Advertisment

சதம் அடிப்பதில் கோலியை முந்துகிறாரா வில்லியம்சன்?

பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த  2வது டெஸ்ட் போட்டியில்   கேப்டன் வில்லியம்சன் தனது 24 வது டெஸ்ட் சதத்தையும், நான்காவது இரட்டை சதத்தையும்   அடித்தார்.

author-image
WebDesk
New Update
wiliamson overtakes kohli in test hundred - சதம் அடிப்பதில் கோலியை முந்துகிறாரா வில்லியம்சன்?

Cricket News In Tamil: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்தில்  விளையாடியது. அந்த இரு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து. அந்த அணி தொடரை வெல்வதற்கு முக்கிய வீரராக செயல்பட்டவர் கேப்டன் கேன் வில்லியம்சன்.பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த  2வது டெஸ்ட் போட்டியில்   கேப்டன் வில்லியம்சன் தனது 24 வது டெஸ்ட் சதத்தையும், நான்காவது இரட்டை சதத்தையும்   அடித்தார். இதன் மூலம் 27 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள  இந்திய கேப்டன் விராட் கோலியை முந்திச் செல்ல உள்ளார். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தோர் பட்டியலில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் முந்துவார்.

கோலி - வில்லியம்சன் என்ன தொலைவு?

வில்லியம்சன்  83 போட்டிகளில் விளையாடி  24 டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளார். அதை வேளையில் கோலி 87  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 சதங்களை பெற்றுள்ளார். அரைசதங்களை பொறுத்தவரை கோலி 23 அரைசதங்களையும்,  வில்லியம்சன் 32 அரைசதங்களையும் அடித்துள்ளனர் . இவர்களின்  டெஸ்ட் போட்டி பேட்டிங் சராசரியோ சமநிலையில் காணப்படுகின்றது.  வில்லியம்சன் 53 புள்ளி, கோலி 53.41புள்ளி.

சமீபத்திய ஆட்டங்களில் யார் முன்னிலை ?

கடந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2018-ம் ஆண்டு  ஜனவரி 1 -க்கு   பிறகு வில்லியம்சன் விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளில் ஏழு சதங்களை அடித்துள்ளார். அப்போது அவரது சராசரி 67.89 இருந்தது. அதே வேளையில்  கோலி 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏழு சதங்களை அடித்திருந்தார்.  அவரது சராசரி 52.56 இருந்தது.

அயல் நாடுகளில் அதிக சதம் அடித்தவர் ?

வில்லியம்சன் 36 டெஸ்ட் போட்டிகளில் ஒன்பது சதங்களை விளாசி  42.53 புள்ளிகளுடன் உள்ளார். ஆனால்  கோலி 48 டெஸ்ட் போட்டிகளில் 14 சதங்களை அடித்து 44.23 புள்ளிகளை பெற்றுள்ளார். வில்லியம்சன் ஆஸ்திரேலியாவில் இரண்டு சதங்களும், இந்தியா மற்றும் இங்கிலாந்தில் தலா ஒரு சதமும் அடித்திருக்கிறார். இன்னும் அவர்  தென்னாப்பிரிக்காவில் புள்ளிகள் ஏதும் பெறவில்லை. ஆஸ்திரேலியாவில் கோலி ஆறு சதங்களையும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தலா இரண்டு சதங்களையும், மற்றும் நியூசிலாந்தில் ஒரு சதங்களையும் அடித்திருக்கிறார்.

இந்தியாவில் வில்லியம்சன் எப்படி?

வில்லியம்சன், இந்தியாவில் நடந்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் அடித்துள்ளார். மற்றும் 461 ரன்களை சேர்த்து 35.46 புள்ளிகளை பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் கோலி எப்படி?

விராட் கோலி  நியூசிலாந்தில் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதத்தை பதிவு செய்துள்ளார். மற்றும் தனக்காக  252 ரன்களை சேர்த்து 36.00 புள்ளிகளை பெற்றுள்ளார்

Advertisment

கோலியை முந்துவாரா  வில்லியம்சன்?

வில்லியம்சனின் வயது 30 மற்றும் கோலிக்கு வயது 32. கோலியை விட இரண்டு வயது வில்லியம்சன் பின் தங்கியுள்ளார். எனவே அவர் 2 ஆண்டுகள் கோலியை விட அதிகம் விளையாட வாய்ப்புள்ளது.  ஆனால் இந்திய அணியை போல  நியூசிலாந்து அணி  அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. 2015 ம் ஆண்டு ஜனவரி 1 முதல், கடந்த ஆறு ஆண்டுகளில், கோலி 55 போட்டிகளிலும் வில்லியம்சன் 45  போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்திய அணியை போல 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் அல்லது 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் நியூசிலாந்து கலந்து கொள்வதில்லை. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் கூட வெறும் 2 போட்டிகளை மட்டுமே அங்கு நடத்த முடிந்தது.

இதற்கு முதல் காரணமாக அங்கு விளையாடப்படும் ரக்பி விளையாட்டை குறிப்பிடுகின்றார்கள். நியூசிலாந்தில் நம்பர் 1 விளையாட்டாக ரக்பி  இருந்து வருகின்றது. இரண்டாவது காரணமாக நேர வேறுபாட்டை கூறுகின்றார்கள்
நேர வேறுபாட்டை பொறுத்த வரை நியூசிலாந்து இந்தியாவை விட ஏழரை மணி நேரம் முன்னிலையில் உள்ளது.கிரீன்விச் இடைநிலை நேரத்தோடு  (ஜிஎம்டி) கணக்கிடும்போது 13 மணி நேரம் முன்னிலையில் உள்ளது. இது கிரிக்கெட்டை  ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போடும் ஒப்பந்தகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதோடு துணைக் கண்டத்திலும், இங்கிலாந்திலும் மற்றும்  கிரிக்கெட் பார்க்கும் பார்வையாளர்களையும் வெகுவாக பாதிக்கின்றது

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிமுறை முடிவடைய உள்ளது.

பாகிஸ்தானுடன் நியூசிலாந்து விளையாடியதே  கடைசி தொடர்  ஆகும் ஆனால் கோலிக்கு இங்கிலாந்துக்கு எதிரான  நான்கு உள்நாட்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளது.

கோலியை முந்தும் பட்டியலில் யாரெல்லாம் உள்ளனர்  ?

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்களுடன்  உள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் சமன் செய்து விடுவார், இரண்டு அடித்தால் முந்தியே விடுவார்.
தற்போது  ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இன்னும்  இரண்டு டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ளது. அதிலும்   ஸ்டீவ் ஸ்மித் களம் காணுவார்.

ஆஸ்திரேலியாவின் அணியின்  டேவிட் வார்னர் 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி  24 சதங்களை அடித்துள்ளார். இவர் இந்திய அணியுடன் 3வது டெஸ்ட் போட்டியில் ஆடுவார் என நம்பப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Indian Cricket Kane Williamson New Zealand Captain Virat Kholi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment