டெல்லியில் தேர்தல்; ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வியூகம் என்ன?

டெல்லி மக்கள், பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி வாக்காளர்களுக்கு பல உறுதியான நலத்திட்டங்களுடன் புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

delhi elections 2020, delhi elections 2020 dates, delhi elections 2020 dates announced, delhi elections 2020 schedule, delhi elections 2020 date, delhi assembly elections 2020 date, டெல்லி, டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020, delhi election 2020, delhi election 2020 dates,aap, bjp, congress, ஆம் ஆத்மி, அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக, காங்கிரஸ், arvind kejriwal, delhi election 2020 date, delhi vidhan sabha election, delhi vidhan sabha election 2019, delhi vidhan sabha election 2020 date, delhi vidhan sabha election date 2020, delhi vidhan sabha election 2020 schedule, delhi vidhan sabha chunav
delhi elections 2020, delhi elections 2020 dates, delhi elections 2020 dates announced, delhi elections 2020 schedule, delhi elections 2020 date, delhi assembly elections 2020 date, டெல்லி, டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020, delhi election 2020, delhi election 2020 dates,aap, bjp, congress, ஆம் ஆத்மி, அர்விந்த் கெஜ்ரிவால், பாஜக, காங்கிரஸ், arvind kejriwal, delhi election 2020 date, delhi vidhan sabha election, delhi vidhan sabha election 2019, delhi vidhan sabha election 2020 date, delhi vidhan sabha election date 2020, delhi vidhan sabha election 2020 schedule, delhi vidhan sabha chunav

டெல்லி மக்கள், பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி கட்சி வாக்காளர்களுக்கு பல உறுதியான நலத்திட்டங்களுடன் புதிய ஆட்சியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. பாஜக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பதாகையிலும் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த மும்முனைப் போட்டியில், குறைவான தாக்கத்தை செலுத்தும் காங்கிரஸ் கட்சி அதனுடைய பிரசாரம் எதனை மையமாகக் கொண்டிருக்கும் என்பதை இன்னும் சுட்டிக்காட்டவிலை.

தேர்தல் நாளுக்கு ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், மூன்று கட்சிகள் டெல்லியில் நிற்கின்றன.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: ஆம் ஆத்மி

2015 தேர்லில் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபையில் உள்ள 70 இடங்களில் 67 இடங்களையும் 54.3% வாக்குகளையும் பெற்று அசாதாரணமாக ஆட்சிக்கு வந்தார்.

2013 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி தொக்ங்கு சட்டசபையில் 28 இடங்களை வென்று காங்கிரசின் 8 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் அரசு அமைத்தது. பாஜக அதன் கூட்டணி கட்சியான ஷிரோமணி அகாலிதளத்துடன் 32 இடங்களை வென்ற பாஜக, அரசு அமைக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டது. இருப்பினும், கெஜ்ரிவால் 49 நாட்களுக்குப் பிறகு ராஜினாமா செய்த பின்னர், டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இரண்டாவது ஆம் ஆத்மி கட்சி அரசு, அருதிப் பெரும்பான்மையுடன் போராளிகள் என்ற பிம்பத்தை முன்வைத்து தொடங்கியது. பாஜகவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சினைகளில் மோதல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்த அதிர்வுகளை உருவாக்கவில்லை. இதில் ஓரளவிற்கு பின்வாங்கவும்கூடும்.

கெஜ்ரிவால் ஒரு பாடம் கற்றுக்கொண்டவராகக் காணப்பட்டார். மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இந்தியத் தேர்தல் ஆணையம் திங்களன்று (ஜனவரி 6) தேர்தல் தேதிகளை அறிவித்த சில நிமிடங்களில், கெஜ்ரிவால் டுவிட்டரில் “யே சுனாவ் காம் பர் ஹோகா (இந்தத் தேர்தல் செயல்திறன் சாதனை அடிப்படையில் போட்டியிடுவோம்).” என்று பவிவிட்டார்.

2019 நவம்பர் 22 முதல் டிசம்பர் 3 வரை, வளரும் சமூகங்களின் ஆய்வுக்கான மையம் (சி.எஸ்.டி.எஸ்) லோக்னிட்டி திட்டத்தின் மூலம் 2,298 டெல்லி வாக்காளர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அது ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான ஆதரவு இருப்பதாக தெரிவித்தது.

இந்த கருத்துக் கணிப்பில, பதிலளித்தவர்களில் ஐந்தில் நான்குபேர் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் செயல்திறனில் முழுமையான திருப்தி (53%) அல்லது ஓரளவு திருப்தி (33%) தெரிவித்துள்ளனர்.

10 வாக்காளர்களில் 9 பேர் கெஜ்ரிவாலை விரும்புவதாக கூறியுள்ளனர். மேலும், பதிலளித்தவர்களில் 66% பேர் அவரை உறுதியாக விரும்புவதாகக் கூறினர். கெஜ்ரிவாலுக்கு ஆதரவான பதில் மோடிக்கு ஆதரவாக இருந்ததை விட சற்று சிறப்பாக இருந்தது. இதில் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் நான்கில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் செயல்திறனுடன் “முழுமையாக திருப்தி” (53%) அல்லது “ஓரளவு திருப்தி” (33%).

10 வாக்காளர்களில் ஒன்பது பேர் கெஜ்ரிவாலை “விரும்புவதாக” கூறியுள்ளனர், மேலும் பதிலளித்தவர்களில் 66% பேர் அவரை மிகவும் விரும்புவதாகக் கூறினர். கெஜ்ரிவாலுக்கு ஆதரவான பதில் மோடிக்கு ஆதரவாக இருந்ததை விட சற்று சிறப்பாக இருந்தது –
மொத்தம் 79% பேர் மோடியை விரும்புவதாகக் கூறினர். 49% பேர் அவரை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தனர்.

இருப்பினும், ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிட்டபோது, கருத்துக்கணிப்பின் பொருளை அறிந்த வாக்காளர்கள், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக தங்கள் விருப்பத்தை இன்னும் தீர்க்கமாக வெளிப்படுத்தினர்.

“நீங்கள் எந்த தலைவரை அதிகம் விரும்புகிறீர்கள், மோடியா அல்லது கெஜ்ரிவாலா?” என்று கேட்டதற்கு 32% பேர் மோடியைத் தேர்ந்தெடுத்தனர். 42% பேர் கெஜ்ரிவால் என்றனர்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: பாஜக

டெல்லியில் வெற்றிபெற பாஜக தீவிரமாக உள்ளது. அதற்கு காரணம் தேசிய தலைநகரம் என்பதால் மட்டுமல்ல.

பாஜக 2019 மே மாதம் மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதை தவறவிட்டு விழித்துக்கொண்ட பின்னர், கடந்த மாதம் ஜார்க்கண்டில் ஒரு மோசமான அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. டெல்லியில் வெற்றி பெற்றால் அதற்கு பெரிய மன உறுதியை அதிகரிக்கும்.

மோடியின் நற்பெயர் பெரும்பாலும் அப்படியே உள்ளது. ஆனால், அந்த நற்பெயரை வாக்குகளாக மாற்றுவதே பாஜகவுக்கு மிகப்பெரிய சவால். மற்ற மாநிலங்களைப் போலல்லாமல், டெல்லியில், பாஜக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆளுமையுடன் போராட வேண்டியிருக்கும். அதோடு, மேலும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மீதான வழக்கமான தாக்குதல்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்காது.

2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் டெல்லி மோடியை உறுதியாக ஆதரித்தது. பாஜகவுக்கு ஏழு இடங்களையும் கொடுத்தது.

கட்சியின் வாக்கு விகிதம் 2015 சட்டமன்றத் தேர்தலில் 32.19 சதவீதத்திலிருந்து மே மக்களவைத் தேர்தலில் 56.86 சதவீதமாக உயர்ந்தது.

புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் மையமாகவும் டெல்லி நகரம் விளங்குகிறது. குற்றம் சாட்டப்பட்ட சூழல், அடையாளத்தைப் பற்றிய பொங்கி எழும் விவாதங்கள் மற்றும் சாத்தியமான எதிர்நிலையாக்கம் ஆகியவற்றிலிருந்து பாஜக பயனடைவதாக நம்புகிறது. ஆனால் கட்சி உள் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

கடந்த முறையைப் போலல்லாமல், பாஜக இன்னும் ஒரு முதலமைச்சர் வேட்பாளருடன் வரவில்லை. பாஜக 2015-ல் கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக முன்வைத்த முடிவு தவறு என்று உணர்கிறது.

உண்மையில், தலைமை பிரச்சினை விவேகமாக உள்ளது. விஜய் கோயல், மனோஜ் திவாரி, மீனாட்சி லேக்கி, மற்றும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி மற்றும் ஹர்ஷ் வர்தன் போன்ற பல தலைவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழந்துவிட்டனர். இதில், மேற்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா சமீபத்திய சேர்க்கை.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020: காங்கிரஸ்

காங்கிரஸ் 15 ஆண்டுகளாக தேசிய தலைநகரை ஆட்சி செய்த பின்னர் 2013 ல் அதிகாரத்தை இழந்து போராடி வருகிறது.

2015 ஆம் ஆண்டில் மிகக் குறைவான 9.65 வாக்கு சதவீதத்திலிருந்து, மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் 18.2 சதவீதத்தைத் தாண்டி அதன் வாக்குப் பங்கு 22.63% ஆக உயர்ந்தது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு பிரபலமான முகம் இல்லை. கவர்ச்சியான மற்றும் பிரபலமான மறைந்த ஷீலா தீட்ஷித் 2013 இல் வெளியேற்றப்பட்டவுடன், மீண்டும் ஆதரவு அலைகளைத் திருப்ப முடியவில்லை.

காங்கிரசின் ஒரே நம்பிக்கை என்னவென்றால், சிறுபான்மையினரிடையே அமைதியின்மை இருப்பது. முஸ்லிம்களைப் புரிந்துகொள்ளுங்கள் முஸ்லிம் சமூகம் அதிக அளவில் இருக்கும் தொகுதிகலீல் அதற்கு உதவும். கீர்த்தி ஆசாத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கட்சியும் பூர்வஞ்சாலி மக்களைக் கவரும் என்று நம்புகிறது.

பாஜக நிச்சயமாக காங்கிரஸிடமிருந்து ஒரு நல்ல செயல்திறனை எதிர்பார்த்திருக்கிறது. அப்படி ஒரு செயல்திறன் வந்தால் ஏற்படும் ஆத் ஆத்மி கட்சியின் பாதிப்பு தானாகவே பாஜகவுக்கு பலத்தை அதிகரிக்கும்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Delhi assembly elections 2020 aap arvind kejriwal bjp congress stand

Next Story
பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?historical significance of Nankana Sahib in Pakistan? - பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com