scorecardresearch

தொடுதல் அறிவியலைப் புரிந்துகொள்ளும் கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு

டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபவுட்டியன் நரம்பு மண்டலத்துடன் தொடுதலை கண்டுபிடிப்பவைகள் தொடர்பு கொள்ளும் இயக்கமுறையை அடையாளம் கண்டனர். மருத்துவத்தில் அவர்களின் ஆராய்ச்சியின் தாக்கங்கள் என்ன?

David Julius, Ardem Patapoutian, Nobel prize in Medicine, David Julius and Ardem Patapoutian won Nobel prize, Medicine, Physiology, மருத்துவத்துக்கான நோபல் பரிசு, டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் படபவுட்டியன், Physiology, Nobel prize in Physiology, indian express explained

மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை உணந்து அனுபவிக்கும் ஐந்து உணர்வுகள் நன்கு அறியப்பட்டவை. ஒளி, ஒலி, வாசனை மற்றும் சுவை ஆகியவற்றை நாம் அறிந்துகொண்டு பதிலளிக்கும் மனித உடலுக்குள் உள்ள இயங்கியல் முறையை பல பத்தாண்டுகளாக நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. தொடுதலின் மூலம் நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் புரிந்துகொள்கிற – வெப்பம் அல்லது குளிர், கசப்பு அல்லது கஷ்டம் அல்லது உடல் வலியின் உணர்வு – நீண்ட காலமாக விஞ்ஞானிகளுக்கு பிடிபடாமல் இருந்தது.

டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபவுட்டியன், அமெரிக்காவில் சுயாதீனமாக பணிபுரியும் இவர்கள் 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் நம் உடலில் உள்ள தொடு உணர்வை கண்டறிதல்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொடுதலை அடையாளம் கண்டு பதிலளிக்க நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொள்ளும் பொறிமுறையைக் கண்டறியும் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளைச் செய்தனர்.

அவர்களின் தொடர்ச்சியான ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது, 66 வயதான ஜூலியஸ் மற்றும் 54 வயதான படபவுட்டியன் ஆகியோர் 2021ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை கூட்டாக வென்றதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டனர்.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவியலில் அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் கழித்து வேதியியலில் நோபல் பரிசு அறிவிக்கப்படும்.

ஜூலியஸ் மற்றும் படபவுட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான பதிலளிப்பதைக் கண்டுபிடித்ததற்காக” நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதை எளிமையாகச் சொல்வதானால், மனித உடலில் வெப்பம் மற்றும் இயந்திர அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்ட மூலக்கூறு சென்சார்களைக் கண்டுபிடித்து, நம்மை சூடாகவோ அல்லது குளிராகவோ அல்லது நம் தோலில் கூர்மையான பொருளைத் தொடுவதையோ உணர்வதை கண்டுபிடித்துள்ளார்கள்.

இன்றைய உலகில் ஆர்ட்டிஃபிசியல் சென்சார்கள் நன்கு பிரபலமானவை. தெர்மோமீட்டர் மிகவும் பொதுவான ஒரு வெப்பநிலை சென்சார் ஆகும். ஒரு அறையில், ஒரு மேஜை அல்லது படுக்கையால் வெப்பம் ஏற்படும்போது கூட வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியாது. ஆனால், ஒரு தெர்மோமீட்டர் உணர்ந்து காட்டும்.

இதேபோல், மனித உடலில், அனைத்து மூலக்கூறுகளும் வெப்பத்துக்கு ஆளாகிறபோதும் அவை உணரப்படுவதில்லை. மிகவும் குறிப்பிட்ட புரதங்கள் மட்டுமே உணரச் செய்கின்றன. மேலும் இந்த சமிக்ஞையை நரம்பு மண்டலத்திற்கு அனுப்புவது அவற்றின் வேலை. அது பொருத்தமான பதிலைத் தூண்டுகிறது. இத்தகைய சென்சார்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு தெரியும், ஆனால் ஜூலியஸ் முதல் வெப்ப உணர்தலைக் கண்டுபிடிக்கும் வரை அவற்றை அடையாளம் காண முடியவில்லை.

“இது மிகவும் அடிப்படையான கண்டுபிடிப்பாக இருந்தது. 1990களின் பிற்பகுதியில் ஜூலியஸால் வெப்பநிலை உணர்வு பெறுதலை அடையாளம் காணும் வெப்பநிலை உணர்திறன் கண்டுபிடிப்பு நூற்றுக்கணக்கான மரபணுக்களின் மிகவும் கடினமான சோதனை மூலம் வந்தது.

இன்று, நம்மிடம் மிகவும் திறமையான கணினிகள் மற்றும் மாதிரிகள் உள்ளன. அவை இந்த வேலையை குறைக்கலாம். மேலும் செயல்முறையை வேகமாக கண்காணிக்கலாம். ஆனால், அந்த நாட்களில் நிறைய கடினமான ஆராய்ச்சி தேவைப்பட்டது. அந்த முதல் கண்டுபிடிப்பு வேறு பல உணர்தல்களை அடையாளம் காண வழிவகுத்தது. வெப்பத்திற்கு உணர்திறன் பெறுதல்கள் இருப்பதைப் போலவே, குளிரையும் உணரக்கூடிய மற்ற உணர்திறன் பெறுபவைகள் (receptors) உள்ளன. இன்னும் சில உணர்திறன் பெறுபவைகள் அழுத்தத்தை உணர முடியும். இவற்றில் பலவற்றை இப்போது நாம் அறிவோம்” என்று மனேசரில் உள்ள தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் விஞ்ஞானி தீபஞ்சன் ராய் கூறினார்.

இயக்கமுறை

வெப்பம், அல்லது குளிர், மற்றும் அழுத்தம் ஆகியவற்றை உணரும் மனித திறன் நமக்கு தெரிந்த பல கண்டுபிடிப்பாளர்களின் வேலைகளிலிருந்து மிகவும் வேறுபட்டதல்ல. உதாரணமாக, ஒரு புகை கண்டுபிடிப்பான் ஒரு குறிப்பிட்ட வாசலுக்கு அப்பால் புகையை உணரும்போது அலாரத்தை அனுப்புகிறது. இதேபோல், சூடான அல்லது குளிர்ந்த ஏதாவது உடலைத் தொடும்போது, ​​வெப்ப உணர்திறன் பெறுபவைகள் நரம்பு செல்களின் சவ்வு வழியாக கால்சியம் அயனிகள் போன்ற சில குறிப்பிட்ட இரசாயனங்களை அனுப்ப உதவுகின்றன. இது ஒரு குறிப்பிட்ட கோரிக்கையின் மீது திறக்கும் ஒரு வாயில் போன்றது. செல் உள்ளே ரசாயன நுழைவு மின் மின்னழுத்தத்தில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இது நரம்பு மண்டலத்தால் எடுக்கப்படுகிறது.

“பல்வேறு வெப்பநிலை வரம்புகளில் உணர்திறன் கொண்ட உணர்திறன் பெறுபவைகள் பரப்பு முழுவதும் உள்ளன. அதிக வெப்பம் இருக்கும்போது, ​​அயனிகளின் ஓட்டத்தை அனுமதிக்க அதிக சேனல்கள் திறக்கப்படுகின்றன. மேலும், மூளை அதிக வெப்பநிலையை உணர முடிகிறது. புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நரம்பியல் நிபுணர் அர்னாப் கோஸ் கூறுகையில், நாம் மிகவும் குளிரான ஒன்றைத் தொடும்போது இது போன்ற விஷயங்கள் நடக்கும். என்று கூறினார்.

இந்த உணர்திறன் பெறுபவைகள் (receptors) வெளிப்புற தொடுதலுக்கு மட்டும் உணர்திறன் கொண்டவை அல்ல. ஆனால், உடலில் உள்ள வெப்பநிலை அல்லது அழுத்த மாற்றங்களையும் கண்டறிய முடியும் என்று கோஸ் கூறினார்.

இந்த நோபல் பரிசு உடலியலுக்கா அல்லது மருத்துவத்திற்கா?

“நமது உடல் வெப்பநிலை சரியான அளவிலிருந்து விலகும் போது, உதாரணமாக, ஒரு எதிர்வினை உள்ளது. உடல் பொருத்தமான அல்லது மைய வெப்பநிலைக்கு திரும்ப முயற்சி செய்கிறது. வெப்ப உணர்திறன் பெறுபவைகள் வெப்பநிலையில் மாற்றத்தை உணர்வதால் மட்டுமே அது நிகழ்கிறது. மேலும் நரம்பு மண்டலம் அதை மீட்டெடுக்க முயற்சிக்கிறது” என்று அவர் கூறினார்.

“ஆனால், அது மட்டுமல்ல. உதாரணமாக நமது சிறுநீர்ப்பை நிரம்பும்போது, சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரிக்கிறது. அழுத்தத்தின் இந்த மாற்றம் அழுத்த உணர்திறன் பெறுபவைகளால் உணரப்பட்டு நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொள்கிறது. இது உங்களை சிறுநீரை வெளியேற்றுவதற்கான உந்துதலை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் இதேபோன்ற முறையில் உணரப்படுகின்றன. மேலும் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன … அதனால்தான், இந்த உணர்திறன் பெறுபவைகளின் கண்டுபிடிப்புகள் நமது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் அடிப்படையானது” என்று கோஸ் கூறினார்.

சிகிச்சையில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

உடலியல் முன்னேற்றங்கள் பெரும்பாலும் நோய்கள் மற்றும் கோளாறுகளை எதிர்த்துப் போராடும் திறனை மேம்படுத்துகின்றன. இது ஒன்றும் வேறுபட்டதல்ல. அறிவாற்றல் நரம்பியலில் பி.எச்டி செய்துள்ள சினேகா சசிதரா குறிப்பிட்டபடி, இந்த உணர்திறன் பெறுபவைகள் அடையாளம் கண்டு அவற்றின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் சாத்தியத்தைத் திறக்கிறது. உதாரணமாக, நமக்கு வலியை உணர வைக்கும் உணர்திறன் பெறுபவைகள் (receptors) உள்ளன. இந்த உணர்திறன் பெறுபவைகளை அடக்கவோ அல்லது குறைந்த செயல்திறன் கொண்டதாகவோ ஆக்கினால் அந்த நபர் குறைவான வலியை உணர்வார்.

“நாள்பட்ட வலி என்பது பல நோய்கள் மற்றும் கோளாறுகள் ஆகும். முன்னதாக, வலியின் அனுபவம் ஒரு மர்மமாக இருந்தது. ஆனால், இந்த உணர்திறன் பெறுபவைகளைப் பற்றி (receptors) நாம் மேலும் அதிகம் புரிந்துகொள்வதால், வலியைக் குறைக்கும் வகையில் அவற்றை ஒழுங்குபடுத்தும் திறனை நாம் பெற முடியும்” என்று அவர் கூறினார்.

உண்மையில் இந்த துறையில் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கோஸ் கூறினார். “அடுத்த தலைமுறை வலி நிவாரணிகள் இந்த பாணியில் வேலை செய்ய வாய்ப்புள்ளது” என்று அவர் கூறினார். இதில் புற்றுநோய் அல்லது நீரிழிவு போன்ற நோய்களுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும் தலையீடுகள் உட்பட வேறு பல சிகிச்சை தாக்கங்களும் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: David julius and ardem patapoutian won nobel prize in medicine or physiology