Advertisment

ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி; இந்தியாவின் ஏற்றுமதி

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா வலிமையாக உள்ளது. இந்தியா தன்னிறைவுக்காக வந்ததால், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மேக் இன் இந்தியா மற்றும் இந்தியாவின் முக்கிய பாதுகாப்புத் திட்டங்களில் கூட்டு வளர்ச்சி, இணை தயாரிப்பு பற்றி பேசியது.

author-image
WebDesk
New Update
Aero India, Aero India in Bangalore, air defence, air defence system, Army Air Defence, defence deals, ஏரோ இந்தியா விமானக் கண்காட்சி, இந்தியாவின் ஏற்றுமதி களம் , defence equipment, explained defence, Explained, Indian Express Explained, Opinion, Current Affairs

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா வலிமையாக உள்ளது. இந்தியா தன்னிறைவுக்காக வந்ததால், கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மேக் இன் இந்தியா மற்றும் இந்தியாவின் முக்கிய பாதுகாப்புத் திட்டங்களில் கூட்டு வளர்ச்சி, இணை தயாரிப்பு பற்றி பேசுகின்றன.

Advertisment

வெள்ளிக்கிழமை முடிவடைந்த இந்தியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான ஏரோ இந்தியா 2023 தயாரிப்புகள் கண்காட்சியின்போது சுமார் ரூ.80,000 கோடி மதிப்பிலான 200 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 800 பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில் 700 இந்திய நிறுவனங்கள் ஆகும்.

இந்த கண்காட்சியின் ஐந்து நாள் நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. அதில் இந்தியா தனது தன்னம்பிக்கை செய்தியை கூர்மைப்படுத்த முயன்றது. மேலும் பங்கேற்கும் பல நாடுகளுக்கு உள்நாட்டு ராணுவ தளங்கள், உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கான ஏற்றுமதி களத்தை உருவாக்கியது.

பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 27 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் துணை பாதுகாப்பு அமைச்சர்களிடையே உரையாற்றினார்.

ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் தங்களது ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தின.

ரஷ்யா அளவாகவும் அமெரிக்கா அதிகம் தெரியும் அளவு இருந்தது

ஏறக்குறைய ஒரு வருடமாக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, கண்காட்சியில் தனது வழக்கமான அளவான இருப்பை பதிவு செய்தது - ரோசோபோரான் எக்ஸ்போர்ட் (Rosoboronexport), யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்பரேஷன் (United Aircraft Corporation), அல்மாஸ் அண்டே ஏர் (Almaz-Antey Air) மற்றும் ஸ்பேஸ் டிஃபென்ஸ் கார்பரேஷன் (Space Defence Corporation) ஆகிய நிறுவனங்கள் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தன.

ஐந்தாம் தலைமுறை எஸ்.யு-57இ (Su-57E) மல்டிரோல் போர் விமானம், செக்மேட் இலகு ரக உத்தி விமானம், ராணுவ போக்குவரத்து விமானம் ஐ.எல் - 76எம்.டி -90ஏ(இ) IL-76MD-90A(E), போர் விமானங்கள், எஸ்.யு - 35 (Su-35), எஸ்.யு - 30 (Su-30), மற்றும் மிக் 35டி (MiG-35D) உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாட பொருட்களை ரோசோபோரான் எக்ஸ்போர்ட் காட்சிப்படுத்தியது. ராணுவ ஹெலிகாப்டர்கள், யு.ஏ.வி-கள், ட்ரோன்களைத் தடுக்கும் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

இருப்பினும், இந்த விமானங்கள் எதுவும் வானில் பறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பறக்கவில்லை.

இதற்கு நேர்மாறாக, அமெரிக்கா தனது முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய பிரதிநிதிகள் குழுவுடன் பெரிய அளவில் இருப்பைக் கொண்டிருந்தது. அதன் சமீபத்திய விமானங்களின் வானில் பறக்கும் நிகழ்ச்சிகளில் காட்சிப்படுத்தியது.

அமெரிக்க அரசாங்கம் அதன் விமானப்படையால் பயன்படுத்தப்படும் இரண்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முதன்முதலாக காட்சிக்கு வைத்தது - சூப்பர்சோனிக் எஃப்-35ஏ லைட்னிங் II மற்றும் எஃப்-35ஏ ஜாயின்ட் ஸ்ட்ரைக் ஃபைட்டர் மல்டிரோல் ஜெட் விமானங்களை காட்சிக்கு வைத்தது. இரண்டு பி-1பி லான்சர் குண்டுவீச்சு விமானங்கள் பறந்தன - இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கண்காட்சியில் இந்நிகழ்ச்சிக்கு இந்த விமானங்கள் இரண்டாவது முறை வருகை தந்துள்ளன.

ஏரோ மெட்டல் அலைன்ஸ் (Aero Metals Alliance), அமெர்க்காவின் அஸ்ட்ராநாட்டிக்ஸ் நிறுவனம் (Astronautics Corporation of America(, போயிங் (Boeing), ஜி.இ ஏரோ ஸ்பேஸ் (GE Aerospace), ஜெனரல் ஆட்டோமெட்டிஸ் ஏரோநாட்டிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவனம் (General Atomics Aeronautical Systems Inc), ஹைடெக் இறக்குமதி ஏற்றுமதி நிறுவனம் (Hi-Tech Import Export Corporation), ஜோனல் ஆய்வகங்கள் (Jonal Laboratories), கல்மான் வேர்ல்ட்வைட் (Kallman Worldwide), லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin), பிராட் &ஒயிட்னி (Pratt & Whitney), டி.டபிள்யூ மெட்டல்ஸ் எல்.எல்.சி (TW Metals LLC) போன்ற நிறுவனங்கள் காட்சிக்கு வைத்தன.

லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் எஃப்-21 போர் விமானம், சி-130ஜே போக்குவரத்து விமானம், எம்.எச்-60ஆர், ரோமியோ மல்டி-மிஷன் ஹெலிகாப்டர், ஜாவெலின் ஆயுத அமைப்பு மற்றும் எஸ்-92 மல்டிரோல் ஹெலிகாப்டர் ஆகியவற்றை காட்சிக்கு வைத்தது.

உள்நாட்டு இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ) தேஜாஸ் எம்.கே. 2 மற்றும் அட்வான்ஸ்டு மீடியம் காம்பாட் ஏர்கிராஃப்ட் (ஏ.எம்.சி.ஏ) ஆகியவற்றுக்கான ஜெட் என்ஜின்களை கூட்டாக தயாரிக்க, ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) என்ற என்ஜின் உற்பத்தியாளரின் உரிம விண்ணப்பத்தை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக இந்த மாத தொடக்கத்தில் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இவை தற்போது முன்னேற்றத்தில் உள்ளன.

பெரிய அளவில் காட்சிப்படுத்திய அமெரிக்கா

அமெரிக்காவின் பெரிய தூதுக்குழு மற்றும் அவர்களின் சமீபத்திய விமானத்தில் பறக்கும் முடிவு உத்தி மற்றும் புவிசார் அரசியல் சமிக்ஞையைக் கொண்டுள்ளது. உக்ரைனில் நடந்த போரின் காரணமாக மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் கீழ் உள்ள ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதி உள்ளது - அமெரிக்கா இந்தியாவை மாஸ்கோவைச் சார்ந்திருப்பதில் இருந்து விலக்கி, பாதுகாப்புத் திட்டங்களில் கூட்டாண்மை வாய்ப்புகள் மூலம் இந்திய ராணுவத்தை ஈர்க்க விரும்புகிறது.

இந்நிகழ்வின் போது ஒரு எஃப்-35 உளவு விமானம் வானில் பறந்து காட்டப்பட்டு விளக்கம் அளித்தாலும், அதன் ஐந்தாவது தலைமுறை ஏ.எம்.சி.ஏ- பணிபுரியும் இந்தியாவிற்கு ஜெட் வழங்க விரும்புகிறதா என்பது குறித்து அமெரிக்காவிடமிருந்து எந்த வார்த்தையும் இல்லை.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது பாதுகாப்பு இறக்குமதி அளவை விரிவுபடுத்த முயற் செய்கிறது - பிரான்சில் இருந்து ரஃபேல் போர் விமானங்கள், சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், எம் 777 இலகுரக ஹோவிட்சர்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து சிக் - சாயர் (SiG-Sauer) ரைஃபிள்கள் ஆகியவை பெரிய அளவில் வாங்குதல்களில் அடங்கும். இந்தியாவின் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் அமெரிக்க ஜி.இ மரைன் இன்ஜின்களால் இயக்கப்படுகிறது.

இருப்பினும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்கியது ஏ.கே-203 ரைபிள்களை தயாரிப்பதற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதியில் ரஷ்யாவுடன் கூட்டு முயற்சியை அமைத்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல்

பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் இஸ்ரேல் நாடுகளைச் சேர்ந்த பல பாதுகாப்பு நிறுவனங்கள் இந்திய இராணுவத்திற்கு பலவிதமான உபகரணங்களையும் கூட்டுறவையும் வழங்கியது.

இங்கிலாந்து பாதுகாப்புக் கொள்முதல் அமைச்சர் அலெக்ஸ் சாக், ரோல்ஸ் ராய்ஸ், பி.ஏ.இ சிஸ்டம்ஸ், எம்.பி.டி.ஏ யு.கே, காலின்ஸ் ஏரோஸ்பேஸ் போன்ற உற்பத்தி நிறுவனங்களை உள்ளடக்கிய அரசு மற்றும் ராணுவப் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கினார்.

ரோல்ஸ் ராய்ஸ் எதிர்காலத்தில் ஐபியைப் பகிர்வதன் மூலம் ஏஎம்சிஏவுக்கான என்ஜின்களை வடிவமைத்து உருவாக்க விரும்புகிறது. பி.ஏ.இ சிஸ்டம்ஸ் அறிக்கையில் கூறுகையில், பெங்களூரை தளமாகக் கொண்ட தொழில்நுட்பக் குழுவான நியூஸ்பேஸ் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து அடுத்த தலைமுறைக்கான குழுமமற்ற அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளை ஆராயும் என்று கூறியுள்ளது.

இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஹெரான் எம்.கே 2 மற்றும் ஹெரான் டி.பி யு.ஏ.வி-களின் மாதிரிகளை காட்சிப்படுத்தியது - ஹெரான் எம்.கே 2 ஏற்கனவே இந்திய ஆயுதப்படைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் லோரா (LORA) (நீண்ட தூர பீரங்கி) மேற்பரப்பில் இருந்து மேற்பரப்பு ஏவுகணை அமைப்பை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்தது. எச்.ஏ.எல் மற்றும் இஸ்ரேலின் எல்டா சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இந்திய தளங்களுக்கான கடல்சார் ரோந்து ராடாரில் (எம்.பி.ஆர்) எதிர்கால வணிகத்தில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரெஞ்சு நிறுவனங்களில் டசால்ட் ஏவியேஷன் - ரஃபேல் மற்றும் அதன் கடல் விமானம் - ஃபால்கன் 2000 விமானம் - சஃப்ரான் விமானம் ஆகியவை அடங்கும். ஹெலிகாப்டர் என்ஜின்களின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் வாழ்நாள் ஆதரவுக்கான கூட்டு முயற்சியை உருவாக்குவதற்கு எச்.ஏ.எல் மற்றும் சஃப்ரான் ஹெலிகாப்டர் என்ஜின் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஸ்வீடன் விண்வெளி, பாதுகாப்பு நிறுவனமான சாப், இந்தியாவின் மல்டிரோல் போர் விமானம் (எம்.ஆர்.எஃப்.ஏ) திட்டத்திற்காக அதன் மேம்பட்ட போர் விமானமான க்ரிபென் இ-யை உருவாக்க வந்திருந்தது.

பிரேசிலின் எம்ப்ரேயர் சி-390 மில்லினியத்தை இந்திய விமானப் படையின் ஏ.என்-32 போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாகக் காட்சிப்படுத்தியது.

இந்தியாவின் ஏற்றுமதி குரல்

2023-24 ஆம் ஆண்டிற்கான மூலதன பட்ஜெட்டில் 75 சதவீதத்தை உள்நாட்டு கொள்முதல்களுக்காக ஒதுக்குவது உட்பட, இந்தியா தனது சுயசார்பு திட்டங்களை முன்வைத்த நிலையில், கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களும் மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் இந்தியாவில் கூட்டு மேம்பாடு மற்றும் இணை உற்பத்தி பற்றி பேசியது.

இந்நிகழ்ச்சியில் 700 இந்திய நிறுவனங்களில், ராணுவத்திற்கான முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான தீர்வுகளைக் காண்பிக்கும் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன.

தொடக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியை 2024-25 ஆம் ஆண்டுக்குள் 1.5 பில்லியன் டாலரில் இருந்து 5 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றார்.

எல்.சி.ஏ தேஜாஸ், மேம்பட்ட லகு ரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்) மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையை விற்பனை செய்ய அர்ஜென்டினா, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எதிர்காலத்தில், எல்.சி.ஏ தேஜாஸின் எம்.கே 2 வடிவமைப்போடு உள்நாட்டு எச்.டி.டி-40 பயிற்சி விமானம், லகு ரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் லகு ரக கலப்பு ஹெலிகாப்டர் (எல்.சி.எச்) ஆகியவற்றையும் இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Iaf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment