scorecardresearch

5வது வீரராக களமிறங்கிய ஜடேஜா: காரணம் இது தான்!

Reasons for Jadeja batting at No.5 Tamil News: தற்போதைய நிலையில் ரஹானே மற்றும் பண்ட்டை விட ஜடேஜா சிறப்பாக செயல்படக் கூடியவர். இதை 2018ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் நிரூபித்து இருந்தார்.

Cricket news in tamil: Why is Jadeja batting at No.5 Tamil News

Ravindra Jadeja Tamil News: இடது மற்றும் வலக்கை பேட்ஸ்மேன்களின் சேர்க்கை மூலம் பந்து வீச்சாளரின் சிறப்பான பந்து வீச்சை சீர்குலைக்க முடியும் என்பது கிரிக்கெட்டில் பொதுவாக கூறப்படும் ஒன்று. இதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நீண்டகாலமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். தவிர ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் மூன்று வருடங்களுக்கும் மேலாக ஒரே லெவனில் இருப்பதற்கு முக்கிய காரணமும் இவர் தான்.

ரஹானே நல்ல ஃபார்மில் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா?

இல்லை, நிச்சயம் அது இருக்காது. இந்த தொடரில் அவர் ரன்கள் அடித்திருந்தால், அவர்கள் ஏன் ஒரு மாற்று பரிசோதனையை செய்வார்கள்? அதனால் தான் அவருக்கு பதில் ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜாவை 5வது வீரராக களமிறக்கி முயற்சித்திருக்கிறார்கள்.

ஜடேஜா களமாடிய இரண்டாவது இன்னிங்ஸில் காணப்பட்ட ஆடுகளம் ஒப்பீட்டளவில் தட்டையான ஆடுகளம் ஆகும். எனவே தான் அணி நிர்வாகம் சிறப்பாக ஆடும் ஜடேஜாவை களமிறங்கியது. ஆனால் ஜடேஜா பெரிய ரன் ஏதும் எடுக்கவில்லை.

2001 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் நிலை இதுவல்ல. இந்த போட்டியில் பாலோ ஆன் கேட்கப்பட்டு ராகுல் டிராவிட் பதிலாக வி.வி.எஸ்.லட்சுமணன் களமிறங்கினார். அப்போது வி.வி.எஸ்.லட்சுமணன் நல்ல ஃபார்மில் இருந்தார். ஒருவேளை ரஹானே அதிக ரன்களைச் சேர்த்திருந்தால், இது போன்று நடக்க வாய்ப்பு குறைவு தான். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த போட்டியில் கூட இதை தான் இந்திய அணி முயற்சித்தது. விரைவாக ரன் சேர்க்க ஹனுமா விஹாரிக்கு இடத்தில் ரிஷப் பந்த் இறக்கி விடப்பட்டார்.

இடது – வலக்கை இணைப்பின் தர்க்கம் என்ன?

பந்து வீச்சாளரின் ரிதத்தை குலைக்கவும், அவர் இதுவரை என்ன செய்துகொண்டிருந்தாரோ அதை தொடர விடாமல் தடுக்கவும் தான் இடது – வலக்கை பேட்ஸ்மேன்கள் ஜோடி களமிறக்கப்படுகிறது. இப்படி செய்வதால் அவர்கள் பந்து வீச்சின் லயன் மற்றும் லெந்த்தை மாற்றியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்கள் ஏற்கனவே இருந்த ரிதத்தை கண்டிப்பாக அப் செட் செய்யும்.

புதிய பந்துக்கு எதிராக ஜடேஜா எப்படி செயல்படுபவர்?

தற்போதைய நிலையில் ரஹானே மற்றும் பண்ட்டை விட ஜடேஜா சிறப்பாக செயல்படக் கூடியவர். இதை 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் நிரூபித்து இருந்தார். இந்த ஆட்டத்தில் 87 ரன்களை விளாசிய ஜடேஜா முதல் இன்னிங்ஸில் இந்தியாவை ஒரு பின்னடைவிலிருந்து தடுத்திருந்தார்.

தற்போது ஜடேஜாவின் பேட்டிங் மற்றொரு நிலைக்கு முன்னேறியுள்ள நிலையில், அவர் மிகக் கச்சிதமாகவும், ஒழுக்கமாக முன்னோக்கி முன்னேறுகிறவராகவும் உள்ளார். தவிர, முடிந்தவரை உடலுடன் நெருக்கமாக விளையாட முயற்சிக்கிறார். இந்தத் தொடரில் அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும், அவர் ரஹானே மற்றும் பண்ட்டை விட திடமாகவும், பாதுகாப்பாகவும், அழகாகவும் விளையாட கூடியவர்.

ஜடேஜாவுக்கு பதிலாக பண்ட்க்கு அந்த இடத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா?

ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால், நாம் பேசி வரும் இடது – வலக்கை இணைப்பு நடந்திருக்கும். ஐபிஎல் தொடர்களில் துவக்க வீரராக களமிறங்கும் அவருக்கு புதிய பந்துடனான ரிதம் கிடைக்கவில்லை. மேலும் நகரும் பந்துக்கு எதிராக அவரது ஆட்டம் திடமானதாக இல்லை. தவிர, இந்த தொடரில் இவரை விட ரஹானே அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil why is jadeja batting at no 5 tamil news