scorecardresearch

கொரோனா வைரஸ் என்சைமைத் தடுக்கும் டார்க் சாக்லேட், கிரீன் டீ சேர்மங்கள்

SARS-CoV-2-ல் உள்ள ‘முக்கிய புரோட்டீஸ்’ (Mpro) அதன் செயல்பாடு தடுக்கப்பட்ட நொதி ஆகும். வைரஸ் பெருகுவதற்கு இந்த நொதி தேவைப்படுகிறது. அதனால், MPro தடுக்கப்பட்டால் அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டால், வைரஸ் உயிர்வாழ முடியாது.

coronavirus, coronavirus enzymes, coronavirus green tea, கிரீன் டீ, டார்க் சாக்லேட், கொரோனா நொதியைத் தடுக்கும் சேர்மங்கள், dark chocolate coronavirus, new research, tamil indian express, coronavirus explained

கிரீன் டீ, டார்க் சாக்லேட் மற்றும் மஸ்கடின் திராட்சை போன்ற சில உணவுகள் மற்றும் பானங்கள் அமெரிக்காவின் சில பகுதிகளில் விளையும் ஒரு திராட்சை வகை ஆகியவற்றில் கொரோனா வைரஸில் உள்ள ஒரு முக்கிய நொதியின் (enzyme) செயல்பாட்டைத் தடுக்கக்கூடிய ரசாயன சேர்ம்ங்கள் உள்ளது என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தின் தாவர உயிரியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, தாவர அறிவியல் முன்னணி ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.

SARS-CoV-2-ல் உள்ள ‘முக்கிய புரோட்டீஸ்’ (Mpro) அதன் செயல்பாடு தடுக்கப்பட்ட நொதி ஆகும். வைரஸ் பெருகுவதற்கு இந்த நொதி தேவைப்படுகிறது. அதனால், MPro தடுக்கப்பட்டால் அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டால், வைரஸ் உயிர்வாழ முடியாது.

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கணினி உருவப்படுத்துதல் மற்றும் ஆய்வக ஆய்வுகள் இரண்டையும் நிகழ்த்தினர். பல்வேறு தாவர ரசாயன சேர்மங்களை எதிர்கொள்ளும்போது எம்.பி.ஆர் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது. கிரீன் டீ, இரண்டு வகையான மஸ்கடின் திராட்சை, கொக்கோ பவுடர் மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட இந்த ரசாயன கலவைகள் அவற்றின் சக்திவாய்ந்த சோர்வு எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு ஏற்கனவே அறியப்பட்டவைகள். இவற்றை Mproக்கு எதிராக சோதிக்கப்பட்டபோது, ​​ரசாயனங்கள் நொதியின் வெவ்வேறு பகுதிகளுடன் பிணைக்க முடிந்தது. இந்த பிணைப்பு நடந்தவுடன், புரோட்டீஸ் அதன் முக்கியமான செயல்பாட்டை இழந்தது.

கிரீன் டீ, மற்றும் மஸ்கடின் திராட்சைகளில் உள்ள ரசாயன கலவைகள் Mpro-வின் செயல்பாட்டைத் தடுப்பதில் மிகவும் வெற்றிகரமாக இருப்பதாக கண்டறியப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கிரீன் டீ Mpro பாக்கெட்டில் வெவ்வேறு தளங்களுடன் பிணைக்கப்பட்ட ஐந்து சோதனை ரசாயன கலவைகள் இருந்தன. மேலும், அதன் செயல்பாட்டைத் தடுக்க அதை அதிகமாக்குகின்றன. மஸ்கடின் திராட்சையில் இந்த தடுப்பு சக்தி இரசாயனங்கள் அவற்றின் தோல்கள் மற்றும் விதைகளில் உள்ளன. கொக்கோ பவுடர் மற்றும் டார்க் சாக்லேட்டில் உள்ள ரசாயன கலவைகள் Mpro செயல்பாட்டை பாதியாக குறைத்தன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சேர்மங்களைப் பயன்படுத்துகின்றன.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Dark chocolate and green tea compounds blocked coronavirus enzyme new research