கோவிட்-19 கையாளுதல்: இலங்கையின் அனுபவத்திலிருந்து பெறும் படிப்பினைகள்

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28), இலங்கை அதன் நாடு தழுவிய லாக் டவுனிற்கு விடை கொடுத்துள்ளது. இது முன்னர் தளர்த்தப்பட்டு மீண்டும் சில விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கிடைத்த வெற்றியால், ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. வைரஸ் கட்டுப்படுத்தலால் தள்ளி வைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியாக ஆகஸ்ட் 5 ஐ நிர்ணயிக்க நாட்டின் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இலங்கையின் பல பாஸிட்டிவ் பாதிப்புகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கை வாசிகளால் ஏற்படுபவை தான். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு நாட்டின் உயர் சுகாதார அதிகாரி அளித்த பேட்டியில்,

“எங்களால் 100 சதவீத பாதுகாப்பை அடைய முடியாது. ஆனால் 100 சதவிகிதத்திற்கு அருகில் வர சில ஆயுதங்களை பயன்படுத்துவோம்”என்று இலங்கையின் Director-General of Health Services டாக்டர் அனில் ஜசிங்க கூறினார். ஆனால் இலங்கை சாதித்தது “ஒரு வெற்றி அல்ல, கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை யாரும் வெற்றியைக் கோர முடியாது” என்றும் அவர் எச்சரித்தார்.

சர்வதேச அளவில் 10 மில்லியனை தாண்டிய கொரோனா பாதிப்பு – இந்தியா இன்னும் சேஃப் தான்

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்றாலும், எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் மாதத்தின் பிற்பகுதியில்தான் வரத் துவங்குவார்கள். இலங்கை, சுற்றுலாப் பயணிகளின் வெள்ளத்தில் மிதக்காது என்பதையும் உணர்ந்து வைத்திருக்கிறது. வைரஸ் பரவலுக்கு முன்பு, ஒவ்வொரு நாளும் 100 விமானங்களும் 6,000 முதல் 10,000 பயணிகளும் வந்து கொண்டிருந்தனர். இப்போதைக்கு, அந்த எண்ணிக்கையில் ஒரு சிறிய பகுதியே எதிர்பார்க்கப்படுகிறது.

“சுற்றுலாவில் நிறைய பங்குதாரர்கள் உள்ளனர், அவர்கள் அனைவருடனும் நான் ஒரு சந்திப்பைக் கொண்டிருந்தேன், நாங்கள் சுற்றுலாப் பயணிகளை எவ்வாறுவரவேற்க வேண்டும், அவர்களை நாட்டில் எவ்வாறு பயணிக்க முடியும், எப்படி நாங்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான நெறிமுறைகளை நாங்கள் ஏற்கனவே தயார் செய்துள்ளோம். அவர்களை எப்படி திருப்பி வழியனுப்பி வைக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்துள்ளோம்”என்று ஜசிங்க தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

வந்திறங்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு சோதனை எடுத்தார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைவரும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதைத் தொடர்ந்து நாட்டில் ஐந்தாவது மற்றும் ஏழாம் நாளுக்கு இடையில் மற்றொரு ஆர்டி-பிசிஆர் சோதனை நடைபெறும்.

Backpackers மற்றும் தனிப்பட்ட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எட்டு நபர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறைவான எண்ணிக்கையிலான குடும்பங்களும் அனுமதிக்கப்படுவார்கள் – அவர்கள் உள்ளூர் சுற்றுலா முகவர் மூலம் முன்பதிவு செய்திருந்தால், ஒரு நிலையான பயணத்திற்கு முன்கூட்டியே பணம் செலுத்தியிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பயண காலம் குறைந்தபட்சம் ஆறு முதல் ஏழு நாட்கள் வரை இருக்க வேண்டும்.

“அவர்கள் தங்கியிருக்கும் போது சுகாதார அதிகாரிகள் அவர்களைக் கண்காணிப்பார்கள். 5 மற்றும் 7 வது நாளுக்கு இடையில், [இரண்டாவது] பி.சி.ஆர் சோதனை செய்யப்படும், மேலும் அவர்கள் ரிப்போர்ட் பெறாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது” என்று ஜசிங்க கூறினார். “சுற்றுலாப் பயணிகள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, வைரஸை இங்கே [இலங்கையில்] விட்டுவிட்டு மறைந்து போக வேண்டும்.”

மேலும், வாக்குச் சாவடிகளில் சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையத்துடன் நெறிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன. முதல் முறையாக, வாக்குப்பதிவு நடந்த அதே நாளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாது.

ஆரம்பகால நடவடிக்கைகளால் இலங்கை பாதிப்பு எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்க முடிந்தது என்று ஜசிங்க கூறினார். நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையத்தில் Thermal screening மற்றும் சுய அறிவிப்புகள் ஜனவரி நடுப்பகுதியில் தொடங்கியது. முதல் பி.சி.ஆர் ஆய்வகம் ஜனவரி 26 அன்று இயங்கத் தொடங்கியது – இது முதல் பாதிப்பு வெளிவருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இருந்தது, சீனப் பெண் ஒருவர் மற்ற சீன சுற்றுலாப் பயணிகளுடன் வந்தபோது கோவிட் பாஸிட்டிவ் கண்டறியப்பட்டது.

அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அந்த பெண்ணால் வேறு யாரும் யாரையும்பாதிக்கப்படவில்லை. வைரஸ் பாதித்த முதல் இலங்கை நாட்டவர் ஒரு இத்தாலிய குழுவுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தார். முதல் கோவிட் மரணம் மார்ச் 29 அன்று நிகழ்ந்தது.

மேலும் அதிகமான கோவிட் பாதிப்புகள் உருவான நிலையில், அவை பெரும்பாலும் திரும்பி வந்த இலங்கை சுற்றுலாப் பயணிகளாக இருந்தன, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மார்ச் 20 முதல் லாக் டவுன் அறிவித்தார். இது மே 11 அன்று 52 நாட்களுக்குப் பிறகு தளர்த்தப்பட்டது. அதற்குள், 850 பாதிப்புகள் நாடு முழுவதும் இருந்தன.

கடற்படை முகாமில் ஒரு கிளஸ்டரும் இருந்தது, இது ஏப்ரல் 23 முதல் 4,000 பேரை தனிமைப்படுத்த வழிவகுத்தது. அங்கு, 910 க்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று இருந்தது. இலங்கையின் பெரும்பாலான தொற்றுகளுக்கு இந்த கிளஸ்டர் ஒரு காரணமாக அமைந்தது.

புவியியல் ரீதியாக, மேற்கு இலங்கையின் மூன்று அல்லது நான்கு மாவட்டங்களான புட்டலம், கொழும்பு மற்றும் கரையோரத்தில் உள்ள கலுதாரா மற்றும் தலைநகர் மாவட்டத்திற்கு அடுத்த கம்பாஹா ஆகிய ஹாட்ஸ்பாட்களாக மட்டுப்படுத்தப்பட்டன. தமிழ் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணம் பல பாதிப்புகளைக் காணவில்லை.

“பாதிப்பு ஏற்பட்ட போதெல்லாம் நாங்கள் செய்த முதல் காரியம் ஆரம்பகால நோயறிதல் மற்றும் புள்ளித் தொடர்புத் தடமறிதல். வைரஸ் தேவையில்லாமல் பரவ நாங்கள் அனுமதிக்கவில்லை” என்று ஜசிங்க கூறினார். சில நோயாளிகளுக்கு 60-70 வரை தொடர்புகள் கண்டறியப்பட்டன, ஆனால் அந்த எண்ணிக்கை நிலப்பரப்பைப் பொறுத்தது. நகர்ப்புற சேரிகளின் அடர்த்தியான இடங்களில் அதிக தொடர்புகள் கிடைத்தன, ஆனால் கிராமங்களில் இது குறைவாகவே இருந்தது.

“கிளஸ்டர்களில் சமூக பரவல் சூழ்நிலையை நாங்கள் விரும்பவில்லை – அதை கிளஸ்டர் மட்டத்தில் வைத்திருக்க முடிந்தது. ஒவ்வொரு நோயாளியையும் அவர்களின் தொடர்புகளையும் நாங்கள் அறிந்து கொள்ளும் ஒரு சூழ்நிலையை நாங்கள் கொண்டிருக்க விரும்பினோம். எங்களால் நிர்வகிக்க முடிந்தது. எங்களிடம் ஒருபோதும் சமூக பரிமாற்றம் இல்லை, அது நடக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. கடுமையான தொடர்பு தடமறிதல், பின்னர், கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட பணிகளில் ஆயுதப்படைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன” என்றார் ஜசிங்க.

இலங்கையின் கோவிட் -19 போரில் இராணுவத்தின் பங்கு விமர்சனங்களைபெற்றது. குறிப்பாக இது ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவின் கையில் ஒரு அரசியல் கருவியாகவும் காணப்படுவதாக விமர்சிக்கப்பட்டது.

இதுபோன்ற நேரத்தில் இராணுவத்தின் உதவியை பெறுவதில் தவறில்லை என்று ஜசிங்க கூறினார். “ஏனென்றால் எங்கள் விருப்பப்படி தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை வடிவமைக்க முடியாது, ஆனால் இராணுவத்தால் அதைச் செய்ய முடியும். நீங்கள் அவர்களுக்கு ஒரு கட்டிடம் கொடுங்கள், மீதியை அவர்கள் செய்வார்கள், “என்றார்.

இராணுவம் இலங்கையில் அரசாங்கத்தால் நடத்தப்படும் தனிமைப்படுத்தப்பட்ட 50 மையங்களை அமைத்தது. இங்கு, 14 நாள் தங்குவதற்கு பணம் செலுத்தக்கூடியவர்களுக்கு ஐந்து ஹோட்டல்கள் உட்பட பத்து ஹோட்டல்களும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அடர்த்தியான நகர்ப்புற சேரிகளில், ஜசிங்க தனது குழு “root ball mechanism” – மரங்களை இடமாற்றம் செய்வதற்குப் பயன்படுதும் வழிமுறையை பயன்படுத்துவதாகக் கூறினார் – தனிமைப்படுத்த, அதாவது, முழுப் பகுதியையும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையமாக வெளியேற்றினார்.

ஜசிங்கின் குழு 100 ஐ.சி.யூ படுக்கைகளையும் தயார் செய்தது, ஆனால் இதுவரை, 10 மட்டுமே பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன, தற்போது, ​​இலங்கையின் கோவிட் டாஷ்போர்டு ஐ.சி.யுவில் ஒரு நோயாளியை மட்டுமே காட்டுகிறது.

இலங்கையின் வலுவான அரசு நடத்தும் இலவச மற்றும் உலகளாவிய சுகாதார முறையையும் ஜசிங்க பெருமைப்படுத்தினார், இதன் மூலம் அது மலேரியாவுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான போரை நடத்தியது மற்றும் 2016 ஆம் ஆண்டில் இந்த நோய்க்கு எதிரான வெற்றியை உச்சரிக்க முடிந்தது. இலங்கையின் பொது சுகாதார அமைப்பு என்பது ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகள் ஆகிய ஒரு பிரமிடு கட்டமைப்பை உள்ளடக்கியது

“இருப்பதை ஒருவர் கட்டியெழுப்ப வேண்டும். எங்கள் பலம் எங்கள் பொது சுகாதார அமைப்பு. எங்களிடம் ஒரு முழுமையான பொது சுகாதார அமைப்பு உள்ளது – எங்களிடம் மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள், பொது சுகாதார மருத்துவச்சிகள் மற்றும் பலர் உள்ளனர், அது நாடு முழுவதும் உள்ளது. கமேலும், எங்களிடம் நேர்த்தியாக பின்னப்பட்ட மருத்துவ பராமரிப்பு மற்றும் மருத்துவமனை அமைப்பு உள்ளது. பொதுவாக, நீங்கள் நல்ல மருத்துவர்களைப் பெறுகிறீர்கள், அரசுத் துறையில் நல்ல மருத்துவ வசதி பெறுகிறீர்கள், இது இலங்கையில் புறக்கணிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு 1.5 கி.மீ தூரத்திலும், உங்களுக்கு அரசு சுகாதார மையம் உள்ளது, ”என்றார்.

மருத்துவமனைகளில் கோவிட் -19 நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஒரே மருந்து ஹைட்ராக்சிகோலோரோக்வின் தான் என்று ஜசிங்க கூறினார்.

இலங்கை இதுவரை 1,04,272 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்டுள்ளது, அதிகபட்சமாக ஜூன் 3 ம் தேதி 2,089 சோதனைகளை நடத்தியது. மேலும் சோதனைகளை மேற்கொள்ளும் திறன் அரசுக்கு உள்ளது என்றும், ஒரு நாளைக்கு 500 சோதனைகளை மேற்கொள்ளக்கூடிய புதிய வசதி சமீபத்தில் திறக்கப்பட்டதாகவும் ஜசிங்க கூறினார். . விமான நிலையங்கள் திறக்கப்படுவதால், சோதனையை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்கும். அதற்காக தனியார் ஆய்வகங்களும் இணைக்கப்பட்டு வருவதாக ஜசிங்க கூறினார்.

MMR தடுப்பூசி கோவிட் நோயாளிகளுக்கு செப்சிஸை எதிர்த்துப் போராட உதவும்: புதிய ஆய்வு

“உங்கள் நிலைமை சமூக பரிமாற்றமாக இருந்தால், நீங்கள் நிறைய சோதிக்க வேண்டும், அது இன்னும் போதுமானதாக இல்லை. மும்பையில் அதுதான் நடக்கிறது. இலங்கையில் நாங்கள் இலக்கு வைக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனை எண்ணிக்கையை அடைந்தோம். மிக ஆரம்பத்தில், நாங்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் தொகுப்பைத் தேர்ந்தெடுத்தோம், ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தும் அலகுகள் இருந்தன. காய்ச்சல் மற்றும் சுவாச அறிகுறிகள் உள்ள நோயாளிகள் அந்த தனிமைப்படுத்தும் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, பி.சி.ஆர் செய்யப்பட்டது. அது செயலற்ற கண்காணிப்பு என்று அழைக்கப்படுகிறது.

“பின்னர் நாங்கள் பி.சி.ஆரை தோராயமாக OPD களில் செய்தோம், அதன் பிறகு நாங்கள் சமூக அமைப்புகளில் செய்தோம். இது முற்றிலும் சீரற்ற சோதனை, ”என்று அவர் கூறினார் – இந்த உயர் ஆபத்து வகைகளில் நேர்மறை விகிதம் 2 சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததால்,“ எங்களுக்கு சமூக பரிமாற்றம் இல்லை என்று அர்த்தம், மேலும் நகரங்களுக்கு சென்று எல்லோரும் ஸ்வாப் எடுப்பதில் அர்த்தமில்லை ”.

மேலும் சோதனைகள் நேர்மறை விகிதத்தை மேலும் குறைக்கும் என்று ஜசிங்க கூறினார். “நாங்கள் ஆயிரம் சோதனைகளை எடுத்தால், ஆயிரம் பேருக்கும் தொற்று ரிசல்ட் எதிர்மறையாக இருக்கும் – நிச்சயமாக,” என்று அவர் கூறினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close