Rahul Sabharwal
Delhi assembly election results 2020 : 2015ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9.65% வாக்குகளை பெற்றது. ஆனால் நடைபெற்று முடிந்த இந்த 2020-ம் ஆண்டுக்கான தேர்தலில் காங்கிரஸ் வெறும் 4.24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
கடந்த கால வெற்றிகள் போதுமானது இல்லை
கடந்த ஒரு மாதமாக டெல்லியின் சாலைகளில் காங்கிரஸ் கட்சியினர் செய்த பிரச்சாரம் முழுக்க முழுக்க கடந்த காலங்களில், மறைந்த முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் செய்த நல்ல திட்டங்களை மட்டுமே முன் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் இந்த பிரச்சாரங்கள் வாக்காளர்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தவில்லை. வாக்காளர்கள் முன்னோக்கி செல்லவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு கடந்த காலங்களை காண விரும்புவதில்லை. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இப்போது மீண்டும் மக்களை சந்திக்க தேர்தல் களம் வந்த காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜகவை குறை சொல்வதைக் காட்டிலும் சொல்வதற்கு வேறொன்றும் கிடைக்கவில்லை. தேர்தல் நடப்பதற்கு முதல்நாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் “காங்கிரஸ் கட்சி 1-2% வாக்குகளை மட்டுமே இந்த தேர்தலில் பெறும்” என்று கூறியிருந்தார்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிப்பதை காட்டிலும் இந்த கட்சி இன்னும் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ உள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜீ தான் வெளியிட்டுள்ள ட்வீட்டில் ”நாங்கள் டெல்லியில் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். தற்சோதனை முயற்சிகள் போதும். இனிமேலாவது வேலையில் இறங்குவோம். முக்கிய முடிவுகள் மேற்கொள்வதில் கட்சி தலைமை எடுத்துக் கொள்ளும் அதிகபட்சமான நேரம், மாநில அளவில் கட்சி உறுப்பினர்களிடம் குறைந்த ஒற்றுமை, உக்கமளிக்கப்படாத தொண்டர்கள் என அனைத்தும் தான் இந்த தோல்விக்கு காரணம். நானும் என்னுடைய தரப்பில் இந்த தோல்விக்கு பொறுப்பேற்கின்றேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
குறைந்து வரும் கட்சித் தொண்டர்களும் கூட இதில் முக்கிய இடம் பெறுகிறது. ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சியினர் ஒவ்வொரு வீடுவீடாக சென்று மக்களை அணுகினார்கள். காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஐடியாக்கள் தேவை. உள்ளூர் கட்சிக்காரர்களை அதிகம் ஊக்குவிக்க வேண்டும். அதே போன்று சிறப்பான பிரச்சார யுக்திகள் இருந்தால் மட்டுமே வருகின்ற காலங்களில் டெல்லி தேர்தலில் வெற்றி உறுதியாகும்.