Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்ன பிரச்னை; என்ன செய்ய திட்டம்?

இந்தியாவில் இடதுசாரிகள் தேர்தலில் மிகக் குறைந்த நிலையில் உள்ளனர். சி.பி.எம்.-ன் கடைசி கோட்டையாக இருக்கும் கேரளாவைத் தவிர எல்லா இடங்களிலும் அரசியல் தோல்வியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் சி.பி.எம் அரசியல் சக்தியாக செயல்படுவதை நிறுத்திவிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CPM, communist party of india marxist, CPI M, marxist symbol, Marxist communist party, CPM, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் என்ன பிரச்னை, சிபிம், சிபிஎம் என்ன செய்ய திட்டம், communist party of india founders, Sitaram Yechuri, Prakash Kharat, cpm party, Kerala, West Bengal, What problem with CPM, CPM what does it plan to do about it

பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விடுத்த அழைப்புடன், சிபிஐ(எம்)-ன் முப்பெரும் தேசிய மாநாடு - சி.பி.எம் மாநாடு புதன்கிழமை (ஏப்ரல் 6) கேரளாவின் கண்ணூரில் தொடங்கியது.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய அளவில் முக்கியத்துவத்தை இழந்து வரும் நேரத்தில் கட்சி கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இப்போது பல ஆண்டுகளாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு காலத்தில் தேசிய நிகழ்ச்சி நிரல் மற்றும் உரையாடல்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகித்த செல்வாக்குமிக்க அரசியல் குரலாக இருந்தது.

தேர்தலில், இந்தியாவில் இடதுசாரிகள் மிகக் குறைந்த நிலையில் உள்ளனர். சிபிஎம் கட்சியின் கடைசி கோட்டையாக இருக்கும் கேரளாவைத் தவிர, அக்கசி எல்லா இடங்களிலும் அரசியல் தோல்வியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 27 மாநிலங்களில் அது அரசியல் சக்தியாக செயல்படுவது நின்றுவிட்டது.

1977 முதல் 2011 வரை 34 ஆண்டுகள் சிபிஎம் மற்றும் அதன் இடது கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில், தற்போதைய சட்டமன்றத்தில் அக்கட்சி சார்பில் எம்.எல்.ஏ.க்களே இல்லை. மக்களவையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் இல்லை. (ராஜ்யசபாவில் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மட்டுமே உள்ளார்.)

1978 முதல் 1988 வரை பத்தாண்டு காலம் ஆட்சி பிறகு, 1993 முதல் 2018 வரை கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த திரிபுரா மாநிலத்தில் சிபிஎம் தனது இழந்த அரசியல் செல்வாக்கை தக்கவைக்கப் போராடி வருகிறது.

நாட்டின் பிற பகுதிகளில், தேர்தல் வெற்றிக்கு வெளியே மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்புக் கொடிகள் பறக்கின்றன.

உண்மையில், ப ஆண்டுகளாக இரத்தம் தோய்ந்த அரசியல் வன்முறைகளுக்குப் பெயர் பெற்ற மாவட்டமான கண்ணூரில் - ஏ.கே.ஜி பவனில் நாடு முழுவதிலுமிருந்து வந்து கூடியிருந்த பிரதிநிதிகள் மற்றும் ஏ.கே.ஜி. பவனின் அபிமானிகளுக்கு முன்னால் உள்ள சவால்கள் வலிமையானவை மற்றும் அச்சுறுத்தலானவை. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் இளம் ரத்தங்களை ஈர்க்க முடியவில்லை. ஏழைகள், உழைக்கும், நடுத்தர வர்க்கத்தினரை இலக்காகக் கொண்ட மக்களை சென்றடைய முடியவில்லை. மேலும், கொள்கை விவாதங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் திறமையான பேச்சாளர்கள் இல்லை.

இந்த சவால்களை எதிர்கொண்டாலும் கூட, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையானது 40 ஆண்டு கால பழமையான உத்தியை புதுப்பிக்க முயற்சி செய்கிறது. தற்போதைய அரசியல் கோரிக்கைகளை சந்திக்க அதை மாற்றி அமைக்கிறது.

தேர்தல் சவால்கள்

சி.பி.எம் அல்லது ஒட்டுமொத்த இடதுசாரிகள் எண்ணிக்கையில் - நாடாளுமன்றத்தில் பெரிய சக்தியாக இருந்ததில்லை. இருப்பினும், 30 முதல் 50 எம்.பி.க்கள் கொண்ட இடது தொகுதியானது அதன் புத்திசாலித்தனத்தை கருத்தில் கொண்டு, அதன் பலத்தைவிட அதிகமாக இருந்தது.

1989 முதல் 2004 வரையிலான கூட்டணி கட்சிகளின் ஆட்சி காலத்தில் சி.பி.எம் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கு பின்னால் ஒரு முக்கிய சக்தியாக இருந்தது. காங்கிரஸ் அல்லாத மற்றும் பாஜக அல்லாத அரசாங்கங்களுக்கு வெளியே இருந்து ஆதரவை வழங்கியது. ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மற்றும் ஜோதிபாசு போன்ற பிரமாண்ட தலைவர்கள் தேசிய அரசியல் களத்தில் நுழைந்தனர். மேலும், பிரகாஷ் காரத் மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோர் அழைக்கப்பட்டனர். சி.பி.எம் கட்சியின் அரசியல் தளம் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிக்கு வந்தது.

கடந்த பத்தாண்டில் திடீரென நம்ப முடியாத சரிவில் அனைத்தும் மாறிவிட்டன. சி.பி.எம்.-ன் சிறந்த லோக்சபா செயல்பாடு 2004-இல் இருந்தது. அக்கட்சி 44 இடங்களை வென்றது. அவற்றில் 26 இடங்கள் மேற்கு வங்கத்தில் இருந்து பெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சி கால அரசாங்கத்தின் சிற்பியாகவும் ஒரு பெரிய அரசியல் சக்தியாகவும் சி.பி.எம் வெளிப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக கீழ்நோக்கிச் சென்று, 2009ல் 16 சீட்டுகள் என்றும் 2014-ல் 9 சீட்டுகள் என்றும் சரிந்தது.

தற்போதைய லோக்சபாவில் சி.பி.எம்-க்கு மூன்று எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர் - ஒருவர் கேரளா (ஏ.எம். அரிஃப்) மற்றும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு எம்.பி.க்கள் (பி.ஆர். நடராஜன் மற்றும் சு. வெங்கடேசன்) உள்ளனர். சி.பி.எம் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ராஜ்யசபாவில், 5 உறுப்பினர்கள் உள்ளனர். பட்டாச்சார்யாவைத் தவிர, மற்ற நான்கு எம்.பி.க்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

2021ல் கேரளாவில் கிடைத்த முன் மாதிரி வெற்றியின் மூலம் (முதன்முறையாக 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்துவிட்டு இடது முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வந்தது) மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியில் இருந்து திசைதிருப்ப கட்சித் தலைமை பயன்படுத்தினாலும், உண்மை அப்பட்டமாக வெளியே தெரிந்தது. மேற்கு வங்கத்தில் 2016ல் பெற்ற 19.75 சதவீத வாக்குகளில் இருந்து கடந்த ஆண்டு 4.71 சதவீதமாக சரிந்தது.

294 உறுப்பினர்களை உடைய சட்டமன்றத்தைக் கொண்ட பெரிய மாநிலமான மேற்கு வங்கத்தில் இருந்து 42 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்புவது என்பது சி.பி.எம்-ன் தேர்தல் நெருக்கடியின் மையமாக உள்ளது. 2018-ம் ஆண்டு திரிபுராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜகவின் 35 இடங்களுடன் ஒப்பிடும்போது, ​​அக்கட்சி 16 இடங்களை வென்றுள்ளது. ஆனால், அக்கட்சியின் வாக்கு சதவீதம் 42.22 சதவீதம் இருந்தது. இது முந்தைய தேர்தலில் பாஜகவின் 43.59 சதவீதம் வாக்கு சதவீதத்தைவிட 1 சதவீதம் மட்டுமே குறைவாக இருந்தது. மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுதியாக முயற்சித்து வருகிறது.

அமைப்பு ரீதியான பலவீனங்கள்

விலைவாசி உயர்வு வேலையின்மை இரண்டும் அதிக அளவில் உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் கணிசமான வேலை இழப்பை விளைவித்துள்ளது. இது குறித்து சிபிஎம் சரியாக குரல் எழுப்பியபோதும் இளைஞர்களை ஈர்க்கத் தவறிவிட்டது. இது எல்லாவற்றையும் விட கட்சி எதிர்கொள்ளும் நெருக்கடியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

விலைவாசி உயர்வு நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் வாழ்க்கையை நசுக்குவதாக உள்ளது என்று சி.பி.எம் நம்புகிறது. மேலும் அது தொழிலாளர் விரோத தொழிலாளர் சட்டங்கள் என்று அழைப்பதன் காரணமாக தொழிலாள வர்க்கம் அமைதி இன்றி இருக்கிறது. இன்னும், சாதிப் பிளவுகளால் பாதிக்கப்பட்டு, பிஜேபியின் இந்துத்துவாவின் ஈர்ப்புக்கு வந்த இந்த வகுப்பினர் எவருக்கும் சிவப்புக் கொடி விருப்பமாக இல்லை.

பிரகாஷ் காரத்துக்கும் சீதாராம் யெச்சூரிக்கும் இடையேயான மோதல் - மத்தியத் தலைமையின் பிளவு எப்போதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கும் அதே வேளையில், சி.பி.எம் தலைவர்களால் கட்சியின் ஏழைகளுக்கு ஆதரவான செய்திகள் மற்றும் முழக்கங்களை மறுவடிவமைக்கவோ அல்லது புதிய அரசியல் சொல்லாடலைக் கண்டுபிடிக்கவோ முடியவில்லை. அவர்களின் அரசியல் மொழி மக்களை சென்றடைய வேண்டும். கட்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் அரசியல் அறிக்கை, மாநில அலகுகள் உள்ளூர் அளவில் போராட்டங்களை முன்னெடுப்பதை உறுதி செய்ய தவறியதற்காக மத்திய தலைமையை குறை கூறுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

உறுப்பினர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அக்கட்சியின் வளர்ச்சி கேரளாவில் மட்டுமே உள்ளது. மேற்கு வங்கத்தில், சி.பி.எம் 2017-ல் 2.08 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அது 2021-ல் 1.60 லட்சமாகக் குறைந்துள்ளது. திரிபுராவில், 2017-ம் ஆண்டில் 97,990 ஆக இருந்த அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 2021-ல் 50,612 ஆக குறைந்தது. மற்ற பெரும்பாலான மாநிலங்களில், அக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்காமல் தேங்கி நிற்கிறது.

இதில் கேரளா விதிவிலக்காக உள்ளது - 2017-ல் 4.63 லட்சமாக இருந்த சி.பி.எம்.-ன் உறுப்பினர் எண்ணிக்கை 2021-ல் 5.27 லட்சமாக உயர்ந்தது. ஆனால், கேரளாவில் கூட, 9.42 சதவிகித உறுப்பினர்கள்தான் 25 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்பது கவலைக்குரியதாக உள்ளது.

சி.பி.எம் மாநாட்டு பொதுக்குழுவில் முன்வைக்கப்படும் வரைவு அரசியல் தீர்மானம் குறிப்பிடுகிறது: “நாட்டில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியாக உருவெடுத்து, ஆர்எஸ்எஸ் வலையமைப்பு வேகமாக விரிவடைந்த இந்த காலகட்டத்தில், நம்முடைய கட்சியின் சுயேச்சையான பலமும்அரசியல் தலையீடு திறனும் மேலும் குறைந்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது.

சி.பி.எம் கட்சியின் மூன்று லோக்சபா எம்.பி.க்களில் எவரும் பேச்சுத் திறமைக்கு பெயர் பெற்றவர்கள் அல்ல. ராஜ்யசபாவில் அர்த்தமுள்ள தலையீடுகளை செய்ய இயலாமை என்பது அதன் கடுமையான விதிகள் காரணமாக உள்ளது. அந்த விதியின் கீழ் எந்த தலைவரும் இரண்டு முறைக்கு மேல் சபையில் இருக்க முடியாது. யெச்சூரி அல்லது பிருந்தா காரத் போன்ற சக்திவாய்ந்த பேச்சாளர்கள் இல்லாததால், சி.பி.எம்-ன் நாடாளுமன்ற செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு முன்னோக்கி செல்லும் வழி

சி.பி.எம் மாநாட்டுக் குழுவில் கட்சியின் தலைமை முன்மொழியப்போகும் திட்ட வரைபடம் தீவிரமானதாகவோ அல்லது புதுமையானதாகவோ இல்லை. உண்மையில், இது புதிய மொந்தையில் பழைய கள்ளாகத்தான் இருக்கிறது.

“இடதுசாரி மற்றும் ஜனநாயக முன்னணி அமைப்பதற்கான முயற்சிகளுக்கு கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று இந்த வரைவு அரசியல் தீர்மானத்தில் தலைமை முன்மொழிந்துள்ளது. இடது ஜனநாயக முன்னணி என்ற யோசனை 1978-ல் ஜலந்தர் கட்சி அரசியல் குழுவில் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. அப்போது அது காங்கிரஸை எதிர்கொள்ளும் நோக்கத்தில் இருந்தது. இப்போது முக்கிய எதிரி - பாஜக - இது மிகவும் வித்தியாசமானது, ஆனால் சி.பி.எம்.-ன் உத்தி அப்படியே உள்ளது.

ஜலந்தர் வரிசையில் மற்ற இடதுசாரி கட்சிகள், ஜனதா கட்சியில் இடது மற்றும் ஜனநாயக சக்திகள், முன்னாள் இளம் துருக்கியர்கள், காங்கிரஸின் தீவிரவாதிகள், சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகள் உட்பட ஒரு இடது மற்றும் ஜனநாயக முன்னணியை அமைப்பதில் பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பஞ்சாபில் அகாலிகள், குடியரசுக் கட்சிகள் போன்றவை இதில் அடங்கும். இன்றுள்ள பல பிராந்திய கட்சிகள் அன்று இல்லை. பிராந்திய சக்திகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

1978-ம் ஆண்டு முதல், இடது மற்றும் ஜனநாயக முன்னணி என்ற யோசனை சி.பி.எம் அரசியல் குழுவில் முன்மொழியப்பட்டது. இந்த நேரத்தில் வித்தியாசமாக உறுதியான திட்டத்தை வெளிப்படுத்துவதில் உள்ளது.

பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி 2014-ம் ஆண்டு ஜலந்தர் கோஷ்டி விவகாரத்தில் பிரகாஷ் காரத் கோஷ்டியுடன் மோதினார். 1978-ம் ஆண்டு ஜலந்தர் அரசியல் குழுவில் இருந்து பின்பற்றப்பட்ட பிராந்திய சக்திகளுடன் கைகோர்க்கும் அரசியல் உத்தி பாதை பின்வாங்கியது என்று பிரகாஷ் காரத் பிரிவு வாதிட்டது. அப்போது சீதாராம் யெச்சூரி, அதற்கு காரணம் உத்தி அல்ல, அதைச் செயல்படுத்திய விதம்தான் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று ஒரு எதிர்க் கடிதத்தை அனுப்பினார்.

கட்சித் தலைமை (சீதாராம் யெச்சூரி) முன்மொழியும் இடது மற்றும் ஜனநாயகத் திட்டம் இப்போது முன்னணியை உருவாக்கக்கூடிய கொள்கைகளின் தொகுப்பை அளிக்கிறது.

சி.பி.எம் மொழியில் சொல்வதானால், இடது மற்றும் ஜனநாயகத் திட்டத்தில் முதலாளித்துவ நிலப்பிரபுக் கொள்கைகளுக்கு மாற்றாக இந்த விஷயங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்: பொருளாதார இறையாண்மையைப் பாதுகாத்தல், இந்திய அரசியலமைப்பு மற்றும் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையைப் பாதுகாத்தல், ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமைப் பண்புகளைப் பாதுகாத்தல். சுதந்திரம், சமூக நீதி, கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாத்தல், தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடுதல், மக்கள் நலன், கலாச்சாரம் மற்றும் ஊடகங்களைப் பாதுகாத்தல். இவை அனைத்தும் வரைவு அரசியல் தீர்மானத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kerala West Bengal Cpm Sitaram Yechury Prakash Karat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment