Advertisment

சத்ய பால் கைதை மறுத்த டெல்லி போலீஸ்; ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் ஊழல் வழக்கு என்ன?

சத்ய பால் மாலிக்கின் புல்வாமா தாக்குதல் தொடர்பான பேச்சுகள் சர்ச்சையான நிலையில், ஹரியானாவில் அவரது ஆதரவாளர்கள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Delhi Police denies Satya Pal Malik detained What is the Reliance insurance scam case he is linked to

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுனர் சத்ய பால் மாலிக்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் சனிக்கிழமை (ஏப்ரல் 22) கைது செய்யப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர், அதே நேரத்தில் மாலிக் ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு தானாக வந்ததாகவும், அவர் எந்நேரமும் வெளியேற அவருக்கு சுதந்திரம் உள்ளது எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

Advertisment

முன்னதாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் குர்னாம் சிங் சாருனி, “நண்பர்களே.. நானும் சத்ய பால் மாலிக்கும் டெல்லி ஆர்.கே. புரத்தில் காவலர்களால் கைது செய்யப்பட்டோம்” எனக் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் டெல்லி காவல்துறை, “சத்ய பால் மாலிக் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. காவல் நிலையத்துக்கு அவரேதான் வந்தார். அவர் எப்போது வேண்டுமானாலும் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக சத்ய பால் மாலிக்கின் அண்மை கருத்துகள் சர்ச்சையான நிலையில், அவருக்கு ஹரியானாவில் ஆதரவாளர்கள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இதில் பண்ணைச் சட்டத்துக்கு எதிரான விவசாயிகளும் கலந்துகொள்ள இருந்தனர்.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை (ஏப்.21) ரிலையன்ஸ் காப்பீடு மோசடி வழக்கு தொடர்பாக ஆஜராக சி.பி.ஐ மாலிக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இது தொடர்பாக பேசிய மாலிக், “அவர்கள் (சி.பி.ஐ) என் இருப்பிடத்தை அறிய விரும்புகின்றனர். நான் ராஜஸ்தான் செல்ல உள்ளேன். அவர்களுக்கு ஏப்.27-29 வரை தேதி வழங்கியுள்ளேன்” என்றார்.

2019 பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி சில குறைபாடுகள் குறித்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டதாக தி வயர் பத்திரிகைக்கு கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் முன்னாள் ஆளுநர் கூறிய சில நாள்களில் இந்த நோட்டீஸ் வந்துள்ளது என்பதையும் அவர் கூறினார்.

முன்னதாக, அக்டோபர் 2021 இல், மாலிக் ஜே & கே கவர்னராக இருந்தபோது, இரண்டு கோப்புகளை அழிக்க ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

அவை என்னென்ன கோப்புகள் என்று அவர் குறிப்பிடவில்லை என்றாலும், அரசு ஊழியர்களுக்கு உடல்நலக் காப்பீடு வழங்குவதற்காக ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடர்பானது என்பது தெரியவந்தது.

2018 அக்டோபரில் மாலிக் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மற்ற விஷயம் கிரு ஹைடல் மின் திட்டம் தொடர்பான குடிமராமத்து பணிகளைப் பற்றியது ஆகும்.

இந்த விவகாரம் தொடர்பாக மாலிக் சிபிஐ முன் ஆஜராவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரில் ஏஜென்சியால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாலிக்கின் குற்றச்சாட்டுக்குப் பிறகு என்ன நடந்தது?

மாலிக்கின் உரிமைகோரல்களுக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜே & கே லெப்டினன்ட்-கவர்னர் மனோஜ் சின்ஹா, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் மற்றும் கிரு ஹைடல் வழக்குகளை சிபிஐயிடம் ஒப்படைக்க அவரது நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இதற்கிடையில், J&K அரசு ஊழியர்களின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், கிரு நீர்மின்சாரத் திட்டத்தின் சிவில் பணிகள் தொடர்பான ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரங்களில் நிதித் துறை மற்றும் ஊழல் தடுப்புப் பணியகத்திடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டன. ஜே & கே அரசாங்கத்தில் உள்ள தகுதிவாய்ந்த அதிகாரம் இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தத் தகவல்கள் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சி.பி.ஐ.க்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, ஏஜென்சியால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அதன் பிறகு 14 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் (RGIC) மற்றும் Chenab Valley Power Projects Pvt Ltd (CVPPPL) அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்டது.

ரிலையன்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

சிபிஐ பதிவு செய்த இரண்டு எஃப்ஐஆர்களில் ஒன்றில் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் டிரினிட்டி ரீஇன்சூரன்ஸ் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் ஆகியவை குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசு ஊழியர்களும் தனியார் நபர்களும் தங்களுக்கு பணப் பலன்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக குற்றவியல் சதி மற்றும் கிரிமினல் முறைகேடு போன்ற குற்றங்களைச் செய்து அரசின் கருவூலத்திற்கு தவறான இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்பது குற்றச்சாட்டு ஆகும்.

அந்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு குழு மருத்துவக் காப்பீட்டிற்கான டெண்டர்களை அரசாங்கம் நடத்தியது, ஆனால் ஒரே ஒரு ஏலத்தை மட்டுமே பெற்றது. அதன் பிறகு அதன் சார்பாக டெண்டர்களை வெளியிட காப்பீட்டு தரகர் டிரினிட்டியை நியமித்தது.

ரிலையன்ஸ் உட்பட ஏழு காப்பீட்டு நிறுவனங்கள் ஏலம் எடுத்தன, அது இறுதியில் தகுதி பெற்றது. 61 கோடிக்கு மேல் பிரீமியம் தொகையை மாநில நிர்வாகம் வழங்கியது.

மாலிக் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, இந்த விவகாரத்தை மாநில ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் நிதித் துறை ஆய்வு செய்தது.

ஜம்மு காஷ்மீர் ஊழல் தடுப்பு பணியகம் என்ன கண்டுபிடித்தது?

ரிலையன்ஸ் டெண்டரைப் பெறுவது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் ஆய்வு செய்த பிறகு, டெண்டர் செயல்முறையின் நடுவில் தகுதி அளவுகோல் மாற்றப்பட்டது.

இன்சூரன்ஸ் தரகரின் வெளிப்படைத்தன்மையற்ற தேர்வு மற்றும் ரிலையன்ஸ் ஏசிபிக்கு பலன்களை வழங்குவதற்காக செயற்கையாக உயர்த்தப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும்.

நவம்பர் 27, 2021 தேதியிட்ட அறிக்கை, "ஏசிபி மூலம் சரிபார்த்த போது எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை" என்று கூறியது.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து கூடுதல் பிரீமியமாக ரூ.44 கோடியை வசூலிக்க பரிந்துரைத்தது.

ஆனால் நிதித்துறை, பிப்ரவரி 10, 2022 அன்று வெளியிட்ட அறிக்கையில், ஒப்பந்தம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. இ-டெண்டர் செயல்முறை பின்பற்றப்படாதது இதில் அடங்கும்.

முதல் டெண்டருக்கு ஒரே ஒரு பதில் கிடைத்த பிறகு மறு டெண்டருக்கான அளவுகோலில் மாற்றம், டிரினிட்டியுடன் ஏற்கனவே கையெழுத்திட்ட பிறகு ஒப்பந்தத்தில் மாற்றங்கள் மற்றும் ரிலையன்ஸ் உடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு முன் பிரீமியத்தின் முதல் தவணை வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சின்ஹா, மார்ச் 2022 இல், இந்த வழக்கை மேலதிக விசாரணைக்காக சிபிஐக்கு ஒப்படைப்பதாக அறிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment