Udit Misra
மெய்நிகர் நாணயங்களின் நம்பகத் தன்மையை மதிப்பிடுவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்களின் குழு, பிட்காயின் போன்ற தனியார் குறியீட்டு நாணயங்களை இந்தியா தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த அமைச்சர்கள் குழுவின் விரிவான அறிக்கை பிப்ரவரி 28 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், ஜூலை 23 ஆம் தேதிதான் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டது. இது பொருளாதார விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் காணக் கிடைக்கிறது.
மெய் நிகர் பணம் என்றால் என்ன?
மெய்நிகர் நாணயம் என்பது டிஜிட்டல் முறையில் வர்த்தகம் செய்யக்கூடிய டிஜிட்டல் பிரதிநிதித்துவ மதிப்பு. இது (அ) பரிமாற்ற ஊடகம், (ஆ) கணக்கின் அலகு, (இ) மதிப்பு கடை என்ற முறைகளில் இந்த மெய்நிகர் நாணயம் செயல்படுகிறது. ஆனால், இது ரூபாயைப் போல அதிகாரப்பூர்வமாக அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத நாணயம். இந்த நாணயம் சட்டப்பூர்வமானது கிடையாது. மேலும், இவற்றுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் இல்லை. பிட்காயின் என்பது மெய்நிகர் நாணையத்தின் ஒரு துணைக்குழு ஆகும். மேலும், இது பரவலாக்கப்பட்டு ரகசியக் குறியாக்கத்தால் பாதுகாக்கப்படுகிறது.
விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் மற்றும் பரிவர்த்தனை பராமரிப்பு வலைஅமைப்பு என்றால் என்ன?
ஒரு சிறிய பள்ளி நண்பர்கள் குழு தங்களுக்குள் பரிவர்த்தனைகளின் பட்டியலை பராமரிப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ஆனால், ஒரு திருப்பம். ஒரு குழுவின் உறுப்பினர்கள் அல்லது சில அதிகாரப்பூர்வமானவர்களிடம் அல்லது அதிகாரப்பூர்வமானவர்களுக்கு அப்பால் உள்ளவர்களிடம் (அவர்களுடைய வகுப்பு ஆசிரியரிடம் கூறுகிறார்கள்) இந்த பட்டியலை பராமரித்து அப்டேட் செய்யக் கூறுகிறார்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் அனைவருமே தங்களுடைய கணினிகளில் தனியாக அந்த பட்டியலின் நகலை பராமரிக்க முடிவு செய்கிறார்கள். ஓவ்வொரு முறையும் அவர்கள் பரிவர்த்தனை செய்யும்போது, அதில் உள்ள உறுப்பினர்கள் அந்த பரிவர்த்தனையை சரிபார்க்கிறார்கள். இது அனைவராலும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டு அவர்கள் அவர்களுடைய பட்டியலை அப்டேட் செய்வார்கள். மேலும், அவர்களில் யாரும் தங்கள் தனிப்பட்ட பட்டியலில் கடந்த பரிவர்த்தனைகளின் பதிவுகளை மாற்றவில்லை என்பதை உறுதிப்படுத்த, அவர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் ஒரு தொகுதியாக வைக்க முடிவு செய்கிறார்கள், மேலும் அதை ஒன்றன் பின் ஒன்றாக ஒரு வரிசையில் அடுக்கி வைக்கிறார்கள். இந்த வழியில், கடந்த கால பரிவர்த்தனைகளின் விவரங்களை யாரும் மாற்றியமைக்க முடியாது, ஏனெனில் ஒட்டுமொத்த வரிசையும் மற்றவர்கள் வைத்திருக்கும் கணக்குகளுடன் பொருந்தாது. கடைசியாக, பள்ளியிலிருந்து வேறு எந்தக் குழந்தையும் விவரங்களைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்கள் பட்டியல் தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளுக்கும் ஒரு குறியீட்டை (ஒரு சைபர்) உருவாக்குகிறார்கள்.
விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் மற்றும் அதன் பரிவர்த்தனை பராமரிப்பு வலையமைப்பு, அதன் விவரங்கள் செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது.
அந்தந்த மின்னணு லெட்ஜர்களில் பரிவர்த்தனைகளை பதிவு செய்வதற்கும், பகிர்வதற்கும் மற்றும் ஒரே நேரத்தில் இயக்குவதற்கும் சுயாதீன கணினிகளைப் பயன்படுத்துவது உள்ளடக்கிய தொழில்நுட்பங்களை (முனைகள் என்றும் குறிப்பிடப்படுகிறது) குறிப்பிடுகிறது. அத்தகைய விநியோகிக்கப்பட்ட லெட்ஜர்களை வைத்திருப்பது ஒரு பாரம்பரிய லெட்ஜரில் செய்யப்படுவதைப் போல தரவை மையப்படுத்தியதன் அவசியத்தைத் தவிர்க்கிறது. அனைத்து மெய்நிகர் நாணயங்களும் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தை பயண்படுத்துகிறது.
விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தின் கீழ் ஒரு பரிவர்த்தனையில் ஒன்றிலிருந்து மதிப்பை மற்றொன்றுக்கு மாற்றுவது அவசியம் என்று குறிப்பிடுகிறது. இந்த மதிப்பு என்பது சொத்துக்களின் உரிமையில் எந்தவொரு பதிவாகவும் இருக்கலாம். அது பணம், பாதுகாப்பு, நிலத்தின் பெயர் அல்லது ஒருவரின் அடையாளம் அல்லது சுகாதாரத் தகவல் போன்ற குறிப்பிட்ட தகவல்களின் பதிவு போன்றவை ஆகும். அதனால்தான், விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் பல துறைகளில் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
பரிவர்த்தனை பராமரிப்பு வலையமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வகை விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் ஆகும். இது பிட்காயின் என்ற குறியீட்டு நாணய முறை பயன்படுத்திய பிறகு பிரபலமடைந்தது. பிட்காயின் போன்ற குறியீட்டு நாணயப் பரிவர்த்தனைகளை குறியாக்க குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. மேலும், அவற்றை தொகுதிகளில் அடுக்கி, பரிவர்த்தனை பராமரிப்பு வலையமைப்புகளை உருவாக்குகின்றன. இந்த குறியீடுகளின் பயன்பாடே குறியீட்டு நாணயத்தை மற்ற மெய்நிகர் நாணயத்திலிருந்து வேறுபடுத்துகிறது.
விநியோக்கிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் மற்றும் குறியீட்டு நாணயம் குறித்து அமைச்சர்கள் குழுவின் பார்வை
முதலில் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பம் மற்றும் பரிவர்த்தனை பராமரிப்பு வலையமைப்பின் திறனை அமைச்சர்களின் குழு அங்கீகரிகிறது. சர்வதேச அளவில் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, வர்த்தக நிதி, அடமானக் கடன் விண்ணப்பங்கள், டிஜிட்டல் அடையாள மேலாண்மை அல்லது வாடிக்கையாளர்களை தெரிந்துகொள்வதன் தேவைகள், எல்லை தாண்டிய நிதி பரிமாற்றங்கள், தீர்வு முறைகள் போன்ற துறைகளில் ஆராயப்படுவதை அமைச்சர்கள் குழு ஒத்துக்கொள்கிறது. பொருளாதாரத் துறை விவகாரங்களில் (நிதி அமைச்சகத்திற்குள்) விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை அடையாளம் கண்டபின் முழு நிதித் துறையிலும் பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரைக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கி, செபி, ஐ.ஆர்.டி.ஏ, பி.எஃப்.ஆர்.டி.ஏ மற்றும் ஐ.பி.பி.ஐ ஆகிய கட்டுப்பாட்டாளர்கள் அந்தந்த பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட லெட்ஜர் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வதற்கு பொருத்தமான விதிமுறைகளை ஆராய்வதற்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கிறது.
இருப்பினும், அமைச்சர்கள் குழு தனியார் குறியீட்டு நாணயத்தை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரிசர்வ் வங்கி வெளியிடக்கூடிய குறியீட்டு நாணயத்துக்கு இது அங்கீகாரம் அளிக்கும். அமைச்சர்கள் குழுவின் கருத்து என்னவென்றால், “இந்தியாவில் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக திறந்த மனது வைத்திருப்பது நல்லது” என்று குறிப்பிடுகிறது. இந்தியாவில் சட்டப்பூர்வ பணமாக மத்திய வங்கியின் டிஜிட்டல் பணத்தை அங்கீகரிக்க மத்திய அரசை அனுமதிக்க ரிசர்வ் வங்கியின் சட்டம் ஏதுவாக உள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
தனியார் குறியீட்டு நாணயத்தை ஏன் தடை செய்ய வேண்டும்?
மெய்நிகர் நாணயங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது உண்மைதான் என்றாலும், மத்திய ஒழுங்குபடுத்தும் அதிகாரம் இல்லாமல் அவை ஏராளமான குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் குழுவின் முதல் கவலை என்னவென்றால், அதிகாரப்பூர்வமற்ற மெய்நிகர் நாணயம் நுகர்வோர்களை, குறிப்பாக நவீனமாகாத நுகர்வோர்களை அல்லது முதலீட்டாளர்களை மோசடி செய்யப் பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிடுகிறது. இந்தியாவில் கெயின் பிட்காயின் சம்பந்தப்பட்ட ரூ.2,000 கோடி மோசடியை அமைச்சர்கள் குழு உதாரணம் அளிக்கிறது. இதில், போன்ஸி திட்டம் மூலம் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும், இத்தகைய நாணயம் பெரும்பாலும் அவற்றின் மதிப்பில் மிகப்பெரிய நிலையற்ற தன்மையைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2017 ஆம் ஆண்டில் ஒரு பிட்காயின் 20,000 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அடுத்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே ஒரு பிட்காயின் 3,800 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதிரியான நாணயத்தில் ஒரு நாட்டில் லட்சக் கணக்கான வர்த்தகர்கள் ஈடுபடும்போது அது மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும்.
இரண்டாவதாக, ஒரு பெரிய மக்கள்தொகையில் இத்தகைய நாணய முறையை அளவிடுவதற்கு ஆற்றல் வளங்களை முடக்க வேண்டியுள்ளது. மேலும், பிட்காயின் போன்ற நாணயத்துக்கு மிகப்பெரிய செயலாக்க சக்தி தேவைப்படுகிறது.
மூன்றாவதாக, தனியார் குறியீட்டு நாணயத்தை சட்டப்பூர்வ பணமாக செயல்பட அனுமதிக்கப்பட்டால், ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கை மற்றும் நிதி ஸ்திரத்தன்மை மீதான கட்டுபாட்டை இழக்கும். ஏனெனில், அது பணம் வழங்கல் குறித்த அதிகாரத்தை வைத்திருக்க முடியாது.
நான்காவதாக தனியார் டிஜிட்டல் பணத்தின் அநாமதேயம் பண மோசடிக்கு உள்ளாகக் கூடியது. மேலும், அது பயங்கரவாத நிதி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதால் சட்ட அமலாக்கத்தை கடினமாக்குகிறது.
ஐந்தாவதாக அனைத்து பரிவர்த்தனைகளும் மாற்றமுடியாதவை என்பதால், இது போன்ற ஒரு அமைப்பில் குறைதீர்க்கும் வழிமுறை இல்லை.இந்த காரணங்களுக்காகவே அமைச்சர்கள் குழு தனியார் குறியீட்டு நாணயத்தை தடை செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.