ஃபீஞ்சல் புயல் நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள ஆறு நிவாரண மையங்களுக்கு சுமார் 471 பேர் மாற்றப்பட்டனர். படகுகள், ஜெனரேட்டர்கள், மோட்டார் பம்புகள் மற்றும் தேவையான உபகரணங்கள் தயார் செய்யப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுக்கள் ஆகியோர் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளில் நிறுத்தப்பட்டனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cyclone Fengal: What does the ‘landfall’ of a cyclone mean?
புயல் கரையைக் கடப்பது என்றால் என்ன?
எளிமையாகச் சொன்னால், புயல் கரையைக் கடப்பது என்பது ஒரு வெப்பமண்டல சூறாவளி, தண்ணீரில் இருந்து நிலத்திற்கு வரும் நிகழ்வாகும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, புயலின் மையம் அல்லது அதன் கண் பகுதி கரையோரத்தில் நகரும் நிகழ்வை புயல் கரையை கடப்பதாக கூறுவார்கள்.
முக்கியமாக இதனை 'நேரடி தாக்குதலுடன்' குழப்பக்கூடாது. இது அதிக காற்றின் மையப்பகுதி கரைக்கு வரும் சூழ்நிலையைக் குறிக்கிறது. ஆனால் புயலின் மையம் கடலில் இருக்கக்கூடும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) படி, வெப்பமண்டல சூறாவளியில் வலுவான காற்று துல்லியமாக மையத்தில் இல்லாததால், கரையைக் கடக்காவிட்டாலும் கூட, ஒரு புயலின் வலுவான காற்றை நிலத்தில் அனுபவிக்க முடியும்.
இதனால் ஏற்படும் சேதம் என்ன?
புயலின் தீவிரத்தை பொறுத்து இதன் சேதம் அமையும். புயல் "மிகக் கடுமையானதாக" இருந்தால், சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் சேதம் அடையும். தகவல் தொடர்பு, போக்குவரத்து இடையூறு போன்ற பிரச்சனைகள் இதனால் ஏற்படும். இந்த வகையான சேதத்தின் பின்னணியில் உள்ள காரணிகள் மிகவும் வலுவான காற்று, அதிக மழை மற்றும் புயல் அலைகள் ஆகியவை கடலோரத்தில் பேரழிவு தரும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றன.
இவை எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும்?
புயல் கரையைக் கடப்பது சில மணி நேரங்கள் நீடிக்கும். காற்றின் வேகம் மற்றும் புயல் அமைப்பின் அளவைப் பொறுத்து இதற்கான கால அவகாசம் இருக்கும். புயல் கரைப்பகுதிக்கு வந்ததும், அதன் ஈரப்பதத்தின் குறைவு மற்றும் மேற்பரப்பில் உள்ள உராய்வு அதிகரிப்பு போன்ற காரணங்களால் அவை தீவிரத்தை இழக்கிறது. இதனால், பல்வேறு அழிவுகரமான நிகழ்வுகள் நடந்தாலும், இதற்கான முடிவும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“