னர் கொரோனா தொற்று ஏற்பட முற்றிலுமாக வாய்ப்புகள் இல்லையென்றும், நீண்ட கால கொரோனா பாதிப்பு பாதியாக குறையும் என்றும், 73% வரை மருத்துவமனையில் சேர்வது தவிர்க்கப்படும் என்றும் 31% வரை தொற்றுக்கான அறிகுறிகள் குறையும் என்றும் அந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவித்துள்ளது.

Advertisment

ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்பாளர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், UK ZOE கோவிட் அறிகுறி ஆய்வுக்கான ஆப்பில் டிசம்பர் 8, 2020 மற்றும் ஜூலை 4, 2021 க்கு இடையில் 1,240,009 (முதல் டோஸ்) மற்றும் 971,504 (இரண்டாவது டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொண்ட இங்கிலாந்து மக்கள் குறித்து பகுப்பாய்வு செய்தனர்.

ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளை செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது கிங்ஸ் கல்லூரி. அதன் முக்கிய முடிவுகள் கீழே

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு இருக்கும் அதே வகையான அறிகுறிகள் தான் இவர்களிடமும் இருக்கிறது. வாசனை இழப்பு, காய்ச்சல், சளி, தலைவலி மற்றும் உடற்சோர்வு. ஆனால் இதன் தாக்கம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் குறைவாகவே உள்ளது. மேலும் நிறைய அறிகுறிகளை பெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவாகவே உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு பொதுவான அறிகுறி தும்மல் மட்டுமே.

பெரும்பாலான பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரு தடுப்பூசிக்குப் பிறகு தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.

வயது ஒரு பெரிய காரணியாக செயல்படவில்லை என்ற போதிலும், உடல் பலவீனம் போன்ற உடல்நலக் கோளாறு உள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு பிறகும் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்காக உள்ளது.

Source: King’s College London

Covid 19 Vaccine Covid19 In India Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment