டெல்லி கொரோனா ஆப் - படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் இருப்பை தெரிந்து கொள்வது எப்படி?

வென்டிலேட்டர்கள் கிடைப்பது குறித்த தகவலுக்கான மொபைல் ஆப்-ஐ அறிமுகப்படுத்தயுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ஆப் மூலம் கோவிட-19 நோயாளிகள், டெல்லி கொரோனா வைரஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை குறித்த விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இருப்பினும், மருத்துவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு ஆலோசனை வழங்கும் சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்க அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று முதல்வர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகளின்படி, தேசிய தலைநகரில் 11,565 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்ப மண்டலப் புயல்: 130 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிராவை தாக்குகிறது

டெல்லி கொரோனா ஆப்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

‘டெல்லி கொரோனா’ என்ற ஆப்-ஐ கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இது தற்போது Android பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆப்பிள் பயனர்களுக்கு இந்த ஆப் இதுவரை கிடைக்கவில்லை.


டெல்லி கொரோனா ஆப்-ஐ எவ்வாறு இயக்குவது?

இரு மொழி பயன்பாடு கொண்ட ஆப் இது. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தகவல்களை வழங்கும் – மிகவும் எளிமையான பயனர் அம்சத்தை கொண்டுள்ளது. முகப்புத் திரையில் தேர்வு செய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளன – கோவிட் -19 படுக்கைகள் மற்றும் கோவிட் -19 வென்டிலேட்டர்கள்.

இதில் என்ன தகவல் கிடைக்கிறது?

இரண்டு விருப்பங்களில் ஒன்றைத்தேர்வு செய்யும் போது, ஒரு பயனர் தங்குமிடம் மற்றும் காலியிடம் குறித்த விவரங்களைப் பெறுவார். எடுத்துக்காட்டாக, கோவிட் -19 படுக்கைகளைத் தட்டினால் ஒரு புதிய பக்கத்திற்கு வழிவகுக்கும், அங்கு மருத்துவமனை வாரியாக மொத்த படுக்கைகள், ஆக்கிரமிக்கப்பட்ட படுக்கைகள் மற்றும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு காலியாக உள்ள படுக்கைகள் விவரம்  கிடைக்கும். அதேபோல், வென்டிலேட்டர் ஆப்ஷனை தேர்வு செய்கையில், மருத்துவமனை வாரியாக மொத்த, ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் கிடைக்கப்பெறும் வென்டிலேட்டர்கள் பற்றிய தகவல் கிடைக்கும்.

டெல்லியில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்களின் தற்போதைய நிலை என்ன?

இன்று காலை 10 மணிக்கு கடைசியாக புதுப்பிக்கப்பட்ட இந்த ஆப், 65 சுகாதார வசதிகளில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லங்களில் 6,731 படுக்கைகளில், 2,819 ஆக்கிரமிக்கப்பட்டும், 3,912 காலியாக உள்ளதாகவும் தகவல் அளித்துள்ளது.

தீவிர நோயாளிகளுக்கு தேவைப்படும் வென்டிலேட்டர்களைப் பொறுத்தவரை, 92 பயன்படுத்தப்பட்டு 210 பயன்படுத்தப்படாமல் உள்ளன. வென்டிலேட்டர் வசதி கொண்ட 13 மருத்துவமனைகள் உள்ளன.

டெல்லி கொரோனா ஆப்-ஐ அணுக முடியாதவர்கள் என்ன செய்வது?

இதே தகவல் coronabeds.jantasamvad.org/ என்ற போர்ட்டலில் கிடைக்கிறது. ஹெல்ப்லைன் எண் 1031 ஐ டயல் செய்தவர்களுடன் எஸ்எம்எஸ் வழியாகவும் தகவல் பகிரப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். இதற்காக வாட்ஸ்அப் எண்ணையும் (8800007722) வெளியிட்டார்.

“படுக்கைகள் உள்ளன என்று பயன்பாடு தெரிவித்த போதிலும், எந்தவொரு மருத்துவமனையிலும் நீங்கள் அனுமதிக்க மறுக்கப்பட்டால், உங்கள் குறைகளைத் தெரிவிக்க 1031 ஐ அழைக்கவும், சுகாதாரத் துறையின் சிறப்புச் செயலாளர் உங்களுக்கு படுக்கைகள் கிடைப்பதை உறுதி செய்வார்” என்று முதல்வர் கூறினார்.

சுகாதார அறிக்கை என்ன சொல்கிறது?

டெல்லி இதுவரை 20,834 கொரோனா பாதிப்புகளை பதிவு செய்துள்ளதாகவும், அவற்றில் 11,565 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கப்படுபவர்களில் 6,238 பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர், பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அல்லது அறிகுறிகளைக் காட்டவில்லை. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளது.

பாதிப்புகள் அதிகரித்து வருகின்ற போதிலும், எங்களிடம் போதுமான படுக்கைகள், ஐ.சி.யுக்கள், வென்டிலேட்டர்கள் உள்ளன. ஆனால் ஒருபுறம் குறைபாடுகள் இல்லை என்று நாங்கள் சொல்கிறோம், மறுபுறம் ஒரு தகவல் இடைவெளி உள்ளது. படுக்கைகள், ஐ.சி.யூக்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் கிடைப்பதை மக்கள் சோதிப்பது கடினம். இந்த ஆப் தகவல் இடைவெளியை குறைக்க உதவும், ”என்றார்.

பயன்பாடு ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலை 10 மணி மற்றும் மாலை 6 மணிக்கு புதுப்பிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close