Advertisment

கோவிட்-19க்கு ஹோமியோ மருந்து குறித்து ஒரு விவாதம்

கோவிட்-19க்கு எதிரான தடுப்பு அல்லது முன்காப்பு பயன்பாட்டிற்கு பல மாநில அரசுகள் பரிந்துரைத்ததை அடுத்து, ஆர்செனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து விவாதத்திற்கு உள்ளானது. கோவிட்-19க்கு எதிரான "தடுப்பு மற்றும் முன்காப்புக்கு எளிய தீர்வாக ஆயுஷ் அமைச்சகம் இந்த மருந்தை பட்டியலிட்ட பிறகு இந்த விவாதம் நடந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AYUSH Ministry, ஆர்செனிகம் ஆல்பம் 30, ஹோமியோபதி மருந்து, கோவிட்-19, coronavirus, coronavirus vaccine coronavirus homeopathy medicine, Arsenicum album 30, ஹோமியோபதி, Arsenicum album 30 coronavirus, Tamil Indian express

AYUSH Ministry, ஆர்செனிகம் ஆல்பம் 30, ஹோமியோபதி மருந்து, கோவிட்-19, coronavirus, coronavirus vaccine coronavirus homeopathy medicine, Arsenicum album 30, ஹோமியோபதி, Arsenicum album 30 coronavirus, Tamil Indian express

கோவிட்-19க்கு எதிரான தடுப்பு அல்லது முன்காப்பு பயன்பாட்டிற்கு பல மாநில அரசுகள் பரிந்துரைத்ததை அடுத்து, ஆர்செனிகம் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்து விவாதத்திற்கு உள்ளானது. கோவிட்-19க்கு எதிரான "தடுப்பு மற்றும் முன்காப்புக்கு எளிய தீர்வாக ஆயுஷ் அமைச்சகம் இந்த மருந்தை பட்டியலிட்ட பிறகு இந்த விவாதம் நடந்தது.

Advertisment

கோவிட் -19 க்கு எதிராக இந்த மருந்து செயல்படுகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதிலிருந்து இந்த விவாதம் உருவாகிறது. இது மருத்துவ விஞ்ஞானிகளால் மட்டுமல்ல, சில ஹோமியோபதி பயிற்சியாளர்களாலும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்செனிகம் ஆல்பம் 30ஐ ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. மகாராஷ்டிரா அரசு இன்னும் முறையான முடிவை எடுக்கவில்லை என்றாலும், மும்பை குடிமை அதிகாரிகள் குறைந்தது இரண்டு வார்டுகளில் அதிக ஆபத்துள்ள மக்களுக்கு இந்த மருந்தை விநியோகித்து வருகின்றனர். ஹரியானா சிறைத் துறை மற்றும் மும்பை காவல்துறையினரும் முறையே கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த மருந்தை விநியோகிக்கின்றனர்.

கோவிட்-19க்கு எதிராக டிரக்ஸ் பயன்படுத்துவதற்கான நெறிமுறை இல்லாத மாநிலங்களில் கூட, ஆர்செனிகம் ஆல்பத்தை வாங்க ஹோமியோபதி கிளினிக்குகளுக்கு மக்கள் திரண்டு வருவதாக செய்திகள் வந்துள்ளன. சில நேரங்களில் மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்குகின்றனர். உள்ளூர் வேதியியலாளர்கள் கூட இந்த மருந்தை சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.

டிரக்ஸ்

ஆர்செனிக் காய்ச்சி வடிகட்டிய நீரை சூடாக்குவதன் மூலம் ஆர்செனிகம் ஆல்பம் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை மூன்று நாட்கள் பல முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. நீரில் ஆர்சனிக் மாசுபடுவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் நன்கு அறியப்பட்டவை: இந்த உலோகம் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டால் தோல் புற்றுநோய், நுரையீரல் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தும். ஹோமியோபதி மருந்தில் 1%க்கும் குறைவான ஆர்சனிக் உள்ளது என்று மும்பையில் உள்ள பிரிடிக்டிவ் ஹோமியோபதி கிளினிக்கின் டாக்டர் அம்ரிஷ் விஜயக்கர் தெரிவித்தார்.

இது குறித்து அம்ரிஷ் விஜயக்கர் கூறுகையில், “ஆர்செனிகம் ஆல்பம் உடலில் ஏற்படும் அழற்சியை சரிசெய்வதாக கருதப்படுகிறது. இது வயிற்றுப்போக்கு, இருமல் மற்றும் சளி போன்றவற்றை கவனித்துக்கொள்கிறது” என்று கூறினார். ஒரு பாடநெறி கொண்ட ஒரு சிறிய பாட்டில் ரூ.20-30 ஆகும்.

பேராசிரியர் ஜி வித்தவுல்காஸ் இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் கிளாசிக்கல் ஹோமியோபதி வெளியிட்டுள்ள கட்டுரையில், ஆர்செனிகம் ஆல்பம் ஹோமியோபதிகளால் பொதுவாக கவலை, அமைதியின்மை, குளிர், அல்சரேஷன்ஸ், எரியும் வலிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இது தூள் வடிவில் அல்லது டேப்லெட்டாக எடுக்கப்படுகிறது என்று எழுதியுள்ளார்.

கோவிட்-19 தொற்று சூழல்

ஜனவரி 28ம் தேதி ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் (சி.சி.ஆர்.எச்) அறிவியல் ஆலோசனைக் குழுவின் 64 வது கூட்டத்தில், “ஆர்செனிகம் ஆல்பம் 30 கொரோனா வைரஸ் தொற்றுநோய்களுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளப்படலாம்” என்று கருத்து தெரிவித்தது. சி.சி.ஆர்.எச் இந்த மருந்து காய்ச்சலுக்கு எதிரான "சாத்தியமான தடுப்பு" மட்டுமே என்று ஒரு உண்மை அறிக்கையை வெளியிட்டது. அடுத்த நாள், ஆயுஷ் அமைச்சகம் மூன்று நாட்களுக்கு வெறும் வயிற்றில் மருந்து எடுத்துக்கொள்ளவும், நாட்டில் வைரஸ் பரவல் தொடர்ந்தால் ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் செய்யவும் பரிந்துரைத்தது.

மார்ச் 6ம் தேதி, இந்தியா ஐந்து கோவிட்-19 வழக்குகளை பதிவு செய்தபோது, ​​ஆயுஷ் அமைச்சின் செயலாளர் ராஜேஷ் கோடெச்சா அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் தடுப்பு மற்றும் முன்காப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டு கடிதம் எழுதினார். அவரது கடிதம் ஆர்செனிகம் ஆல்பம் 30 இன் மூன்று நாள் அளவை ஒரு முற்காப்பு மருந்தாக பரிந்துரைத்தது. அடுத்த நாள், கோவிட்-19 போன்ற நோய்க்கு எதிராக "தடுப்பு மற்றும் முன்காப்புக்கு எளிய தீர்வுகள் கொண்ட மற்றொரு அறிவிப்பை அமைச்சகம் வெளியிட்டது மற்றும் ஆர்செனிகம் ஆல்பம் 30ஐ ஹோமியோபதி தீர்வாக பட்டியலிட்டது.

“ஆர்செனிகம் ஆல்பம் 30ஐ தினமும் ஒரு முறை வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். சமூகத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஒரே அட்டவணையைப் பின்பற்றி ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அறிகுறியை பொருத்து பிரையோனியா ஆல்பா, ருஸ் டாக்ஸிகோ டென்ட்ரான், பெல்லடோனா மற்றும் கெல்மேசியம் உள்ளிட்ட பல்வேறு ஹோமியோபதி சிகிச்சையில் ஆர்செனிகம் ஆல்பத்தை கடிதம் பட்டியலிட்டது. “காலரா, ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்ஸா, மஞ்சள் காய்ச்சல், ஸ்கார்லட் காய்ச்சல், டிப்தீரியா, டைபாய்டு போன்ற தொற்றுநோய்களின் போது ஹோமியோபதி தடுப்புக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது” என்று அது கூறியுள்ளது.

2014ம் ஆண்டில் எபோலா வைரஸ் பரவலின்போது, ​​உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு நிபுணர் குழு, “இதுவரை அறியப்படாத செயல்திறன் மற்றும் பாதகமான விளைவுகள் நிரூபிக்கப்படாத தலையீடுகளை வழங்கும் நெறிமுறை, தடுப்பூசி அல்லது எதிர்ப்பு எதுவும் இல்லாத நிலையில் தடுப்புக்கான சாத்தியமான சிகிச்சையாக உள்ளது” என்று அது பரிந்துரைத்துள்ளது.

அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சில சமயங்களில் இலவசமாக இந்த மருந்துகளை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர்.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தனியார் பயிற்சியாளர்கள் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி போன்ற மாற்று மருந்துகளை கோவிட்-19க்கு சிகிச்சையளிக்க முயற்சிக்க அனுமதித்தனர்.

அறிவியல் எங்கே?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “நாங்கள் மருந்து குறித்து எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை.” என்று கூறினார்.

ஆர்செனிகம் ஆல்பத்தை கோவிட்-19-க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்துவது குறித்து உலக சுகாதார நிறுவனத்துக்கு எந்த வழிகாட்டுதல்களும் இல்லை. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் “இது கோவிட்-19க்கு செயல்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.

ஹோமியோபதி மருந்தை மதிப்பீடு செய்வதற்கும் கோவிட்-19 க்கு எதிராகப் பயன்படுத்த வேண்டுமா என்று முடிவு செய்வதற்கும் மகாராஷ்டிரா அரசு ஒரு பணிக்குழுவை அமைத்துள்ளது. அதற்கு உறுப்பினர்கள் தீர்மானிக்கப்படாமல் இருப்பதாகக் கூறினர். பொது சுகாதாரத் துறையின் இணை இயக்குனர் டாக்டர் அர்ச்சனா பாட்டீல் கூறுகையில், வைட்டமின் சி மாத்திரைகள் போன்ற நோய் எதிர்ப்பு ஊக்கியாக மருந்துகளின் பயன்பாட்டை மகாராஷ்டிரா அனுமதிக்கிறது. ஆனால், அதை ஒரு முன்காப்பு மருந்தாக ஊக்குவிக்கவில்லை. இது முன்காப்பு மருந்தாக செயல்படுகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. எனவே, அனைவருக்கும் இதை நாங்கள் உலகளவில் ஊக்குவிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்தபோதிலும், ஒரு நாள் உள்ளூர்வாசிகள் தனது பகுதியை சுற்றி வருவதை மும்பை கார்ப்பரேட்டர் ஆல்பா ஜாதவ் நினைவு கூர்ந்தார். “அவர்கள் ஆர்செனிகம் ஆல்பத்தை எடுத்ததாகக் கூறியது பயமாக இருந்தது; இந்த மருந்து கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்று கூறினார்.

தடுப்பு மருந்தாக ஆர்செனிகம் ஆல்பம் 30ஐ விஞ்ஞான ரீதியாக சரிபார்க்க எந்தவொரு மருத்துவ பரிசோதனையோ அல்லது பெரிய அளவிலான ஆய்வுகளோ மேற்கொள்ளப்படாத நிலையில், அதனுடைய பெரிய அளவிலான தேவை சில ஹோமியோபதி மருத்துவர்களையும் கவலையடையச் செய்துள்ளது. டாக்டர் விஜயக்கர், ஆயுஷ் அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கும் முன் அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஏன் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்று கேட்டு தங்கள் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது என்றார்.

ஆயுஷ் அமைச்சகம் சுவாச நோய் மற்றும் காய்ச்சலுக்கு தற்போதுள்ள மருந்தைப் பயன்படுத்துவது குறித்து தனது பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பல ஹோமியோபதி மருத்துவர்கள் ஹோமியோ மருந்து எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நபரும் ஹோமியோபதி மருந்துகளுக்கு மாறுப்பட்டு எதிர்வினையாற்றுகிறார்கள். மேலும், ஒரு மருந்தை அனைவருக்கும் ஒரு நோய்த்தடுப்பு மருந்தாக உலகளவில் வைத்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் பாகுபலி ஷா, “இந்த மருந்து சிகிச்சையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment