டெல்லியில் கொரோனா வளர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணம் என்ன?

உதாரணமாக, நேற்று (23 ஜூன்) மட்டும் டெல்லியில் கிட்டத்தட்ட 17,000 மாதிரிகள் சோதிக்கப்பட்டது. ஜூன் 14-ம் தேதி வரை, தினமும் 4,000 - 4,500 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டது.

உதாரணமாக, நேற்று (23 ஜூன்) மட்டும் டெல்லியில் கிட்டத்தட்ட 17,000 மாதிரிகள் சோதிக்கப்பட்டது. ஜூன் 14-ம் தேதி வரை, தினமும் 4,000 - 4,500 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டெல்லியில் கொரோனா வளர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணம் என்ன?

Amitabh Sinha

டெல்லி கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4,000 புதிய வழக்குகளை பதிவு செய்தது. இந்தியாவில் எந்த மாநிலமும் எந்த ஒரு நாளிலும் பதிவு செய்ததை விட அதிகபட்ச எண்ணிக்கையாக இது அமைந்தது. டெல்லியை விட கொரோனா பாதிப்பில் இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையை கொண்ட மகாராஷ்டிராவிலும்  கூட,  ஒரு நாள் பாதிப்புகள் இந்தளவில் இல்லை.

Advertisment

தேசிய கொரோனா தொற்று வளர்ச்சி விகிதத்தை விட டெல்லியின் தொற்று விகிதம் இரு மடங்காக வளர்ந்து வருகிறது. டெல்லியின் மொத்த கொரோனா பாதிப்பு 66,602 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில்  டெல்லி இன்றைக்குள் மும்பையை முந்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மும்பை மாநகராட்சியின் பாதிப்பு எண்ணிக்கை 68,410- ஆக இருந்தாலும், அதன் வளர்ச்சி விகிதம் மெதுவாக உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 842 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

சமீபத்திய நாட்களில் டெல்லியில் கொரோனா மருத்துவ பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டதினால், அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.  பரிசோதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.  உதாரணமாக, நேற்று (23 ஜூன்) மட்டும் டெல்லியில் கிட்டத்தட்ட 17,000 மாதிரிகள் சோதிக்கப்பட்டது. ஜூன் 14-ம் தேதி வரை, தினமும் 4,000 - 4,500 மாதிரிகள் மட்டுமே சேகரிக்கப்பட்டது. அப்போது, டெல்லி ஒவ்வொரு நாளும் 1,500 முதல் 2,000 வரையிலான பாதிப்புகள் தான் தினமும் பதிவு செய்யப்பட்டது.  இதற்கு நேர்மாறாக, மும்பை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை  மிக நீண்ட காலமாக 4,500 என்ற மந்தமான நிலையில் தான் இருந்து வருகிறது.

கொரோனா மருத்துவ பரிசோதனையை அதிகரித்ததால், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை காணும் மாற்றொரு மாநிலமாக தெலுங்கானா உள்ளது.  அந்த மாநிலத்தில்  நீண்ட நாட்களாகவே கொரோனா சோதனையின் எண்ணிக்கை  500 க்கும் குறைவானதாக இருந்து வந்தது. இதனால், அங்கு குறைவான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

Advertisment
Advertisements

ஏன் சோதனையை அதிகரிக்கவில்லை? நிதி ஆதாரம் தான் முக்கிய பிரச்சனையா? மனித உயிர்கள் அவ்வளவு மலிவாகிவிட்டதா? போன்ற கடுமையான வார்த்தைகளை உயர்நீதிமன்றம் முன்வைத்ததையடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்தது. தர்போது, தினமும் 3,000  பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுவதால், ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.   தெலுங்கானாவில் இந்த மாதத்தில் மட்டும் அதன் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. செவ்வாயன்று புதிதாக 879  பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த எண்ணிக்கை 9,553 ஆக அதிகரித்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட முக்கிய மாநிலங்களிடையே ஒப்பிடுகையில் தெலுங்கானா நோய்த் தொற்றின் வளர்ச்சி விகிதம்  (8.5%) மிக வேகமாக உள்ளது

இந்தியாவின் கொரோனா பாதிப்பின் மையமாக அடுத்த சில நாட்களுக்கு டெல்லி, தெலுங்கானா, தமிழ்நாடு  போன்ற மாநிலங்கள் இருக்கப்போகிறது. விரைவான எதிர்பொருள் கண்டறிதல் சோதனை (நியூ ஆன்டிபாடி டெஸ்ட் )  பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி கொடுத்துள்ளதால், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

கோவிட்-19 பரிசோதனைக்கு நிகழ்நேர PCR (RT-PCR) பரிசோதனை நல்ல தரமான முன்னணி சோதனையாக உள்ளது. இருப்பினும், கொரோனா பரிசோதனையை துல்லியம் இழக்காமல் எளிதாக்க மற்றும் அதிகரிக்கும் முயற்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய ரேப்பிட் ஆன்டிஜென் சோதனை (விரைவான எதிர்பொருள் கண்டறிதல் சோதனை - Rapid Antigen Detection Test ) தொடர்பான ஆலோசனையை வழங்கியது.

publive-image

அதன்படி, விரைவான எதிர்பொருள் கண்டறிதல் சோதனையைக் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் கடுமையான மேற்பார்வையுடன் கூடிய மருத்துவமனைகளில் பயன்படுத்தலாம். Standard Q COVID-19 Ag பரிசோதனை உபகரணங்கள் 30 நிமிடங்களில் முடிவைத் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விரைவாக தொற்றைக் கண்டறிய முடியும்.

நிகழ்நேர PCR (RT-PCR) பரிசோதனையை ஒப்பிடுகையில், இந்த வகை சோதனை மிகவும் மலிவானவை.விரிவான ஆய்வக உள்கட்டமைப்பு தேவையில்லை என்பதால் சோதனைக்கு ரூ.  450 மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது.

மும்பை மற்றும் புனே இருவரும் எதிர்வரும் நாட்களில் ஆன்டிஜென் உபகரணங்கள் மூலம் ஒரு லட்சம் மாதிரிகளை பரிசோதிப்பதாகக் கூறியுள்ளனர். மும்பையும் புனேவும் சேர்ந்து  தினமும் 6000 மாதிரிகளை மட்டுமே பரிசோதித்து வந்தன. புதிய ஆன்டிஜென் சோதனைகள் மூலம்  இந்த இரண்டு நகரங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையல் கடுமையான வளர்ச்சி ஏற்படக்கூடும்.

செவ்வாயன்று நாடு முழுவதும் 15,000- க்கும் மேற்பட்ட கொரோனா பதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இருப்பினும், நோய் தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்றைய தேதியில் குணம் அடைந்து வரும் கோவிட்-19 நோயாளிகளின் விகிதம் 56.38 சதவீதமாக உள்ளது. இதுவரை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,48,189 ஆக அதிகரித்து. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 10,994 கோவிட்-19 குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,78,014 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Corona Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: