டெல்லி- என்.சி.ஆர் பகுதியில் நேற்று வியாழன் இரவு (நவம்பர் 9) லேசான மழை பெய்த போதும், டெல்லி அரசாங்கம் இந்த வார தொடக்கத்தில் காற்றில் உள்ள மாசு பொருட்களைக் (pollutants) குறைக்க கிளவுட் சீடிங் அல்லது 'செயற்கை மழை' திட்டத்தை செய்ய உள்ளதாக அறிவித்தது.
இப்போது முன்மொழியப்பட்ட முன்மொழிவு இந்தியாவில் முன்பு முயற்சி செய்யப்பட்டுள்ளது, ஆனால் மழைக் காலங்களில் - ஈரப்பதத்துடன் கூடிய மேகங்கள் இருக்கும் போது - மற்றும் பருவமழைக்கு முந்தைய மாதங்களில் மட்டுமே செய்யப்பட்டன. இது தவிர, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழையை வரவழைக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மாசுபாட்டைக் குறைக்க அல்ல.
மேக விதைப்பு (கிளவுட் சீடிங்) என்றால் என்ன?
நீராவி சிறிய துகள்களுடன் கலந்து சுற்றி நீர்த்துளிகளாக உருவாகி பின் மேகமாக உருவாகிறது. இந்த நீர்த்துளிகள் மோதி வளரும்; அவை கனமாகி, மேகம் நிறைவுற்றால் மழை பெய்கிறது.
மேக விதைப்பின் போது மேகங்கள் பொதுவாக சில்வர் அயோடைடு, பொட்டாசியம் அயோடைடு அல்லது சோடியம் குளோரைடு போன்ற உப்புகளுடன் கலக்கப்படுகின்றன. இவை தான் விதையாக கருதப்படுகிறது. இந்த உப்புகள் கூடுதலாக நியூகிலியை வழங்கி அதிக மேகத் துளிகள் உருவாகலாம்.
இவை விமானம் அல்லது தரையில் இருந்து ஜெனரேட்டர்கள் மூலம் மேகத்திற்குள் செலுத்தப்படுகின்றன.
இந்த செயல்முறை குறித்து ஐஐடி கான்பூரின் பேராசிரியரும், சுத்த காற்று திட்டத்தின் தேசிய வழிநடத்தல் குழு உறுப்பினருமான சச்சிதா நந்த் திரிபாதி கூறுகையில், "விதைப்பு மேக நுண்ணுயிர் செயல்முறைகளை துரிதப்படுத்துகிறது. பூமியின் மேற்பரப்பை அடைய மற்றும் எடுத்துச் செல்லும் வழியில் ஆவியாகாமல் இருக்க போதுமான பெரிய நீர்த்துளிகள் தேவை,” என்று கூறினார்.
மேக விதைப்பு எப்படி செய்ய வேண்டும்?
முதலில், மேக மூட்டம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மேகங்கள் அவசியம்.
இது குறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில், “மேக விதைப்பு செய்ய முதலில் போதுமான அளவு மேகங்கள் மற்றும் குறிப்பிட்ட ஆழம் இருக்க வேண்டும். உள்ளே, போதுமான அளவு மேகத் துளிகள் இருக்க வேண்டும். மேகத் துளிகளின் ஆரத்தை அதிகரிக்க மேக விதைப்பு செய்யப்படுகிறது, இதனால் அவை பெரிதாக வளரும் மற்றும் புவியீர்ப்பு விசையின் காரணமாக அவை மழையாக வரும். ஆனால் வெறும் வானத்தில் இதை செய்ய முடியாது என்றார்”.
குளிர்காலத்தில், மேற்கத்திய இடையூறு பிராந்தியத்தின் மீது நகரும் போது டெல்லியின் மீது மேகங்கள் உருவாகின்றன. இவை காஸ்பியன் அல்லது மத்தியதரைக் கடலில் உருவாகும் புயல்கள் மற்றும் வடமேற்கு இந்தியாவிற்கு பருவமழை அல்லாத மழையைக் கொண்டு வருகின்றன.
குளிர்காலத்தில் ஒரு நிலையான வளிமண்டலத்துடன், மேற்கத்திய இடையூறு வளிமண்டலத்தின் இந்த நிலைத்தன்மையை சீர்குலைக்கும் போது மேகங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"குளிர்காலத்தில், விதைப்பதற்குத் தேவையான மேகங்களை நீங்கள் பார்க்க முடியாது, ஆனால் மேகங்கள் உருவாகும் வழி மேற்குத் தொந்தரவுகள். மேகங்கள் இருந்தாலும், அவற்றின் உயரம் என்ன, திரவ நீர் உள்ளடக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று திரிபாதி கூறினார்.
மேகம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகளை ரேடார்கள் மூலம் முன்கூட்டியே தீர்மானிக்க முடியும் என்றாலும், விதைப்பு செய்யக்கூடிய நாளில் மற்ற நிலைமைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்தியாவில் இதற்கு முன் கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளதா, அது வெற்றி பெற்றதா?
இந்தியாவில், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு போன்ற இடங்களில் பெரும்பாலும் பருவமழையின் போது விதைப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
2018 மற்றும் 2019-ம் ஆண்டு மழைக்காலங்களில் நடைபெற்ற கிளவுட் ஏரோசல் இன்டராக்ஷன் மற்றும் மழைப்பொழிவு மேம்படுத்தல் பரிசோதனையின் (CAIPEEX-IV) நான்காவது கட்டம், மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சோலாப்பூரில் நடத்தப்பட்டது. இது 18 சதவீதம் அளவு மழைப்பொழிவை தந்தது.
ஐஐடி கான்பூர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், பருவமழைக்கு முந்தைய மாதங்களில், தங்கள் வளாகத்தில் முயற்சித்தது. ஆறு சோதனைகளில் ஐந்து வெற்றிகரமாக மழை பொழிவை விளைவித்தாக அது கூறியது.
இது காற்று மாசை குறைக்க உதவுமா?
இந்தியாவில் இதுவரை, மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் மேக விதைப்பு முயற்சி செய்யப்படவில்லை, மாறாக வறட்சி போன்ற நிலைமைகளைச் சமாளிக்க மட்டுமே முயற்சி செய்யப்பட்டுள்ளது.
கிளவுட் மைக்ரோபிசிக்ஸில் நிபுணத்துவம் பெற்றவரும், சோலாப்பூர் திட்டத்தில் பணியாற்றியவருமான தற்போது இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வுக் கழகத்தின் (ஐஐடிஎம்) விஞ்ஞானியாக உள்ள தாரா பிரபாகரன் கூறுகையில், "சீனா வானிலை மேலாண்மை விருப்பங்களை முயற்சித்த சில நிகழ்வுகள் உள்ளன. இந்தியாவில், இந்த அம்சத்தில் (மாசுபாட்டின் மீது மேக விதைப்பின் தாக்கம்) ஆய்வுகள் எங்களிடம் இல்லை.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/explained/explained-sci-tech/delhi-rain-cloud-seeding-pollution-explained-9021286/
எங்கள் நிலைமைகள் வேறுபட்டவை, இது குறித்து எங்களுக்கு ஒரு பிரத்யேக ஆய்வு தேவை. மேகங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் மிகவும் சிக்கலானவை, இவை non-linear செயல்முறைகள். இந்த விஷயத்தில் எவ்வளவு மழை கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. அது சரியாகத் தெரியவில்லை. மேகங்கள் இயற்கையாகவே மழையைப் பொழிகின்றன, எனவே இயற்கை மழையை விதை மழையிலிருந்து எவ்வாறு பிரிப்பது?"
SAFAR இன் நிறுவனர் திட்ட இயக்குநரும், தேசிய மேம்பட்ட ஆய்வுகளின் தலைவர் பேராசிரியருமான Gufran Beig கூறுகையில், “காற்று மாசுபாட்டிற்காக இந்த திட்டம் முதல் முறையாக செய்யப்படுகிறது. கணிசமான அளவு மழை பொழிவு இருக்க வேண்டும். அப்போது தான் மாசு பொருட்கள் நீக்க முடியும். இது தற்காலிகமானதாக இருக்கும், ஆனால் அது வெற்றிகரமாக இருந்தால், அது மாசுபாட்டின் ஓட்டத்தை உடைக்கும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.